சிவவாக்கியம் - Sivavakkiyam
சித்தர் பாடல்கள் — ஆசிரியர்: சிவவாக்கியர்
Sittar Pāṭalkaḷ — author: Sivavākkiyar
⚠️ The transliteration column is machine-generated (ISO-15919) from the Tamil text and awaits proofreading.
| Tamil | Transliteration |
|---|---|
| காப்பு | Kāppu |
| அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. 0 |
Ariyatōr namaccivāyam ātiyantam āṉatum Āṟiraṇṭu nūṟutēvar aṉṟuraitta mantiram Curiyatōr eḻuttaiuṉṉic colluvēṉ civavākkiyam Tōṣatōṣa pāvamāyai tūratūra ōṭavē. 0 |
| கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே. 1 |
Kariyatōr mukattaiyotta kaṟpakattaik kaitoḻak Kalaikaḷnūlkaḷ ñāṉamum karuttil vantutikkavē Periyapērkaḷ ciṟiyapērkaḷ kaṟṟuṇarnta pērelām Pēyaṉāki ōtiṭum piḻaipoṟukka vēṇṭumē. 1 |
| அக்ஷர நிலை | Akṣara nilai |
| ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே. 2 |
Āṉaañ ceḻuttuḷē aṇṭamum akaṇṭamum Āṉaañ ceḻuttuḷē ātiyāṉa mūvarum Āṉaañ ceḻuttuḷē akāramum makāramum Āṉaañ ceḻuttuḷē aṭaṅkalāva luṟṟatē. 2 |
| சரியை விலக்கல் | Cariyai vilakkal |
| ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய் வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே. 3 |
Ōṭiōṭi ōṭiōṭi uṭkalanta cōtiyai Nāṭināṭi nāṭināṭi nāṭkaḷum kaḻintupōy Vāṭivāṭi vāṭivāṭi māṇṭupōṉa māntarkaḷ Kōṭikōṭi kōṭikōṭi eṇṇiṟanta kōṭiyē. 3 |
| யோக நிலை | Yōka nilai |
| உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல் விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும் அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே. 4 |
Uruttaritta nāṭiyil oṭuṅkukiṉṟa vāyuvaik Karuttiṉāl iruttiyē kapālam ēṟṟavallīrēl Viruttararum pālarāvīr mēṉiyum civantiṭum Aruḷtaritta nātarpātam ammaipātam uṇmaiyē. 4 |
| தேகநிலை | Tēkanilai |
| வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால் விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல் சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே. [நந்துதல் - இச்சை கொள்ளுதல்; நடுவன் - எமன்] 5 |
Vaṭivukaṇṭu koṇṭapeṇṇai maṟṟoruvaṉ nattiṉāl Viṭuvaṉō avaṉaimuṉṉam veṭṭavēṇum eṉpaṉē Naṭuvaṉvantu aḻaittapōtu nāṟuminta nalluṭal Cuṭalaimaṭṭum koṇṭupōyt tōṭṭikaik koṭuppārē. [Nantutal - iccai koḷḷutal; naṭuvaṉ - emaṉ] 5 |
| ஞான நிலை | Ñāṉa nilai |
| என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின் என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ? என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே. 6 |
Eṉṉilē iruntaoṉṟai yāṉaṟintatu illaiyē Eṉṉilē iruntaoṉṟai yāṉaṟintu koṇṭapiṉ Eṉṉilē iruntaoṉṟai yāvarkāṇa vallarō? Eṉṉilē iruntiruntu yāṉuṇarntu koṇṭaṉē. 6 |
| நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை, நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ? அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே. 7 |
Niṉaippatoṉṟu kaṇṭilēṉ nīyalātu vēṟilai, Niṉaippumāy maṟappumāy niṉṟamāyai māyaiyō? Aṉaittumāy akaṇṭamāy aṉātimuṉ aṉātiyāy Eṉakkuḷnī uṉakkuḷnāṉ irukkumāṟa teṅṅaṉē. 7 |
| மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ; எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ; கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ- நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய். 8 |
Maṇṇumnī avviṇṇumnī maṟikaṭalkaḷ ēḻumnī; Eṇṇumnī eḻuttumnī icaintapaṇ eḻuttumnī; Kaṇṇumnī maṇiyumnī kaṇṇuḷ āṭum pāvainī- Naṇṇumnīrmai niṉṟapātam naṇṇumāṟu aruḷiṭāy. 8 |
| அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம் கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம் பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின் துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே. 9 |
Ariyumalla ayaṉumalla appuṟattil appuṟam Karumaicemmai veṇmaiyaik kaṭantuniṉṟa kāraṇam Periyatalla ciṟiyatalla paṟṟumiṉkaḷ paṟṟumiṉ Turiyamum kaṭantuniṉṟa tūratūra tūramē. 9 |
| அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும் சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம் எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே. 10 |
Antimālai uccimūṉṟum āṭukiṉṟa tīrttamum Cantitarp paṇaṅkaḷum tapaṅkaḷum cepaṅkaḷum Cintaimēvu ñāṉamum tiṉamcepikku mantiram Entairāma rāmarāma rāmaeṉṉum nāmamē. 10 |
| கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம் இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள் சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம் இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே. 11 |
Katāvupañca pātakaṅka ḷaittuṟanta mantiram Itāmitām atallaeṉṟu vaittuḻalum ēḻaikaḷ Catāviṭāmal ōtuvār tamakkunalla mantiram Itāmitām rāmarāma rāmaeṉṉum nāmamē. 11 |
| நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா? கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே! ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம் ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே! 12 |
Nāṉatētu? nīyatētu? naṭuvilniṉṟatu ētaṭā? Kōṉatētu? kuruvatētu? kūṟiṭum kulāmarē! Āṉatētu? aḻivatētu? appuṟattil appuram Īṉatētu? rāmarāma rāmaeṉṟa nāmamē! 12 |
| யோக நிலை | Yōka nilai |
| சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே! வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ? மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லீரேல் சாத்திரப்பைநோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே! 13 |
Cāttiraṅkaḷ ōtukiṉṟa caṭṭanāta paṭṭarē! Vērttuiraippu vantapōtu vētamvantu utavumō? Māttiraippō tummuḷē yaṟintutokka vallīrēl Cāttirappainōykaḷ ētu? cattimutti cittiyē! 13 |
| நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர். பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்! ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே. 14 |
Nāluvētam ōtuvīr, ñāṉapātam aṟikilīr. Pāluḷney kalantavāṟu pāvikāḷ, aṟikilīr! Ālamuṇṭa kaṇṭaṉār akattuḷē irukkavē Kālaṉeṉṟu colluvīr, kaṉavilum aḥtillaiyē. 14 |
| வித்தில்லாத சம்பிரதாயம் மேலும்இல்லை கீழுமில்லை தச்சில்லாது மாளிகை சமைந்தவாறும் அதெங்ஙனே? பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்! சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே. 15 |
Vittillāta campiratāyam mēlumillai kīḻumillai Taccillātu māḷikai camaintavāṟum ateṅṅaṉē? Peṟṟatāyai viṟṟaṭimai koḷḷukiṉṟa pētaikāḷ! Cittillāta pōtucīvaṉ illaiillai illaiyē. 15 |
| அஞ்சும்மூணும் எட்டாதாய் அநாதியான மந்திரம் நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செபிப்பீரேல் பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யினும் பஞ்சுபோல் பறக்கும்என்று நான்மறைகள் பன்னுமே. 16 |
Añcummūṇum eṭṭātāy anātiyāṉa mantiram Neñcilē niṉaintukoṇṭu nīruruc cepippīrēl Pañcamāṉa pātakaṅkaḷ nūṟukōṭi ceyyiṉum Pañcupōl paṟakkumeṉṟu nāṉmaṟaikaḷ paṉṉumē. 16 |
| அண்டவாசல் ஆயிரம் பிரசண்டவாசல் ஆயிரம் ஆறிரண்டு நூறுகோடி யானவாசல் ஆயிரம் இந்தவாசல் ஏழைவாசல் ஏகபோக மானதாய் எம்பிரான் இருக்கும்வாசல் யாவர்காண வல்லரே? 17 |
Aṇṭavācal āyiram piracaṇṭavācal āyiram Āṟiraṇṭu nūṟukōṭi yāṉavācal āyiram Intavācal ēḻaivācal ēkapōka māṉatāy Empirāṉ irukkumvācal yāvarkāṇa vallarē? 17 |
| சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும் சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர் காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின் ஊமையான காயமாய் இருப்பன்எங்கள் ஈசனே! 18 |
Cāmam nālu vētamum cakala cāttiraṅkaḷum Cēmamāka ōtiṉum civaṉai nīr aṟikilīr Kāmanōyai viṭṭunīr karuttuḷē uṇarntapiṉ Ūmaiyāṉa kāyamāy iruppaṉeṅkaḷ īcaṉē! 18 |
| சங்கிரண்டு தாரை ஒன்று சன்னபின்னல் ஆகையால் மங்கிமாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை? சங்கிரண்டை யும்தவிர்த்து தாரை ஊதவல்லீரேல் கொங்கைமங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே. 19 |
Caṅkiraṇṭu tārai oṉṟu caṉṉapiṉṉal ākaiyāl Maṅkimāḷu tēulakil māṉiṭaṅkaḷ ettaṉai? Caṅkiraṇṭai yumtavirttu tārai ūtavallīrēl Koṅkaimaṅkai paṅkarōṭu kūṭivāḻal ākumē. 19 |
| அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள். அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்! அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே! 20 |
Añceḻutti lēpiṟantu avvañceḻutti lēvaḷarntu Añceḻuttai ōtukiṉṟa pañcapūta pāvikāḷ. Añceḻuttil ōreḻuttu aṟintukūṟa vallīrēl! Añcalañcal eṉṟunātaṉ ampalattil āṭumē! 20 |
| அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே! பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்! நெஞ்சில்அஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லீரேல் அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியாகித் தோன்றுமே! 21 |
Añcumañcum añcumē aṉātiyāṉatu añcumē! Piñcupiñcatu allavō pittarkāḷ pitaṟṟuvīr! Neñcilañcu koṇṭunīr niṉṟutokka vallīrēl Añcumillai āṟumillai aṉātiyākit tōṉṟumē! 21 |
| நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர், வாழவேணும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே? காலன்ஓசை வந்தபோது கைகலந்து நின்றிடும் ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே! 22 |
Nīḷavīṭu kaṭṭuṟīr neṭuṅkatavu cāttuṟīr, Vāḻavēṇum eṉṟalō makiḻntirunta māntarē? Kālaṉōcai vantapōtu kaikalantu niṉṟiṭum Ālamuṇṭa kaṇṭarpātam ammaipātam uṇmaiyē! 22 |
| ஓடம்உள்ள போதெல்லாம் நீர் ஓடியே உலாவலாம்; ஓடம்உள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம்; ஓடமும்உடைந்த போதில் ஒப்பிலாத வெளியிலே ஆடும்இல்லை கோலும்இல்லை யாரும்இல்லை ஆனதே! 23 |
Ōṭamuḷḷa pōtellām nīr ōṭiyē ulāvalām; Ōṭamuḷḷa pōtelām uṟutipaṇṇik koḷḷalām; Ōṭamumuṭainta pōtil oppilāta veḷiyilē Āṭumillai kōlumillai yārumillai āṉatē! 23 |
| கிரியை நிலை | Kiriyai nilai |
| வீடெடுத்து வேள்விசெய்து மெய்யனோடு பொய்யுமாய் மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள் நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில் ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாணும் உடலமே! 24 |
Vīṭeṭuttu vēḷviceytu meyyaṉōṭu poyyumāy Māṭumakkaḷ peṇṭircuṟṟam eṉṟirukkum māntarkāḷ Nāṭupeṟṟa naṭuvarkaiyil ōlaivantu aḻaittiṭil Ōṭupeṟṟa avvilai peṟātukāṇum uṭalamē! 24 |
| உற்பத்தி நிலை | Uṟpatti nilai |
| அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே பெண்ணும்ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம் கண்ணிலாணின் சுக்கிலம் கருவில்ஓங்கும் நாளிலே மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே? 25 |
Aṇṇalē aṉātiyē aṉātimuṉ aṉātiyē Peṇṇumāṇum oṉṟalō piṟappataṟku muṉṉelām Kaṇṇilāṇiṉ cukkilam karuvilōṅkum nāḷilē Maṇṇuḷōrum viṇṇuḷōrum vantavāṟu eṅṅaṉē? 25 |
| அறிவு நிலை | Aṟivu nilai |
| பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை? பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை? மிண்டனாய்த் திரிந்தபோது இறைத்தநீர்கள் எத்தனை? மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை? 26 |
Paṇṭunāṉ paṟitteṟinta paṉmalarkaḷ ettaṉai? Pāḻilē cepittuviṭṭa mantiraṅkaḷ ettaṉai? Miṇṭaṉāyt tirintapōtu iṟaittanīrkaḷ ettaṉai? Mīḷavum civālayaṅkaḷ cūḻavantatu ettaṉai? 26 |
| அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துஉணர்ந்த ஞானிகாள் பண்டறிந்த பான்மைதன்னை யார்அறிய வல்லரே? விண்டவேதப் பொருளைஅன்றி வேறு கூற வகையிலாக் கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே. 27 |
Aṇṭarkōṉ iruppiṭam aṟintuuṇarnta ñāṉikāḷ Paṇṭaṟinta pāṉmaitaṉṉai yāraṟiya vallarē? Viṇṭavētap poruḷaiaṉṟi vēṟu kūṟa vakaiyilāk Kaṇṭakōyil teyvameṉṟu kaiyeṭuppa tillaiyē. 27 |
| தூரம்தூரம் தூரம்என்று சொல்லுவார்கள் சோம்பர்கள் பாரும்விண்ணும் எங்குமாய்ப் பரந்தஅப் பராபரம் ஊருநாடு காடுமோடி உழன்றுதேடும் ஊமைகாள்! நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே! 28 |
Tūramtūram tūrameṉṟu colluvārkaḷ cōmparkaḷ Pārumviṇṇum eṅkumāyp parantaap parāparam Ūrunāṭu kāṭumōṭi uḻaṉṟutēṭum ūmaikāḷ! Nēratāka ummuḷē aṟintuṇarntu nillumē! 28 |
| தங்கம்ஒன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல் செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தெம்முளே விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே எங்குமாகி நின்றநாமம் நாமம்இந்த நாமமே! 29 |
Taṅkamoṉṟu rūpamvēṟu taṉmaiyāṉa vāṟupōl Ceṅkaṇmālum īcaṉum ciṟantirunta temmuḷē Viṅkaḷaṅkaḷ pēcuvār viḷaṅkukiṉṟa māntarē Eṅkumāki niṉṟanāmam nāmaminta nāmamē! 29 |
| நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே விருப்பமொடு நீர்குளிக்கும் வேதவாக்கியம் கேளுமின்; நெருப்பும்நீரும் உம்முளே நினைந்துகூற வல்லீரேல் சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமோ! 30 |
Neruppaimūṭṭi neyyaiviṭṭu nittamnittam nīrilē Viruppamoṭu nīrkuḷikkum vētavākkiyam kēḷumiṉ; Neruppumnīrum ummuḷē niṉaintukūṟa vallīrēl Curukkamaṟṟa cōtiyait toṭarntukūṭal ākumō! 30 |
| பாட்டில்லாத பரமனைப் பரமலோக நாதனை நாட்டிலாத நாதனை நாரிமங்கை பாகனை கூட்டிமெள்ள வாய்புதைத்துக் குணுகுணுத்த மந்திரம் வேட்டகாரர் குசுகுசுப்பைக் கூப்பிடா முகிஞ்சதே. 31 |
Pāṭṭillāta paramaṉaip paramalōka nātaṉai Nāṭṭilāta nātaṉai nārimaṅkai pākaṉai Kūṭṭimeḷḷa vāyputaittuk kuṇukuṇutta mantiram Vēṭṭakārar kucukucuppaik kūppiṭā mukiñcatē. 31 |
| குசுகுசுப்பை - சுருக்குப்பை | Kucukucuppai - curukkuppai |
| தரிசனம் | Taricaṉam |
| செய்யதெங்கி லேஇளநீர் சேர்த்தகார ணங்கள்போல் ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டனன். ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின் வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே. 32 |
Ceyyateṅki lēiḷanīr cērttakāra ṇaṅkaḷpōl Aiyaṉvantu eṉṉuḷam pukuntukōyil koṇṭaṉaṉ. Aiyaṉvantu eṉṉuḷam pukuntukōyil koṇṭapiṉ Vaiyakattil māntarmuṉṉam vāytiṟappa tillaiyē. 32 |
| அறிவு நிலை | Aṟivu nilai |
| மாறுபட்டு மணிதுலக்கி வண்டின்எச்சில் கொண்டுபோய் ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே. மாறுபட்ட தேவரும் அறிந்துநோக்கும் என்னையும் கூறுபட்டுத் தீர்க்கவோ குருக்கள்பாதம் வைத்ததே. 33 |
Māṟupaṭṭu maṇitulakki vaṇṭiṉeccil koṇṭupōy Ūṟupaṭṭa kalliṉmītē ūṟṟukiṉṟa mūṭarē. Māṟupaṭṭa tēvarum aṟintunōkkum eṉṉaiyum Kūṟupaṭṭut tīrkkavō kurukkaḷpātam vaittatē. 33 |
| கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா? கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே! கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே! ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே. 34 |
Kōyilāvatu ētaṭā? kuḷaṅkaḷāvatu ētaṭā? Kōyilum kuḷaṅkaḷum kumpiṭum kulāmarē! Kōyilum maṉattuḷē kuḷaṅkaḷum maṉattuḷē! Āvatum aḻivatum illaiillai illaiyē. 34 |
| செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும் செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர் உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின் அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ! 35 |
Ceṅkalum karuṅkalum civantacāti liṅkamum Cempilum tarāvilum civaṉiruppaṉ eṉkiṟīr Ummatam aṟintunīr ummainīr aṟintapiṉ Ampalam niṟaintanātar āṭalpāṭal ākumō! 35 |
| பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள். பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்? ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ? ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே! 36 |
Pūcaipūcai eṉṟunīr pūcaiceyyum pētaikāḷ. Pūcaiyuḷḷa taṉṉilē pūcaikoṇṭatu evviṭam? Ātipūcai koṇṭatō, aṉātipūcai koṇṭatō? Ētupūcai koṇṭatō? iṉṉateṉṟu iyampumē! 36 |
| இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதினும் பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான்இரான் உருக்கிநெஞ்சை உட்கலந்திங்கு உண்மைகூற வல்லீரேல் சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமோ! 37 |
Irukkunālu vētamum eḻuttai aṟavōtiṉum Perukkanīṟu pūciṉum pitaṟṟiṉum pirāṉirāṉ Urukkineñcai uṭkalantiṅku uṇmaikūṟa vallīrēl Curukkamaṟṟa cōtiyait toṭarntu kūṭalākumō! 37 |
| கலத்தின்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால் கலத்திலே கரந்ததோ கடுத்ததீக் குடித்ததோ நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ மனத்தின்மாயை நீக்கியே மனத்துள்ளே கரந்ததோ! 38 |
Kalattiṉvārttu vaittanīr kaṭuttatī muṭukkiṉāl Kalattilē karantatō kaṭuttatīk kuṭittatō Nilattilē karantatō nīḷvicumpu koṇṭatō Maṉattiṉmāyai nīkkiyē maṉattuḷḷē karantatō! 38 |
| பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ? பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ? பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே! 39 |
Paṟaicciyāvatu ētaṭā? paṇattiyāvatu ētaṭā? Iṟaiccitōl elumpiṉum ilakkamiṭṭu irukkutō? Paṟaiccipōkam vēṟatō paṇattipōkam vēṟatō? Paṟaicciyum paṇattiyum pakuttupārum ummuḷē! 39 |
| வாயிலே குடித்தநீரை எச்சில் என்று சொல்கிறீர்; வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ? வாயில்எச்சில் போகஎன்று நீர்தனைக் குடிப்பீர்காள் வாயில்எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே! 40 |
Vāyilē kuṭittanīrai eccil eṉṟu colkiṟīr; Vāyilē kutappuvēta meṉappaṭak kaṭavatō? Vāyileccil pōkaeṉṟu nīrtaṉaik kuṭippīrkāḷ Vāyileccil pōṉavaṇṇam vantiruntu collumē! 40 |
| ஓதுகின்ற வேதம்எச்சில்., உள்ளமந்திரங்கள் எச்சில்; போதகங்க ளானஎச்சில்., பூதலங்கள் ஏழும்எச்சில்; மாதிருந்த விந்துஎச்சில்., மதியும் எச்சில் ஒளியும்எச்சில்; ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே! 41 |
Ōtukiṉṟa vētameccil., uḷḷamantiraṅkaḷ eccil; Pōtakaṅka ḷāṉaeccil., pūtalaṅkaḷ ēḻumeccil; Mātirunta vintueccil., matiyum eccil oḷiyumeccil; Ētileccil illatillai illaiillai illaiyē! 41 |
| பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே? பிறந்துமண் ணிறந்துபோய் இருக்குமாறு தெங்ஙனே? குறித்துநீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே. அறுப்பென செவிஇரண்டும் அஞ்செழுத்து வாளினால். 42 |
Piṟappataṟku muṉṉellām irukkumāṟa teṅṅaṉē? Piṟantumaṇ ṇiṟantupōy irukkumāṟu teṅṅaṉē? Kuṟittunīr colāviṭil kuṟippillāta māntarē. Aṟuppeṉa ceviiraṇṭum añceḻuttu vāḷiṉāl. 42 |
| அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் சங்குமோ? கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ? இன்பமற்ற யோகியை இருளும்வந்து அணுகுமோ? செம்பொன் அம்பலத்துளே தெளிந்த சிவாயமே. 43 |
Ampalattai ampukoṇṭu acaṅkeṉṟāl caṅkumō? Kampamaṟṟa pāṟkaṭal kalaṅkeṉṟāl kalaṅkumō? Iṉpamaṟṟa yōkiyai iruḷumvantu aṇukumō? Cempoṉ ampalattuḷē teḷinta civāyamē. 43 |
| சித்தம்ஏது, சிந்தைஏது சீவன்ஏது! சித்தரே சத்திஏது? சம்புஏது சாதிபேத அற்றது முத்திஏது? மூலம்ஏது மூலமந் திரங்கள்ஏது? வித்தில்லாத வித்திலே இதினெனதென்று இயம்புமே. 44 |
Cittamētu, cintaiētu cīvaṉētu! cittarē Cattiētu? campuētu cātipēta aṟṟatu Muttiētu? mūlamētu mūlaman tiraṅkaḷētu? Vittillāta vittilē itiṉeṉateṉṟu iyampumē. 44 |
| ஒடுக்க நிலை | Oṭukka nilai |
| சித்தமற்றுச் சிந்தையற்றுச் சீவனற்று நின்றிடம் சத்தியற்றுச் சம்புவற்றுச் சாதிபேத மற்றுநல் மூத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும் வித்தைஇத்தை ஈன்றவித்தில் விலைந்ததே சிவாயமே. 45 |
Cittamaṟṟuc cintaiyaṟṟuc cīvaṉaṟṟu niṉṟiṭam Cattiyaṟṟuc campuvaṟṟuc cātipēta maṟṟunal Mūttiyaṟṟu mūlamaṟṟu mūlamanti raṅkaḷum Vittaiittai īṉṟavittil vilaintatē civāyamē. 45 |
| கிரியை | Kiriyai |
| சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெலாம் பூதவாசல் ஒன்றலோ, பூதம்ஐந்தும் ஒன்றலோ? காதில்வாளில், காரை, கம்பி, பாடகம்பொன் ஒன்றலோ? சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ? 46 |
Cātiyāvatu ētaṭā? calamtiraṇṭa nīrelām Pūtavācal oṉṟalō, pūtamaintum oṉṟalō? Kātilvāḷil, kārai, kampi, pāṭakampoṉ oṉṟalō? Cātipētam ōtukiṉṟa taṉmaieṉṉa taṉmaiyō? 46 |
| அறிவு நிலை | Aṟivu nilai |
| கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா; உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா; விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா; இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே. 47 |
Kaṟantapāl mulaippukā, kaṭaintaveṇṇey mōrpukā; Uṭaintupōṉa caṅkiṉōcai uyirkaḷum uṭaṟpukā; Virintapū utirntakāyum mīṇṭupōy marampukā; Iṟantavar piṟappatillai illaiillai illaiyē. 47 |
| அறையினில் கிடந்தபோது அன்றுதூய்மை என்றிலீர், துறைஅறிந்து நீர்குளித்த அன்றுதூமை என்றிலீர், ப்றையறிந்து நீர்பிறந்த அன்றுதூமை என்றிலீர், புரைஇலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே. 48 |
Aṟaiyiṉil kiṭantapōtu aṉṟutūymai eṉṟilīr, Tuṟaiaṟintu nīrkuḷitta aṉṟutūmai eṉṟilīr, Pṟaiyaṟintu nīrpiṟanta aṉṟutūmai eṉṟilīr, Puraiilāta īcarōṭu poruntumāṟatu eṅṅaṉē. 48 |
| தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்! தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்? ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர் தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே. 49 |
Tūmaitūmai eṉṟuḷē tuvaṇṭualaiyum ēḻaikāḷ! Tūmaiyāṉa peṇṇirukkat tūmaipōṉatu evviṭam? Āmaipōla muḻukivantu aṉēkavētam ōtuṟīr Tūmaiyum tiraṇṭuruṇṭu coṟkurukkaḷ āṉatē. 49 |
| சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும் மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும் சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும் செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே. 50 |
Coṟkurukkaḷ āṉatum cōtimēṉi āṉatum Meykkurukkaḷ āṉatum vēṇapūcai ceyvatum Caṟkurukkaḷ āṉatum cāttiraṅkaḷ colvatum Ceykkurukkaḷ āṉatum tiraṇṭuruṇṭa tūmaiyē. 50 |
| கைவடங்கள் கண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்? எவ்விடங்கள் கண்டுநீர் எண்ணிஎண்ணிப் பார்க்கிறீர்? பொய்யுணர்ந்த சிந்தையைப் பொருந்திநோக்க வல்லீரேல் மெய்கடந்து உம்முளே விரைந்து கூறல்ஆகுமே. 51 |
Kaivaṭaṅkaḷ kaṇṭunīr kaṇcimiṭṭi niṟkiṟīr? Evviṭaṅkaḷ kaṇṭunīr eṇṇieṇṇip pārkkiṟīr? Poyyuṇarnta cintaiyaip poruntinōkka vallīrēl Meykaṭantu ummuḷē viraintu kūṟalākumē. 51 |
| ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல் மாடுகாட்டி என்னைநீ மதிமயக்கல் ஆகுமோ, கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா, வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே. 52 |
Āṭukāṭṭi vēṅkaiyai akappaṭuttu māṟupōl Māṭukāṭṭi eṉṉainī matimayakkal ākumō, Kōṭukāṭṭi yāṉaiyaik koṉṟuritta koṟṟavā, Vīṭukāṭṭi eṉṉainī veḷippaṭutta vēṇumē. 52 |
| இடத்ததுன்கண் சந்திரன், வலத்ததுன்கண் சூரியன் இடக்கைசங்கு சக்கரம், வலக்கைசூலம் மான்மழு; எடுத்தபாதம் நீள்முடி, எண்திசைக்கும் அப்புறம், உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே? 53 |
Iṭattatuṉkaṇ cantiraṉ, valattatuṉkaṇ cūriyaṉ Iṭakkaicaṅku cakkaram, valakkaicūlam māṉmaḻu; Eṭuttapātam nīḷmuṭi, eṇticaikkum appuṟam, Uṭalkalantu niṉṟamāyam yāvarkāṇa vallarē? 53 |
| நாழிஅப்பும் நாழிஉப்பும் நாழியான வாறுபோல் ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்திடம் ஏறில்ஆறு ஈசனும் இயங்கு சக்ரதரனையும் வேறுகூறு பேசுவார் வீழ்வர்வீண் நரகிலே. 54 |
Nāḻiappum nāḻiuppum nāḻiyāṉa vāṟupōl Āḻiyōṉum īcaṉum amarntu vāḻntiruntiṭam Ēṟilāṟu īcaṉum iyaṅku cakrataraṉaiyum Vēṟukūṟu pēcuvār vīḻvarvīṇ narakilē. 54 |
| தில்லைநாய கன்அவன்; திருவரங் கனும்அவன்; எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன் பல்லுநாவும் உள்ளபேர் பகுத்துகூறி மகிழுவார்; வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே. 55 |
Tillaināya kaṉavaṉ; tiruvaraṅ kaṉumavaṉ; Ellaiyāṉa puvaṉamum ēkamutti yāṉavaṉ Pallunāvum uḷḷapēr pakuttukūṟi makiḻuvār; Vallapaṅkaḷ pēcuvār vāypuḻuttu māyvarē. 55 |
| எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான் சத்தியான வித்துளே முளைத்தெழும் அச்சுடர் சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின் அத்தன்ஆடல் கண்டபின் அடங்கல்ஆடல் காணுமே. 56 |
Etticaikkum evvuyirkkum eṅkaḷ appaṉ empirāṉ Cattiyāṉa vittuḷē muḷaitteḻum accuṭar Cittamum teḷintuvēta kōyilum tiṟantapiṉ Attaṉāṭal kaṇṭapiṉ aṭaṅkalāṭal kāṇumē. 56 |
| உற்றநூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்; பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்துவீர்; செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருத்திடில் சுற்றமாக உம்முளே சோதிஎன்றும் வாழுமே. 57 |
Uṟṟanūlkaḷ ummuḷē uṇarntuṇarntu pāṭuvīr; Paṟṟaṟuttu niṉṟunīr parāparaṅkaḷ eytuvīr; Ceṟṟamāvai yuḷḷaraic cerukkaṟuttu iruttiṭil Cuṟṟamāka ummuḷē cōtieṉṟum vāḻumē. 57 |
| போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும் தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும் ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம் ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே. 58 |
Pōtatāy eḻuntatum puṉalatāki vantatum Tātatāyp pukuntatum taṇalatāy viḷaintatum Ōtaṭā añcumūṉṟum oṉṟatāṉa akkaram Ōtaṭānī irāmarāma rāmaveṉṉum nāmamē. 58 |
| அகாரம்என்ற அக்கரத்துள் அவ்வுவந்து உதித்ததோ? உகாரம்என்ற அக்கரத்துள் உவ்வுவந்து உதித்ததோ? அகாரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதோ? விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே. 59 |
Akārameṉṟa akkarattuḷ avvuvantu utittatō? Ukārameṉṟa akkarattuḷ uvvuvantu utittatō? Akāramum ukāramum cikāramiṉṟi niṉṟatō? Vikāramaṟṟa yōkikāḷ viritturaikka vēṇumē. 59 |
| அறத்திறங் களுக்கும்நீ, அண்டம்எண் திசைக்கும்நீ, திறத்திறங் களுக்குநீ, தேடுவார்கள் சிந்தைநீ, உறக்கம்நீ, உணர்வுநீ, உட்கலந்த சோதிநீ மறக்கொணாத நின்கழல் மறப்பினும் குடிகொளே. 60 |
Aṟattiṟaṅ kaḷukkumnī, aṇṭameṇ ticaikkumnī, Tiṟattiṟaṅ kaḷukkunī, tēṭuvārkaḷ cintainī, Uṟakkamnī, uṇarvunī, uṭkalanta cōtinī Maṟakkoṇāta niṉkaḻal maṟappiṉum kuṭikoḷē. 60 |
| அண்டம்நீ அகண்டம்நீ, ஆதிமூல மானநீ, கண்டம்நீ, கருத்தும்நீ, காவியங்க ளானநீ, புண்டரீக மற்றுளே உணருகின்ற புண்ணியர், கொண்டகோல மானநேர்மை கூர்மைஎன்ன கூர்மையே. 61 |
Aṇṭamnī akaṇṭamnī, ātimūla māṉanī, Kaṇṭamnī, karuttumnī, kāviyaṅka ḷāṉanī, Puṇṭarīka maṟṟuḷē uṇarukiṉṟa puṇṇiyar, Koṇṭakōla māṉanērmai kūrmaieṉṉa kūrmaiyē. 61 |
| மைஅடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே ஐயிறந்து கொண்டுநீங்கள் அல்லல்அற்று இருப்பீர்கள் மெய்அறிந்த சிந்தையால் விளங்குஞானம் எய்தினால் உய்யறிந்து கொண்டுநீங்கள் ஊழிகாலம் வாழ்வீரே. 62 |
Maiaṭarnta kaṇṇiṉār mayakkiṭum mayakkilē Aiyiṟantu koṇṭunīṅkaḷ allalaṟṟu iruppīrkaḷ Meyaṟinta cintaiyāl viḷaṅkuñāṉam eytiṉāl Uyyaṟintu koṇṭunīṅkaḷ ūḻikālam vāḻvīrē. 62 |
| கருவிருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள் குருவிருந்து சொன்னவார்த்தை குறித்துநோக்க வல்லீரேல் உருவிலங்கு மேனியாகி உம்பராகி நின்றுநீர் திருவிளங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே! 63 |
Karuvirunta vācalāl kalaṅkukiṉṟa ūmaikāḷ Kuruviruntu coṉṉavārttai kuṟittunōkka vallīrēl Uruvilaṅku mēṉiyāki umparāki niṉṟunīr Tiruviḷaṅku mēṉiyākac ceṉṟukūṭal ākumē! 63 |
| தீர்த்தம்ஆட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள், தீர்த்தம்ஆடல் எவ்விடம் தெளிந்துநீர் இயம்புவீர்? தீர்த்தமாக உம்முளே தெளிந்துநீர் இருந்தபின் தீர்த்தமாக உள்ளதும் சிவாயஅஞ் செழுத்துமே! 64 |
Tīrttamāṭa vēṇumeṉṟu tēṭukiṉṟa tīṉarkāḷ, Tīrttamāṭal evviṭam teḷintunīr iyampuvīr? Tīrttamāka ummuḷē teḷintunīr iruntapiṉ Tīrttamāka uḷḷatum civāyaañ ceḻuttumē! 64 |
| கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர் பழுத்துவாய் விழிந்துபோன பாவம் என்னபாவமே? அழுத்தமான வித்திலே அனாதியான இருப்பதோர் எழுத்திலா எனழுத்திலோ இருக்கலாம் இருந்துமே. 65 |
Kaḻuttaiyum nimirttinalla kaṇṇaiyum viḻittunīr Paḻuttuvāy viḻintupōṉa pāvam eṉṉapāvamē? Aḻuttamāṉa vittilē aṉātiyāṉa iruppatōr Eḻuttilā eṉaḻuttilō irukkalām iruntumē. 65 |
| கண்டுநின்ற மாயையும் கலந்துநின்ற பூதமும் உண்டுறங்கு மாறுநீர் உணர்ந்திருக்க வல்லீரேல் பண்டைஆறும் ஒன்றுமாய்ப் பயந்தவேத சுத்தனாய் அண்டமுத்தி ஆகிநின்ற ஆதிமூலம் மூலமே! 66 |
Kaṇṭuniṉṟa māyaiyum kalantuniṉṟa pūtamum Uṇṭuṟaṅku māṟunīr uṇarntirukka vallīrēl Paṇṭaiāṟum oṉṟumāyp payantavēta cuttaṉāy Aṇṭamutti ākiniṉṟa ātimūlam mūlamē! 66 |
| ஈன்றவாச லுக்குஇரங்கி எண்ணிறந்து போவீர்காள்! கான்றவாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர் நான்றவாச லைத்திறந்து நாடிநோக்க வல்லீரேல், தோன்றுமாயை விட்டொழிந்து சோதிவந்து தோன்றுமே. 67 |
Īṉṟavāca lukkuiraṅki eṇṇiṟantu pōvīrkāḷ! Kāṉṟavāḻai moṭṭalarnta kāraṇam aṟikilīr Nāṉṟavāca laittiṟantu nāṭinōkka vallīrēl, Tōṉṟumāyai viṭṭoḻintu cōtivantu tōṉṟumē. 67 |
| உழலும்வாச லுக்குஇரங்கி ஊசலாடும் ஊமைகாள்? உழலும்வாச லைத்திறந்து உண்மைசேர எண்ணிலீர்? உழலும்வாச லைத்திறந்து உண்மைநீர் உணர்ந்தபின் உழலும்வாசல் உள்ளிருந்த உண்மைதானும் ஆவிரே. 68 |
Uḻalumvāca lukkuiraṅki ūcalāṭum ūmaikāḷ? Uḻalumvāca laittiṟantu uṇmaicēra eṇṇilīr? Uḻalumvāca laittiṟantu uṇmainīr uṇarntapiṉ Uḻalumvācal uḷḷirunta uṇmaitāṉum āvirē. 68 |
| மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின் பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்; ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே. 69 |
Mūlanāṭi taṉṉilē muḷaitteḻunta cōtiyai Nālunāḻi ummuḷē nāṭiyē iruntapiṉ Pālaṉāki vāḻalām parappiramam ākalām; Ālamuṇṭa kaṇṭarāṇai ammaiāṇai uṇmaiyē. 69 |
| இருக்கவேணும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ? மரிக்கவேணும் என்றலோ மண்ணுளே படைத்தனர்? சுருக்கமற்ற தம்பிரான் சொன்னஅஞ் செழுத்தையும் மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதம்கெடீர். 70 |
Irukkavēṇum eṉṟapōtu iruttalāy irukkumō? Marikkavēṇum eṉṟalō maṇṇuḷē paṭaittaṉar? Curukkamaṟṟa tampirāṉ coṉṉaañ ceḻuttaiyum Marikkumuṉ vaṇaṅkiṭīr marunteṉap patamkeṭīr. 70 |
| அம்பத்தொன்று என அடங்கலோர் எழுத்துளோ? விண்பரந்த மந்திரம் வேதம்நான்கும் ஒன்றலோ விண்பரந்த மூலஅஞ் செழுத்துளே முளைத்ததே அங்கலிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே. 71 |
Ampattoṉṟu eṉa aṭaṅkalōr eḻuttuḷō? Viṇparanta mantiram vētamnāṉkum oṉṟalō Viṇparanta mūlaañ ceḻuttuḷē muḷaittatē Aṅkaliṅka pīṭamāy amarntatē civāyamē. 71 |
| சிவாயம்என்ற அட்சரம் சிவன்இருக்கும் அட்சரம் உபாயம்என்று நம்புதற்கு உண்மையான அட்சரம் கபாடமற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை உபாயம்இட்டு அழைக்குமே சிவாயஅஞ் செழுத்துமே. 72 |
Civāyameṉṟa aṭcaram civaṉirukkum aṭcaram Upāyameṉṟu namputaṟku uṇmaiyāṉa aṭcaram Kapāṭamaṟṟa vācalaik kaṭantupōṉa vāyuvai Upāyamiṭṭu aḻaikkumē civāyaañ ceḻuttumē. 72 |
| உருவம்அல்ல, வெளியும்அல்ல, ஒன்றைமேவி நின்றதல்ல மருவும்வாசல் சொந்தம்அல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசலான தானும்அல்ல அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே? 73 |
Uruvamalla, veḷiyumalla, oṉṟaimēvi niṉṟatalla Maruvumvācal contamalla maṟṟatalla aṟṟatalla Periyatalla ciṟiyatalla pēcalāṉa tāṉumalla Ariyatāki niṉṟanērmai yāvarkāṇa vallarē? 73 |
| ஆத்துமா அனாதியோ? அனாத்துமா அனாதியோ? பூத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ? தர்க்கமிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ? வீக்கவந்த யோகிகாள்? விரைந்துரைக்க வேணுமே! 74 |
Āttumā aṉātiyō? aṉāttumā aṉātiyō? Pūttirunta aimpoṟi pulaṉkaḷum aṉātiyō? Tarkkamikka nūlkaḷum catācivamum aṉātiyō? Vīkkavanta yōkikāḷ? virainturaikka vēṇumē! 74 |
| அறிவிலே புறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்; நெறியிலே மயங்குகின்ற நேர்மைஒன்று அரிகிலீர்; உறியிலே தயிர்இருக்க ஊர்புகுந்து வெண்ணெய்தேடும் அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே? 75 |
Aṟivilē puṟantirunta ākamaṅkaḷ ōtuṟīr; Neṟiyilē mayaṅkukiṉṟa nērmaioṉṟu arikilīr; Uṟiyilē tayirirukka ūrpukuntu veṇṇeytēṭum Aṟivilāta māntarōṭu aṇukumāṟatu eṅṅaṉē? 75 |
| அன்பு நிலை | Aṉpu nilai |
| இருவர்அரங்க மும்பொருந்தி என்புருகி நோக்கிலீர்; உருவரங்கம் ஆகிநின்ற உண்மைஒன்றை ஓர்கிலீர்; கருஅரங்கம் ஆகிநின்ற கற்பனை கடந்துபின் திருஅரங்கம் என்றுநீர் தெளிந்திருக்க வல்லீரே! 76 |
Iruvararaṅka mumporunti eṉpuruki nōkkilīr; Uruvaraṅkam ākiniṉṟa uṇmaioṉṟai ōrkilīr; Karuaraṅkam ākiniṉṟa kaṟpaṉai kaṭantupiṉ Tiruaraṅkam eṉṟunīr teḷintirukka vallīrē! 76 |
| கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர் குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள் திருத்திருத்தி மெய்யினால் சிவந்தஅஞ் செழுத்தையும் உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே. 77 |
Karukkuḻiyil ācaiyāyk kātaluṟṟu niṟkiṟīr Kurukkiṭukkum ēḻaikāḷ kulāvukiṉṟa pāvikāḷ Tiruttirutti meyyiṉāl civantaañ ceḻuttaiyum Urukkaḻikkum ummaiyum uṇarntuṇarntu koḷḷumē. 77 |
| மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும் எண்ணிலாத கோடிதேவர் என்னதுஉன்னது என்னவும் கண்ணிலேகண் மணிஇருக்கக் கண்மறைத்த வாறுபோல் எண்ணில்கோடி தேவரும் இதன்கணால் விழிப்பதே. 78 |
Maṇṇilē piṟakkavum vaḻakkalātu uraikkavum Eṇṇilāta kōṭitēvar eṉṉatuuṉṉatu eṉṉavum Kaṇṇilēkaṇ maṇiirukkak kaṇmaṟaitta vāṟupōl Eṇṇilkōṭi tēvarum itaṉkaṇāl viḻippatē. 78 |
| அறிவு நிலை | Aṟivu nilai |
| மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார் வெங்கலம் கவிழ்ந்தபோது வேணும்என்று பேணுவார்; நம்கலம் கவிழ்ந்தபோது நாறும்என்று போடுவார் எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே. 79 |
Maṇkalam kaviḻntapōtu vaittuvaittu aṭukkuvār Veṅkalam kaviḻntapōtu vēṇumeṉṟu pēṇuvār; Namkalam kaviḻntapōtu nāṟumeṉṟu pōṭuvār Eṇkalantu niṉṟamāyam eṉṉamāyam īcaṉē. 79 |
| மிக்கசெல்வம் நீபடைத்த விறகுமேவிப் பாவிகாள் விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர் மக்கள்பெண்டீர் சுற்றம்என்று மாயைகாணும் இவையெலாம் மறலிவந்து அழைத்தபோது வந்துகூடலாகுமோ? 80 |
Mikkacelvam nīpaṭaitta viṟakumēvip pāvikāḷ Viṟakuṭaṉ koḷuttimēṉi ventupōvatu aṟikilīr Makkaḷpeṇṭīr cuṟṟameṉṟu māyaikāṇum ivaiyelām Maṟalivantu aḻaittapōtu vantukūṭalākumō? 80 |
| விறகு - கர்வம் | Viṟaku - karvam |
| ஒக்கவந்து மாதுடன் செறிந்திடத்தில் அழகியே ஒருவராகி இருவராகி இளமைபெற்ற ஊரிலே அக்கணிந்து கொன்றைசூடி அம்பலத்தில் ஆடுவார் அஞ்செழுத்தை ஓதிடில் அனேகபாவம் அகலுமே. 81 |
Okkavantu mātuṭaṉ ceṟintiṭattil aḻakiyē Oruvarāki iruvarāki iḷamaipeṟṟa ūrilē Akkaṇintu koṉṟaicūṭi ampalattil āṭuvār Añceḻuttai ōtiṭil aṉēkapāvam akalumē. 81 |
| மாடுகன்று செல்வமும் மனைவிமைந்தர் மகிழவே மாடமாளி கைப்புறத்தில் வாழுகின்ற நாளிலே ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே உடல்கிடந்து உயிர்கழன்ற உண்மைகண்டும் உணர்கிலீர்! 82 |
Māṭukaṉṟu celvamum maṉaivimaintar makiḻavē Māṭamāḷi kaippuṟattil vāḻukiṉṟa nāḷilē Ōṭivantu kālatūtar caṭutiyāka mōtavē Uṭalkiṭantu uyirkaḻaṉṟa uṇmaikaṇṭum uṇarkilīr! 82 |
| பாடுகின்ற உம்பருக்குள் ஆடுபாதம் உன்னியே பழுதிலாத கன்மகூட்டம் இட்டஎங்கள் பரமனே நீடுசெம்பொன் அம்பலத்துள் ஆடுகொண்ட அப்பனே, நீலகண்ட காலகண்ட நித்தியகல் யாணனே. 83 |
Pāṭukiṉṟa umparukkuḷ āṭupātam uṉṉiyē Paḻutilāta kaṉmakūṭṭam iṭṭaeṅkaḷ paramaṉē Nīṭucempoṉ ampalattuḷ āṭukoṇṭa appaṉē, Nīlakaṇṭa kālakaṇṭa nittiyakal yāṇaṉē. 83 |
| கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல் ஞானம்உற்ற நெஞ்சகத்தில் நல்லதேதும் இல்லையே; ஊனமற்ற சோதியோடு உணர்வுசேர்ந்து அடக்கினால் தேன்அகத்தின் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே. 84 |
Kāṉamaṟṟa kāṭṭakattil venteḻunta nīṟupōl Ñāṉamuṟṟa neñcakattil nallatētum illaiyē; Ūṉamaṟṟa cōtiyōṭu uṇarvucērntu aṭakkiṉāl Tēṉakattiṉ ūṟalpōl teḷintatē civāyamē. 84 |
| பருகிஓடி உம்முளே பறந்துவந்த வெளிதனை நிருவியே நினைந்துபார்க்கில் நின்மனம் அதாகுமே. உருகிஓடி எங்குமாய் ஓடும்சோதி தன்னுளே கருதுவீர் உமக்குநல்ல காரணம் அதாகுமே. 85 |
Parukiōṭi ummuḷē paṟantuvanta veḷitaṉai Niruviyē niṉaintupārkkil niṉmaṉam atākumē. Urukiōṭi eṅkumāy ōṭumcōti taṉṉuḷē Karutuvīr umakkunalla kāraṇam atākumē. 85 |
| சோதியாகி ஆகிநின்ற சுத்தமும் பலித்துவந்து போதியாத போதகத்தை ஓதுகின்ற பூரணா, வீதியாக ஓடிவந்து விண்ணடியின் ஊடுபோய் ஆதிநாதன் தன் நாதன்என்று அனந்தகாலம் உள்ளதே 86 |
Cōtiyāki ākiniṉṟa cuttamum palittuvantu Pōtiyāta pōtakattai ōtukiṉṟa pūraṇā, Vītiyāka ōṭivantu viṇṇaṭiyiṉ ūṭupōy Ātinātaṉ taṉ nātaṉeṉṟu aṉantakālam uḷḷatē 86 |
| இறைவனால் எடுத்தமாடத் தில்லையம் பலத்திலே அறிவினால் அடுத்தகாயம் அஞ்சினால் அமைந்ததே. கருவிநாதம் உண்டுபோய்க் கழன்றவாசல் ஒன்பதும் ஒருவராய் ஒருவர்கோடி உள்ளுளே அமர்ந்ததே. 87 |
Iṟaivaṉāl eṭuttamāṭat tillaiyam palattilē Aṟiviṉāl aṭuttakāyam añciṉāl amaintatē. Karuvinātam uṇṭupōyk kaḻaṉṟavācal oṉpatum Oruvarāy oruvarkōṭi uḷḷuḷē amarntatē. 87 |
| நெஞ்சிலே இருந்திருந்து நெருக்கிஓடும் வாயுவை அன்பினால் இருந்துநீர் அருகிருத்த வல்லீரேல் அன்பர்கோயில் காணலாம் அகலும்எண் திசைக்குளே தும்பிஓடி ஓடியே சொல்லடா சுவாமியே! 88 |
Neñcilē iruntiruntu nerukkiōṭum vāyuvai Aṉpiṉāl iruntunīr arukirutta vallīrēl Aṉparkōyil kāṇalām akalumeṇ ticaikkuḷē Tumpiōṭi ōṭiyē collaṭā cuvāmiyē! 88 |
| தில்லையை வணங்கிநின்ற தெண்டனிட்ட வாயுவே எல்லையைக் கடந்துநின்ற ஏகபோக மாய்கையே எல்லையைக் கடந்துநின்ற சொர்க்கலோக வெளியிலே வெள்ளையும் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே. 89 |
Tillaiyai vaṇaṅkiniṉṟa teṇṭaṉiṭṭa vāyuvē Ellaiyaik kaṭantuniṉṟa ēkapōka māykaiyē Ellaiyaik kaṭantuniṉṟa corkkalōka veḷiyilē Veḷḷaiyum civappumāki meykalantu niṉṟatē. 89 |
| உடம்புஉயிர் எடுத்ததோ, உயிர்உடம்பு எடுத்ததோ உடம்புஉயிர் எடுத்தபோது உருவம்ஏது செப்புவீர் உடம்புஉயிர் இறந்தபோது உயிர்இறப்பது இல்லையே உடம்புமெய் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே. 90 |
Uṭampuuyir eṭuttatō, uyiruṭampu eṭuttatō Uṭampuuyir eṭuttapōtu uruvamētu ceppuvīr Uṭampuuyir iṟantapōtu uyiriṟappatu illaiyē Uṭampumey maṟantukaṇṭu uṇarntuñāṉam ōtumē. 90 |
| அவ்வெனும் எழுத்தினால் அகண்டம்ஏழு ஆக்கினாய்; உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை; மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்; அவ்வும்உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே! 91 |
Avveṉum eḻuttiṉāl akaṇṭamēḻu ākkiṉāy; Uvveṉum eḻuttiṉāl uruttarittu niṉṟaṉai; Mavveṉum eḻuttiṉāl mayaṅkiṉārkaḷ vaiyakam; Avvumuvvum mavvumāy amarntatē civāyamē! 91 |
| மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடீர்! மந்திரங்கள் ஆவதும் மறத்தில்ஊறல் அன்றுகாண்; மந்திரங்கள் ஆவது மதத்தெழுந்த வாயுவை; மந்திரத்தை உண்டவர்க்கு மரணம்ஏதும் இல்லையே! 92 |
Mantiraṅkaḷ uṇṭunīr mayaṅkukiṉṟa māṉiṭīr! Mantiraṅkaḷ āvatum maṟattilūṟal aṉṟukāṇ; Mantiraṅkaḷ āvatu matatteḻunta vāyuvai; Mantirattai uṇṭavarkku maraṇamētum illaiyē! 92 |
| என்னஎன்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை? பன்னுகின்ற செந்தமிழ்ப் பதம்கடந்த பண்பென மின்னகத்தில் மின்ஒடுங்கி மின்னதான வாறுபோல் என்னகத்துள் ஈசனும் யானும்அல்லது இல்லையே! 93 |
Eṉṉaeṉṟu colluvēṉ ilakkaṇam ilātatai? Paṉṉukiṉṟa centamiḻp patamkaṭanta paṇpeṉa Miṉṉakattil miṉoṭuṅki miṉṉatāṉa vāṟupōl Eṉṉakattuḷ īcaṉum yāṉumallatu illaiyē! 93 |
| ஆலவித்தில் ஆல்ஒடுங்கி ஆலமான வாறுபோல் வேறுவித்தும் இன்றியே விளைந்துபோகம் எய்திடீர்! ஆறுவித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்தரே! பாரும்இத்தை உம்முளே பரப்பிரமம் ஆனதே! 94 |
Ālavittil āloṭuṅki ālamāṉa vāṟupōl Vēṟuvittum iṉṟiyē viḷaintupōkam eytiṭīr! Āṟuvittai ōrkilīr aṟivilāta māntarē! Pārumittai ummuḷē parappiramam āṉatē! 94 |
| அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய் எவ்வெழுத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பது இங்கிலை? சவ்வுதித்த மந்திரத்தைத் தற்பரத்து இருத்தினால் அவ்வும்உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே. 95 |
Avvutitta mantiram akāramāy ukāramāy Evveḻuttu aṟintavarkku eḻupiṟappatu iṅkilai? Cavvutitta mantirattait taṟparattu iruttiṉāl Avvumuvvum mavvumāy amarntatē civāyamē. 95 |
| தற்பரம் - சுழிமுனை தானம் | Taṟparam - cuḻimuṉai tāṉam |
| நவ்விரண்டு காலதாய், நவின்றமவ் வயிறதாய்ச் சிவ்விரண்டு தோளதாய்ச் சிறந்தவவ்வு வாயதாய் யவ்விரண்டு கண்ணதாய் அழுர்ந்துநின்ற நேர்மையில் செவ்வைஒத்து நின்றதே சிவாயஅஞ் செழுத்துமே. 96 |
Navviraṇṭu kālatāy, naviṉṟamav vayiṟatāyc Civviraṇṭu tōḷatāyc ciṟantavavvu vāyatāy Yavviraṇṭu kaṇṇatāy aḻurntuniṉṟa nērmaiyil Cevvaiottu niṉṟatē civāyaañ ceḻuttumē. 96 |
| இரண்டுமொன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே சுருண்டுமூன்று வளையமாய் சுணங்குபோல் கிடந்தநீ முரண்டெழுந்த சங்கின்ஓசை மூலநாடி ஊடுபோய் அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே! 97 |
Iraṇṭumoṉṟu mūlamāy iyaṅku cakkarattuḷē Curuṇṭumūṉṟu vaḷaiyamāy cuṇaṅkupōl kiṭantanī Muraṇṭeḻunta caṅkiṉōcai mūlanāṭi ūṭupōy Araṅkaṉ paṭṭaṇattilē amarntatē civāyamē! 97 |
| கடலிலே திரியும் ஆமை கரையிலேறி முட்டையிட்டுக் கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல் மடலுளே இருக்கும்எங்கள் மணியரங்க சோதியை உடலுளே நினைந்துநல்ல உண்மையானது உண்மையே! 98 |
Kaṭalilē tiriyum āmai karaiyilēṟi muṭṭaiyiṭṭuk Kaṭalilē tirintapōtu rūpamāṉa vāṟupōl Maṭaluḷē irukkumeṅkaḷ maṇiyaraṅka cōtiyai Uṭaluḷē niṉaintunalla uṇmaiyāṉatu uṇmaiyē! 98 |
| மூன்றுமண்ட லத்தினும் முட்டிநின்ற தூணிலும் நான்றபாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்; ஈன்றதாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்; தோன்றும்ஓர் எழுத்துளே சொல்லஎங்கும் இல்லையே! 99 |
Mūṉṟumaṇṭa lattiṉum muṭṭiniṉṟa tūṇilum Nāṉṟapāmpiṉ vāyilum naviṉṟeḻunta aṭcaram; Īṉṟatāyum appaṉum eṭutturaitta mantiram; Tōṉṟumōr eḻuttuḷē collaeṅkum illaiyē! 99 |
| மூன்றுமூன்று மூன்றுமே மூவர்தேவர் தேடிடும் மூன்றும்அஞ் செழுத்துமாய் முழங்கும் அவ்வெழுத்துளே ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும் தோன்றும்மண்டலத்திலே சொல்லஎங்கும் இல்லையே! 100 |
Mūṉṟumūṉṟu mūṉṟumē mūvartēvar tēṭiṭum Mūṉṟumañ ceḻuttumāy muḻaṅkum avveḻuttuḷē Īṉṟatāyum appaṉum iyaṅkukiṉṟa nātamum Tōṉṟummaṇṭalattilē collaeṅkum illaiyē! 100 |
| சோறுகின்ற பூதம்போல சுணங்குபோல் கிடந்தநீர் நாறுகின்ற கும்பியில் நயந்தெழுந்த மூடரே, சீறுகின்ற ஐவரைச் சிணுக்கறுக்க வல்லீரேல் ஆறுகோடி வேணியார் ஆறில்ஒன்றில் ஆவிரே! 101 |
Cōṟukiṉṟa pūtampōla cuṇaṅkupōl kiṭantanīr Nāṟukiṉṟa kumpiyil nayanteḻunta mūṭarē, Cīṟukiṉṟa aivaraic ciṇukkaṟukka vallīrēl Āṟukōṭi vēṇiyār āṟiloṉṟil āvirē! 101 |
| வட்டமென்று உம்முளே மயக்கிவிட்ட திவ்வெளி அட்டவக் கரத்துளே அடக்கமும் ஒடுக்கமும் எட்டும்எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே எட்டலாம் உதித்தது எம்பிரானைநாம் அறிந்தபின். 102 |
Vaṭṭameṉṟu ummuḷē mayakkiviṭṭa tivveḷi Aṭṭavak karattuḷē aṭakkamum oṭukkamum Eṭṭumeṭṭum eṭṭumāy iyaṅku cakkarattuḷē Eṭṭalām utittatu empirāṉainām aṟintapiṉ. 102 |
| பேசுவானும் ஈசனே, பிரமஞானம் உம்முளே; ஆசையான ஐவரும் அலைந்தருள் செய்கிறார்; ஆசையானா ஐவரே அடக்கிஓர் எழுத்திலே பேசிடாது இருப்பிரேல் நாதன்வந்து பேசுமே. 103 |
Pēcuvāṉum īcaṉē, piramañāṉam ummuḷē; Ācaiyāṉa aivarum alaintaruḷ ceykiṟār; Ācaiyāṉā aivarē aṭakkiōr eḻuttilē Pēciṭātu iruppirēl nātaṉvantu pēcumē. 103 |
| நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும் நமசிவாய அஞ்சில்அஞ்சும் புராணமான மாயையும் நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே! நமசிவாய உண்மையை நன்குஉரைசெய் நாதனே! 104 |
Namacivāya añceḻuttum nalkumēl nilaikaḷum Namacivāya añcilañcum purāṇamāṉa māyaiyum Namacivāya añceḻuttu nammuḷē irukkavē! Namacivāya uṇmaiyai naṉkuuraicey nātaṉē! 104 |
| பரம்உனக்கு எனக்குவேறு பயம்இலை பராபரா! கரம்எடுத்து நிற்றலும் குவித்திடக் கடவதும் சிரம்உருகி அமுதளித்த சீருலாவு நாதனே; உரம்எனக்கு நீ அளித்த ஓம்நமசி வாயவே! 105 |
Paramuṉakku eṉakkuvēṟu payamilai parāparā! Karameṭuttu niṟṟalum kuvittiṭak kaṭavatum Ciramuruki amutaḷitta cīrulāvu nātaṉē; Urameṉakku nī aḷitta ōmnamaci vāyavē! 105 |
| பச்சைமண் பதுப்பிலே பழுப்பதிந்த வேட்டுவன் நிச்சலும் நினைந்திட நினைத்தவண்ணம் ஆயிடும்; பச்சைமண் இடிந்துபோய் பறந்ததும்பி ஆயிடும் பிச்சர்காள் அறிந்துகொள்க பிரான்இயற்று கோலமே. 106 |
Paccaimaṇ patuppilē paḻuppatinta vēṭṭuvaṉ Niccalum niṉaintiṭa niṉaittavaṇṇam āyiṭum; Paccaimaṇ iṭintupōy paṟantatumpi āyiṭum Piccarkāḷ aṟintukoḷka pirāṉiyaṟṟu kōlamē. 106 |
| ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம் வெளியதான சோதிமேனி விஸ்வநாத னானவன் தெளியுமங்கை உடன்இருந்து செப்புகின்ற தாரகம் எளியதோர் இராமராம ராமமிர்த நாமமே. 107 |
Oḷiyatāṉa kācimītu vantutaṅku vōrkkelām Veḷiyatāṉa cōtimēṉi visvanāta ṉāṉavaṉ Teḷiyumaṅkai uṭaṉiruntu ceppukiṉṟa tārakam Eḷiyatōr irāmarāma rāmamirta nāmamē. 107 |
| விழியினோடு புனல்விளைந்த வில்லவல்லி யோனியும் வெளியிலே பிதற்றலாம் விளைவுநின்றது இல்லையே வெளிபரந்த தேசமும் வெளிக்குள்மூல வித்தையும் தெளியும் வல்லஞானிகள் தெளிந்திருத்தல் திண்ணமே. 108 |
Viḻiyiṉōṭu puṉalviḷainta villavalli yōṉiyum Veḷiyilē pitaṟṟalām viḷaivuniṉṟatu illaiyē Veḷiparanta tēcamum veḷikkuḷmūla vittaiyum Teḷiyum vallañāṉikaḷ teḷintiruttal tiṇṇamē. 108 |
| ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின் ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின் ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின் ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே! 109 |
Ōmnamaci vāyamē uṇarntumey uṇarntapiṉ Ōmnamaci vāyamē uṇarntumey teḷintapiṉ Ōmnamaci vāyamē uṇarntumey uṇarntapiṉ Ōmnamaci vāyamē uṭkalantu niṟkumē! 109 |
| அல்லல்வாசல் ஒன்பதும் அருத்தடைந்த வாசலும் சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றதும் நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய் எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே. 110 |
Allalvācal oṉpatum aruttaṭainta vācalum Collumvācal ōr aintum commivimmi niṉṟatum Nallavāca laittiṟantu ñāṉavācal ūṭupōy Ellaivācal kaṇṭavar iṉippiṟappatu illaiyē. 110 |
| ஆதியானது ஒன்றுமே அநேக்அநேக ரூபமாய் சாதிபேத மாய்எழுந்து சர்வசீவன் ஆனபின் ஆதியோடு இருந்துமீண்டு எழுந்துசென்மம் ஆனபின் சோதியான ஞானியாகிச் சுத்தமாய் இருப்பனே. 111 |
Ātiyāṉatu oṉṟumē anēkanēka rūpamāy Cātipēta māyeḻuntu carvacīvaṉ āṉapiṉ Ātiyōṭu iruntumīṇṭu eḻuntuceṉmam āṉapiṉ Cōtiyāṉa ñāṉiyākic cuttamāy iruppaṉē. 111 |
| மலர்ந்ததாது மூலம்மாய் இவ்வையகம் மலர்ந்ததும் மலர்ந்தபூ மயக்கம்வந்து அருத்ததும் விடுத்ததும் புலன்கள்ஐந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும் இலங்கலங்கி நின்றமாயம் என்னமாயம் ஈசனே. 112 |
Malarntatātu mūlammāy ivvaiyakam malarntatum Malarntapū mayakkamvantu aruttatum viṭuttatum Pulaṉkaḷaintum poṟikalaṅki pūmimēl viḻuntatum Ilaṅkalaṅki niṉṟamāyam eṉṉamāyam īcaṉē. 112 |
| பாரடங்க உள்ளதும் பரந்தவானம் உள்ளதும் ஓரிடமும் இன்றியே ஒன்றிநின்ற ஒண்சுடர் ஆரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும் சீரிடங்கள் கண்டவன் சிவன்தெரிந்து ஞானியே! 113 |
Pāraṭaṅka uḷḷatum parantavāṉam uḷḷatum Ōriṭamum iṉṟiyē oṉṟiniṉṟa oṇcuṭar Āriṭamum iṉṟiyē akattuḷum puṟattuḷum Cīriṭaṅkaḷ kaṇṭavaṉ civaṉterintu ñāṉiyē! 113 |
| மண்கிடார மேசுமந்து மலையுள்ஏறி மறுகுறீர், எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர், தம்பிரானை நாள்தோறும் தரையிலே தலைபடக் கும்பிடாத மாந்தரோடு கூடிவாழ்வது எங்ஙனே? 114 |
Maṇkiṭāra mēcumantu malaiyuḷēṟi maṟukuṟīr, Eṇpaṭāta kāriyaṅkaḷ iyalum eṉṟu kūṟukiṟīr, Tampirāṉai nāḷtōṟum taraiyilē talaipaṭak Kumpiṭāta māntarōṭu kūṭivāḻvatu eṅṅaṉē? 114 |
| நாவில்நூல் அழிந்ததும் நலம்குலம் அழிந்ததும் மேவுதேர் அழிந்ததும் விசாரம் குறைந்ததும் பாவிகாள் இதென்னமாயம் வாமநாடு பூசலாய் ஆவியார் அடங்குநாளில் ஐவரும் அடங்குவார். 115 |
Nāvilnūl aḻintatum nalamkulam aḻintatum Mēvutēr aḻintatum vicāram kuṟaintatum Pāvikāḷ iteṉṉamāyam vāmanāṭu pūcalāy Āviyār aṭaṅkunāḷil aivarum aṭaṅkuvār. 115 |
| இல்லைஇல்லை என்றுநீர் இயம்புகின்ற ஏழைகாள், இல்லைஎன்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ? இல்லைஅல்ல ஒன்றுமல்ல இரண்டும்ஒன்றி நின்றதை எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே. 116 |
Illaiillai eṉṟunīr iyampukiṉṟa ēḻaikāḷ, Illaieṉṟu niṉṟatoṉṟai illai eṉṉalākumō? Illaialla oṉṟumalla iraṇṭumoṉṟi niṉṟatai Ellaikaṇṭu koṇṭapēr iṉippiṟappatu illaiyē. 116 |
| காரகார காரகார காவல்ஊழி காவலன் போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன் மாரமார மாரமார மரங்கள்ஏழும் எய்தசீ ராமராம ராமராம ராமஎன்னும் நாமமே. 117 |
Kārakāra kārakāra kāvalūḻi kāvalaṉ Pōrapōra pōrapōra pōrilniṉṟa puṇṇiyaṉ Māramāra māramāra maraṅkaḷēḻum eytacī Rāmarāma rāmarāma rāmaeṉṉum nāmamē. 117 |
| நீடுபாரி லேபிறந்து நேரமான காயந்தான் வீடுபேறி தென்றபோது வேண்டிஇன்பம் வேண்டுமோ? பாடிநாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ? நாடுராம ராமராம ராமமென்னுன் நாமமே! 118 |
Nīṭupāri lēpiṟantu nēramāṉa kāyantāṉ Vīṭupēṟi teṉṟapōtu vēṇṭiiṉpam vēṇṭumō? Pāṭinālu vētamum pārilē paṭarntatō? Nāṭurāma rāmarāma rāmameṉṉuṉ nāmamē! 118 |
| உயிருநன்மை யால்உடல் எடுத்துவந்து இருந்திடும்! உயிர்உடம்பு ஒழிந்தபோது ரூபரூப மாயிடும் உயிர்சிவத்தின் மாயைஆகி ஒன்றைஒன்று கொன்றிடும் உயிரும்சத்தி மாயைஆகி ஒன்றைஒன்று தின்னுமே. 119 |
Uyirunaṉmai yāluṭal eṭuttuvantu iruntiṭum! Uyiruṭampu oḻintapōtu rūparūpa māyiṭum Uyircivattiṉ māyaiāki oṉṟaioṉṟu koṉṟiṭum Uyirumcatti māyaiāki oṉṟaioṉṟu tiṉṉumē. 119 |
| நெட்டெழுத்து வட்டமே நிறைந்தவல்லி யோனியும், நெட்டெழுத்து வட்டமொன்று நின்றதொன்று கண்டிலேன் குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில் நெட்டெழுத்தில் வட்டம்ஒன்றில் நேர்படான் நம்ஈசனே! 120 |
Neṭṭeḻuttu vaṭṭamē niṟaintavalli yōṉiyum, Neṭṭeḻuttu vaṭṭamoṉṟu niṉṟatoṉṟu kaṇṭilēṉ Kuṟṟeḻuttil uṟṟateṉṟu kompukāl kuṟittiṭil Neṭṭeḻuttil vaṭṭamoṉṟil nērpaṭāṉ namīcaṉē! 120 |
| விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள் கண்ணிலாணி யாகவே கலந்துநின்ற தெம்பிரான் மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின் அண்ணலாரும் எம்முளே அமர்ந்துவாழ்வ துண்மையே. 121 |
Viṇṇiluḷḷa tēvarkaḷ aṟiyoṇāta meypporuḷ Kaṇṇilāṇi yākavē kalantuniṉṟa tempirāṉ Maṇṇilām piṟappaṟuttu malaraṭikaḷ vaittapiṉ Aṇṇalārum emmuḷē amarntuvāḻva tuṇmaiyē. 121 |
| விண்கடந்து நின்றசோதி மேலைவாச லைத்திறந்து கண்களிக்க உள்ளுளே கலந்துபுக் கிருந்தபின் மண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய் எண்கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே. 122 |
Viṇkaṭantu niṉṟacōti mēlaivāca laittiṟantu Kaṇkaḷikka uḷḷuḷē kalantupuk kiruntapiṉ Maṇpiṟanta māyamum mayakkamum maṟantupōy Eṇkalanta īcaṉōṭu icaintiruppatu uṇmaiyē. 122 |
| மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின் நாளுநாளு முன்னிலொரு நாட்டமாகி நாட்டிடில் பாலனாகி நீடலாம் பரப்பிரமம் ஆகலாம் ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே! 123 |
Mūlamāṉa mūccatil mūccaṟintu viṭṭapiṉ Nāḷunāḷu muṉṉiloru nāṭṭamāki nāṭṭiṭil Pālaṉāki nīṭalām parappiramam ākalām Ālamuṇṭa kaṇṭarāṇai ammaiāṇai uṇmaiyē! 123 |
| மின்எழுந்து மின்பரந்து மின்ஒடுங்கு மாறுபோல் என்னுள்நின்ற என்னுள்ஈசன் என்னுள்ளே அடங்குமே, கண்ணுள்நின்ற கண்ணில்நேர் மைகண்அறி விலாமையால் என்னுள்நின்ற வென்னையன்றி யான்அறிந்ததில்லையே! 124 |
Miṉeḻuntu miṉparantu miṉoṭuṅku māṟupōl Eṉṉuḷniṉṟa eṉṉuḷīcaṉ eṉṉuḷḷē aṭaṅkumē, Kaṇṇuḷniṉṟa kaṇṇilnēr maikaṇaṟi vilāmaiyāl Eṉṉuḷniṉṟa veṉṉaiyaṉṟi yāṉaṟintatillaiyē! 124 |
| இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம், அரிக்குமால் பிரமனும் அண்டம்ஏழு அகற்றலாம். கருக்கொளாத குழியிலே காலிலாத தூணிலே நெருப்பறை திறந்தபின்பு நீயும்நானும் ஈசனே! 125 |
Irukkalām irukkalām avaṉiyil irukkalām, Arikkumāl piramaṉum aṇṭamēḻu akaṟṟalām. Karukkoḷāta kuḻiyilē kālilāta tūṇilē Neruppaṟai tiṟantapiṉpu nīyumnāṉum īcaṉē! 125 |
| ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய் போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறது எங்ஙனே? ஆகலும் அழிதலும் அதன்கண்ணேயம் ஆனபின் சாகலும் பிறத்தலும் இல்லைஇல்லை இல்லையே! 126 |
Ēkapōkam ākiyē iruvarum oruvarāy Pōkamum puṇarcciyum poruntumāṟatu eṅṅaṉē? Ākalum aḻitalum ataṉkaṇṇēyam āṉapiṉ Cākalum piṟattalum illaiillai illaiyē! 126 |
| வேதம்நாலும் பூதமாய் விரவும்அங்கு நீரதாய்ப் பாதமே இலிங்கமாய்ப் பரிந்தபூசை பண்ணினால் காதினின்று கடைதிறந்து கட்டறுத்த ஞானிகள் ஆதிஅந்த மும்கடந்து அரியவீடு அடைவரே! 127 |
Vētamnālum pūtamāy viravumaṅku nīratāyp Pātamē iliṅkamāyp parintapūcai paṇṇiṉāl Kātiṉiṉṟu kaṭaitiṟantu kaṭṭaṟutta ñāṉikaḷ Ātianta mumkaṭantu ariyavīṭu aṭaivarē! 127 |
| பருத்திநூல் முறுக்கிவிட்டுப் பஞ்சிஓதும் மாந்தரே! துருத்திநூல் முறுக்கிவிட்டுத் துன்பம்நீங்க வல்லீரேல் கருத்தில்நூல் கலைப்படு காலநூல் கழிந்திடும் திருத்திநூல் கவலறும் சிவாயஅஞ்சு எழுத்துமே. 128 |
Paruttinūl muṟukkiviṭṭup pañciōtum māntarē! Turuttinūl muṟukkiviṭṭut tuṉpamnīṅka vallīrēl Karuttilnūl kalaippaṭu kālanūl kaḻintiṭum Tiruttinūl kavalaṟum civāyaañcu eḻuttumē. 128 |
| சாவதான தத்துவச் சடங்குசெய்யும் ஊமைகாள் தேவர்கல்லும் ஆவரோ? சிரிப்பதன்றி என்செய்வேன்? மூவராலும் அறியொணாத முக்கணன்முதற் கொழுந்து காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே. 129 |
Cāvatāṉa tattuvac caṭaṅkuceyyum ūmaikāḷ Tēvarkallum āvarō? cirippataṉṟi eṉceyvēṉ? Mūvarālum aṟiyoṇāta mukkaṇaṉmutaṟ koḻuntu Kāvalāka ummuḷē kalantiruppaṉ kāṇumē. 129 |
| காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள் காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும் காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால் மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே. 130 |
Kālaimālai nīrilē muḻukumanta mūṭarkāḷ Kālaimālai nīrilē kiṭantatērai eṉpeṟum Kālamē eḻuntiruntu kaṇkaḷmūṉṟil oṉṟiṉāl Mūlamē niṉaippirākil mutticitti yākumē. 130 |
| எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ? அங்கும்இங்கு மாய்இரண்டு தேவரே இருப்பரோ? அங்கும்இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ? வங்கவாரம் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே. 131 |
Eṅkaḷtēvar uṅkaḷtēvar eṉṟiraṇṭu tēvarō? Aṅkumiṅku māyiraṇṭu tēvarē irupparō? Aṅkumiṅkum ākiniṉṟa ātimūrtti oṉṟalō? Vaṅkavāram coṉṉapērkaḷ vāypuḻuttu māḷvarē. 131 |
| அறையறை இடைக்கிடந்த அன்றுதூமை என்கிறீர்; முறைஅறிந்து பிறந்தபோதும் அன்றுதூமை என்கிறீர் துறைஅறிந்து நீர்குளித்தால் அன்றுதூமை என்கிறீர் பொறைஇலாத நீசரோடும் பொருந்துமாறது எங்ஙனே? 132 |
Aṟaiyaṟai iṭaikkiṭanta aṉṟutūmai eṉkiṟīr; Muṟaiaṟintu piṟantapōtum aṉṟutūmai eṉkiṟīr Tuṟaiaṟintu nīrkuḷittāl aṉṟutūmai eṉkiṟīr Poṟaiilāta nīcarōṭum poruntumāṟatu eṅṅaṉē? 132 |
| சத்தம்வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும் மத்தமாகி நீரிலே துவண்டுமூழ்கும் மூடரே! சுத்தம்ஏது? கட்டதேது? தூய்மைகண்டு நின்றதுஏது? பித்தர்காயம் உற்றதேது பேதம்ஏது போதமே? 133 |
Cattamvanta veḷiyilē calamiruntu vantatum Mattamāki nīrilē tuvaṇṭumūḻkum mūṭarē! Cuttamētu? kaṭṭatētu? tūymaikaṇṭu niṉṟatuētu? Pittarkāyam uṟṟatētu pētamētu pōtamē? 133 |
| மாதாமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான் மாதம்அற்று நின்றுலோ வளர்ந்துரூபம் ஆனது? நாதம்ஏது, வேதம்ஏது, நற்குலங்கள் ஏதடா? வேதம்ஓதும் வேதியர் விளைந்தவாறு பேசடா? 134 |
Mātāmātam tūmaitāṉ, maṟantupōṉa tūmaitāṉ Mātamaṟṟu niṉṟulō vaḷarnturūpam āṉatu? Nātamētu, vētamētu, naṟkulaṅkaḷ ētaṭā? Vētamōtum vētiyar viḷaintavāṟu pēcaṭā? 134 |
| தூமைஅற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது? ஆண்மைஅற்று நின்றலோ வழக்கமற்று நின்றது? தாண்மைஅற்று ஆண்மைஅற்று சஞ்சலங்கள் அற்றுநின்ற தூமைதூமை அற்றகாலம் சொல்லும்அற்று நின்றதே! 135 |
Tūmaiaṟṟu niṉṟalō cutīpamuṟṟu niṉṟatu? Āṇmaiaṟṟu niṉṟalō vaḻakkamaṟṟu niṉṟatu? Tāṇmaiaṟṟu āṇmaiaṟṟu cañcalaṅkaḷ aṟṟuniṉṟa Tūmaitūmai aṟṟakālam collumaṟṟu niṉṟatē! 135 |
| ஊறிநின்ற தூமையை உறைந்துநின்ற சீவனை வேறுபேசி மூடரே விளைந்தவாறது ஏதடா? நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன? சீறுகின்ற மூடனே அத்தூமைநின்ற் கோலமே. 136 |
Ūṟiniṉṟa tūmaiyai uṟaintuniṉṟa cīvaṉai Vēṟupēci mūṭarē viḷaintavāṟatu ētaṭā? Nāṟukiṉṟa tūmaiyallō naṟkulaṅkaḷ āvaṉa? Cīṟukiṉṟa mūṭaṉē attūmainiṉṟ kōlamē. 136 |
| தீமைகண்டு நின்றபெண்ணின் தூமைதானும் ஊறியே சீமைஎங்கும் ஆணும்பெண்ணும் சேர்ந்துலகம் கண்டதே. தூமைதானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை தூமைஅற்று கொண்டிருந்த தேசம்ஏது தேசமே? 137 |
Tīmaikaṇṭu niṉṟapeṇṇiṉ tūmaitāṉum ūṟiyē Cīmaieṅkum āṇumpeṇṇum cērntulakam kaṇṭatē. Tūmaitāṉum ācaiyāy tuṟantirunta cīvaṉai Tūmaiaṟṟu koṇṭirunta tēcamētu tēcamē? 137 |
| வேணும்வேணும் என்றுநீர் வீண்உழன்று தேடுவீர்? வேணும்என்று தேடினும் உள்ளதல்லது இல்லையே, வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின் வேணும்என்ற அப்பொருள் விரைந்துகாணல் ஆகுமே! 138 |
Vēṇumvēṇum eṉṟunīr vīṇuḻaṉṟu tēṭuvīr? Vēṇumeṉṟu tēṭiṉum uḷḷatallatu illaiyē, Vēṇum eṉṟu tēṭukiṉṟa vēṭkaiyait tuṟantapiṉ Vēṇumeṉṟa apporuḷ viraintukāṇal ākumē! 138 |
| சிட்டர்ஓது வேதமும் சிறந்ததாக மங்களும் நட்டகார ணங்களும் நவின்றமெய்மை நூல்களும் கட்டிவைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம் பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின்! 139 |
Ciṭṭarōtu vētamum ciṟantatāka maṅkaḷum Naṭṭakāra ṇaṅkaḷum naviṉṟameymai nūlkaḷum Kaṭṭivaitta pōtakam kataikkukanta pittelām Poṭṭatāy muṭintatē pirāṉaiyāṉ aṟintapiṉ! 139 |
| நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம் நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அதுஎன்பயன்? ஆறும்ஆறும் ஆறுமாய் அகத்தில்ஓர் எழுத்துமாய் ஏறுசீர் எழுத்தைஓத ஈசன்வந்து பேசுமே! 140 |
Nūṟukōṭi ākamaṅkaḷ nūṟukōṭi mantiram Nūṟukōṭi nāḷiruntu ōtiṉāl atueṉpayaṉ? Āṟumāṟum āṟumāy akattilōr eḻuttumāy Ēṟucīr eḻuttaiōta īcaṉvantu pēcumē! 140 |
| காலைமாலை தம்மிலே கலந்துநின்ற காலனார் மாலைகாலை யாச்சிவந்த மாயம்ஏது செப்பிடீர்? காலைமாலை அற்றுநீர் கருத்திலே ஒடுங்கினால் காலைமாலை ஆகிநின்ற காலன்இல்லை இல்லையே. 141 |
Kālaimālai tammilē kalantuniṉṟa kālaṉār Mālaikālai yāccivanta māyamētu ceppiṭīr? Kālaimālai aṟṟunīr karuttilē oṭuṅkiṉāl Kālaimālai ākiniṉṟa kālaṉillai illaiyē. 141 |
| எட்டுமண்ட லத்துளே இரண்டுமண்டலம் வளைத்து இட்டமண்ட லத்துளே எண்ணிஆறு மண்டலம் தொட்டமண்ட லத்திலே தோன்றிமூன்று மண்டலம் நட்டமண்ட லத்துளே நாதன்ஆடி நின்றதே! 142 |
Eṭṭumaṇṭa lattuḷē iraṇṭumaṇṭalam vaḷaittu Iṭṭamaṇṭa lattuḷē eṇṇiāṟu maṇṭalam Toṭṭamaṇṭa lattilē tōṉṟimūṉṟu maṇṭalam Naṭṭamaṇṭa lattuḷē nātaṉāṭi niṉṟatē! 142 |
| நாலிரண்டு மண்டலத்துள் நாதன்நின்றது எவ்விடம்? காலிரண்டு மூலநாடி கண்டதங்கு உருத்திரன்; சேலிரண்டு கண்கலந்து திசைகள் எட்டுமூடியே மேலிரண்டு தான்கலந்து வீசிஆடி நின்றதே. 143 |
Nāliraṇṭu maṇṭalattuḷ nātaṉniṉṟatu evviṭam? Kāliraṇṭu mūlanāṭi kaṇṭataṅku uruttiraṉ; Cēliraṇṭu kaṇkalantu ticaikaḷ eṭṭumūṭiyē Mēliraṇṭu tāṉkalantu vīciāṭi niṉṟatē. 143 |
| அம்மைஅப்பன் உப்புநீர் அறிந்ததே அறிகிலீர்; அம்மைஅப்பன் உப்புநீர் அரிஅயன் அரனுமாய் அம்மைஅப்பன் உப்புநீர் ஆதியாதி ஆனபின் அம்மைஅப்பன் நின்னைஅன்றி யாரும்இல்லை ஆனதே. 144 |
Ammaiappaṉ uppunīr aṟintatē aṟikilīr; Ammaiappaṉ uppunīr ariayaṉ araṉumāy Ammaiappaṉ uppunīr ātiyāti āṉapiṉ Ammaiappaṉ niṉṉaiaṉṟi yārumillai āṉatē. 144 |
| உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே? கருத்தரிப்ப தற்குமுன் காரணங்கள் எங்ஙனே? பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறது எங்ஙனே? குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே! 145 |
Uruttarippa taṟkumuṉ uṭalkalantatu eṅṅaṉē? Karuttarippa taṟkumuṉ kāraṇaṅkaḷ eṅṅaṉē? Poruttivaitta pōtamum poruntumāṟatu eṅṅaṉē? Kuruttirutti vaittacol kuṟittuṇarntu koḷḷumē! 145 |
| ஆதிஉண்டு அந்தம்இல்லை அன்றுநாலு வேதம் இல். சோதிஉண்டு சொல்லுமில்லை சொல்லிறந்த தேதுமில்; ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும் ஆதிஅன்று தன்னையும் யார்அறிவது அண்ணலே? 146 |
Ātiuṇṭu antamillai aṉṟunālu vētam il. Cōtiuṇṭu collumillai colliṟanta tētumil; Ātiyāṉa mūvaril amarntirunta vāyuvum Ātiaṉṟu taṉṉaiyum yāraṟivatu aṇṇalē? 146 |
| புலால்புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுகிறீர்? புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே? புலாலுமாய்ப் பிதற்றுமாய் பேருலாவும் தானுமாய்ப் புலாலிலே முளைத்தெழுந்த பித்தன்காணும் அத்தனே! 147 |
Pulālpulāl pulāl ateṉṟu pētamaikaḷ pēcukiṟīr? Pulālaiviṭṭu empirāṉ pirintiruntatu eṅṅaṉē? Pulālumāyp pitaṟṟumāy pērulāvum tāṉumāyp Pulālilē muḷaitteḻunta pittaṉkāṇum attaṉē! 147 |
| உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும் இதரமாய் இருந்ததுஒன்று இரண்டுபட்டது என்னலாம் மதிரமாக விட்டதேது மாங்கிசப்புலால் அதென்? சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே? 148 |
Utiramāṉa pālkuṭittu okkanīr vaḷarntatum Itaramāy iruntatuoṉṟu iraṇṭupaṭṭatu eṉṉalām Matiramāka viṭṭatētu māṅkicappulāl ateṉ? Catiramāy vaḷarntatētu caivarāṉa mūṭarē? 148 |
| உண்டகல்லை எச்சில்என்று உள்ளெறிந்து போடுகிறீர்; கண்டஎச்சில் கையலோ பரமனுக்கும் வேறதோ? கண்டஎச்சில் கேளடா, கலந்தபாணி அப்பிலே கொண்டசுத்தம் ஏதடா? குறிப்பிலாத மூடரே! 149 |
Uṇṭakallai eccileṉṟu uḷḷeṟintu pōṭukiṟīr; Kaṇṭaeccil kaiyalō paramaṉukkum vēṟatō? Kaṇṭaeccil kēḷaṭā, kalantapāṇi appilē Koṇṭacuttam ētaṭā? kuṟippilāta mūṭarē! 149 |
| ஓதிவைத்த நூல்களும் உணர்ந்துகற்ற கல்வியும் மாதுமக்கள் சுற்றுமும் மறக்கவந்த நித்திரை ஏதுபுக் கொளித்ததோ எங்குமாகி நின்றதோ? சோதிபுக் கொளித்தமாயம் சொல்லடா சுவாமியே! 150 |
Ōtivaitta nūlkaḷum uṇarntukaṟṟa kalviyum Mātumakkaḷ cuṟṟumum maṟakkavanta nittirai Ētupuk koḷittatō eṅkumāki niṉṟatō? Cōtipuk koḷittamāyam collaṭā cuvāmiyē! 150 |
| ஈணெருமையின் கழுத்தில் இட்டபொட்ட ணங்கள்போல் மூணுநாலு சீலையில் முடிந்தவழ்க்கும் மூடர்காள், மூணுநாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை ஊணிஊணி நீர்முடித்த உண்மைஎன்ன உண்மையே? 151 |
Īṇerumaiyiṉ kaḻuttil iṭṭapoṭṭa ṇaṅkaḷpōl Mūṇunālu cīlaiyil muṭintavaḻkkum mūṭarkāḷ, Mūṇunālu lōkamum muṭivilāta mūrttiyai Ūṇiūṇi nīrmuṭitta uṇmaieṉṉa uṇmaiyē? 151 |
| சாவல்நாலு குஞ்சதஞ்சு தாயதான வாறுபோல் காவலான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே! கூவமான் கிழநரியக் கூட்டிலே புகுந்தபின் சாவல்நாலும் குஞ்சதஞ்சும் தான் இறந்து போனவே! 152 |
Cāvalnālu kuñcatañcu tāyatāṉa vāṟupōl Kāvalāṉa kūṭṭilē kalantucaṇṭai koḷḷutē! Kūvamāṉ kiḻanariyak kūṭṭilē pukuntapiṉ Cāvalnālum kuñcatañcum tāṉ iṟantu pōṉavē! 152 |
| மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பீரேல் பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்; ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே! 153 |
Mūlamām kuḷattilē muḷaitteḻunta kōraiyai Kālamē eḻuntiruntu nālukaṭṭu aṟuppīrēl Pālaṉāki vāḻalām parappiramam ākalām; Ālamuṇṭa kaṇṭarpātam ammaipātam uṇmaiyē! 153 |
| செம்பினில் களிம்புவந்த சீதரங்கள் போலவே அம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை வெம்பிவெம்பி வெம்பியே மெலிந்துமேல் கலந்திட செம்பினில் களிம்புவிட்ட சேதிஏது காணுமே! 154 |
Cempiṉil kaḷimpuvanta cītaraṅkaḷ pōlavē Ampiṉil eḻutoṇāta aṇiyaraṅka cōtiyai Vempivempi vempiyē melintumēl kalantiṭa Cempiṉil kaḷimpuviṭṭa cētiētu kāṇumē! 154 |
| அணி அரங்கம் - அழகிய சிற்றம்பலம் | Aṇi araṅkam - aḻakiya ciṟṟampalam |
| நாடிநாடி நம்முளே நயந்துகாண வல்லீரேல் ஓடிஓடி மீளுவான் உம்முளே அடங்கிடும் தேடிவந்த காலனும் திகைத்திருந்து போய்விடும் கோடிகோடி காலமும் குறைவிலாது இருப்பிரே! 155 |
Nāṭināṭi nammuḷē nayantukāṇa vallīrēl Ōṭiōṭi mīḷuvāṉ ummuḷē aṭaṅkiṭum Tēṭivanta kālaṉum tikaittiruntu pōyviṭum Kōṭikōṭi kālamum kuṟaivilātu iruppirē! 155 |
| பிணங்குகின்றது ஏதடா? பிரக்ஞைகெட்ட மூடரே? பிணங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர். பிணங்கும்ஓர் இருவினைப் பிணக்கறுக்க வல்லீரேல்! பிணங்கிலாத பெரியஇன்பம் பெற்றிருக்க லாகுமே! 156 |
Piṇaṅkukiṉṟatu ētaṭā? pirakñaikeṭṭa mūṭarē? Piṇaṅkilāta pēroḷi pirāṇaṉai aṟikilīr. Piṇaṅkumōr iruviṉaip piṇakkaṟukka vallīrēl! Piṇaṅkilāta periyaiṉpam peṟṟirukka lākumē! 156 |
| மீன்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்? மீன்இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும் மான்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர், மான்உரித்த தோலலோ மார்புநூல் அணிவதும். 157 |
Mīṉiṟaicci tiṉṟatillai aṉṟumiṉṟum vētiyar? Mīṉirukkum nīralō mūḻvatum kuṭippatum Māṉiṟaicci tiṉṟatillai aṉṟumiṉṟum vētiyar, Māṉuritta tōlalō mārpunūl aṇivatum. 157 |
| ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர் ஆட்டிறைச்சி அல்லவோ யாகம்நீங்கள் ஆற்றலோ? மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர் மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது? 158 |
Āṭṭiṟaicci tiṉṟatillai aṉṟumiṉṟum vētiyar Āṭṭiṟaicci allavō yākamnīṅkaḷ āṟṟalō? Māṭṭiṟaicci tiṉṟatillai aṉṟumiṉṟum vētiyar Māṭṭiṟaicci allavō marakkaṟik kiṭuvatu? 158 |
| அக்கிடீர் அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பது முக்கிடீர் உமைப்பிடித்து முத்தரித்து விட்டது, மைக்கிடீர் பிறந்துஇறந்து மாண்டுமாண்டு போவது, மொக்கிடீர் உமக்குநான் உணர்த்துவித்தது உண்மையே. 159 |
Akkiṭīr aṉaittuyirkkum ātiyāki niṟpatu Mukkiṭīr umaippiṭittu muttarittu viṭṭatu, Maikkiṭīr piṟantuiṟantu māṇṭumāṇṭu pōvatu, Mokkiṭīr umakkunāṉ uṇarttuvittatu uṇmaiyē. 159 |
| ஐயன்வந்து மெய்யகம் புகுந்தவாறது எங்ஙனே? செய்யதெங்கு இளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே. ஐயன்வந்து மெய்யகம்புகுந்து கோயில் கொண்டபின் வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே! 160 |
Aiyaṉvantu meyyakam pukuntavāṟatu eṅṅaṉē? Ceyyateṅku iḷaṅkurumpai nīrpukunta vaṇṇamē. Aiyaṉvantu meyyakampukuntu kōyil koṇṭapiṉ Vaiyakattil māntarōṭu vāytiṟappatu illaiyē! 160 |
| நவ்வுமவ்வை யும்கடந்து நாடொணாத சியின்மேல் வவ்வுயவ்வு ளும்சிறந்த வண்மைஞான போதகம் ஒவ்வுசத்தி யுள்நிறைந்து உச்சியூ டுருவியே இவ்வகை அறிந்தபேர்கள் ஈசன்ஆணை ஈசனே. 161 |
Navvumavvai yumkaṭantu nāṭoṇāta ciyiṉmēl Vavvuyavvu ḷumciṟanta vaṇmaiñāṉa pōtakam Ovvucatti yuḷniṟaintu ucciyū ṭuruviyē Ivvakai aṟintapērkaḷ īcaṉāṇai īcaṉē. 161 |
| அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ? புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ? தர்க்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ? தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ? 162 |
Akkaram aṉātiyō? āttumam aṉātiyō? Pukkirunta pūtamum pulaṉkaḷum aṉātiyō? Tarkkamikka nūlkaḷum cāttiram aṉātiyō? Taṟparattai ūṭaṟutta caṟkuru aṉātiyō? 162 |
| பார்த்ததேது? பார்த்திடில் பார்வையூ டழிந்திடும் கூர்த்ததாய் இருப்பிரேல் குறிப்பில்அச் சிவமதாம்; பார்த்தபார்த்த போதெல்லாம் பார்வையும் இகந்துநீர் பூத்தபூவுங் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிரே. 163 |
Pārttatētu? pārttiṭil pārvaiyū ṭaḻintiṭum Kūrttatāy iruppirēl kuṟippilac civamatām; Pārttapārtta pōtellām pārvaiyum ikantunīr Pūttapūvuṅ kāyumāy poruntuvīr piṟappirē. 163 |
| நெற்றிபற்றி உழலுகின்ற நீலமா விளக்கினைப் பத்திஒத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன் உற்றிருநது பாரடா, உள்ஒளிக்கு மேல்ஒளி அத்தனார் அமர்ந்திடம் அரிந்தவன் அனாதியே. 164 |
Neṟṟipaṟṟi uḻalukiṉṟa nīlamā viḷakkiṉaip Pattiotti niṉṟuniṉṟu paṟṟaṟuttatu eṉpalaṉ Uṟṟirunatu pāraṭā, uḷoḷikku mēloḷi Attaṉār amarntiṭam arintavaṉ aṉātiyē. 164 |
| நீரைஅள்ளி நீரில்விட்டு நீர்நினைந்த காரியம் ஆரைஉன்னி நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர்? வேரைஉன்னி வித்தைஉன்னி வித்திலே முளைத்தெழும் சீரைஉன்ன வல்லீரேல் சிவபதங்கள் சேரலாம்! 165 |
Nīraiaḷḷi nīrilviṭṭu nīrniṉainta kāriyam Āraiuṉṉi nīrellām avattilē iṟaikkiṟīr? Vēraiuṉṉi vittaiuṉṉi vittilē muḷaitteḻum Cīraiuṉṉa vallīrēl civapataṅkaḷ cēralām! 165 |
| நெற்றியில் தயங்குகின்ற நீலமாம் விளக்கினை உய்த்துணர்ந்து பாரடா, உள்ளிருந்த சோதியைப் பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அதானவர் அத்தலத்தில் இருந்தபேர்கள் அவர்எனக்கு நாதரே. 166 |
Neṟṟiyil tayaṅkukiṉṟa nīlamām viḷakkiṉai Uyttuṇarntu pāraṭā, uḷḷirunta cōtiyaip Pattiyil toṭarntavar paramayam atāṉavar Attalattil iruntapērkaḷ avareṉakku nātarē. 166 |
| கருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்றது எவ்விடம்? உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்புநின்றது எவ்விடம்? அருள்தரிக்கு முன்னெலாம் ஆசைநின்றது எவ்விடம்? திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம்என்று கூறுவீர். 167 |
Karuttarikku muṉṉelām kāyamniṉṟatu evviṭam? Uruttarikku muṉṉelām uyirppuniṉṟatu evviṭam? Aruḷtarikku muṉṉelām ācainiṉṟatu evviṭam? Tirukkaṟuttuk koṇṭatē civāyameṉṟu kūṟuvīr. 167 |
| கருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்றது தேயுவில், உருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்ற தேயுவில் அருள்தரிக்கு முன்னெலாம் ஆசைநின்றது வாயுவில் திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர். 168 |
Karuttarikku muṉṉelām kāyamniṉṟatu tēyuvil, Uruttarikku muṉṉelām kāyamniṉṟa tēyuvil Aruḷtarikku muṉṉelām ācainiṉṟatu vāyuvil Tirukkaṟuttuk koṇṭatē civāyam eṉṟu kūṟuvīr. 168 |
| திருக்கு - சந்தேகம் | Tirukku - cantēkam |
| தாதரான தாதரும் தலத்தில்உள்ள சைவரும் கூதரைப் பறைச்சிமக்கள் கூடிசெய்த காரியம் வீதிபோகும் ஞானியை விரைந்துகல் எறிந்ததும் பாதகங்கள் ஆகவே பலித்ததே சிவாயமே. 169 |
Tātarāṉa tātarum talattiluḷḷa caivarum Kūtaraip paṟaiccimakkaḷ kūṭiceyta kāriyam Vītipōkum ñāṉiyai viraintukal eṟintatum Pātakaṅkaḷ ākavē palittatē civāyamē. 169 |
| ஓடிஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும் பாவியான பூனைவந்து பாலிலே குதித்ததும் பணிக்கன்வந்து பார்த்ததும் பாரம்இல்லை என்றதும் இழைஅறுந்து போனதும் என்னமாயம் ஈசனே? 170 |
Ōṭiōṭi pāviḻaittu uḷḷaṅkāl veḷuttatum Pāviyāṉa pūṉaivantu pālilē kutittatum Paṇikkaṉvantu pārttatum pāramillai eṉṟatum Iḻaiaṟuntu pōṉatum eṉṉamāyam īcaṉē? 170 |
| சதுரம்நாலு மறையும்எட்டு தானதங்கி மூன்றுமே எதிரதான வாயுவாறு என்னும்வட்ட மேவியே. உதிரதான வரைகள்எட்டும் எண்ணும்என் சிரசின்மேல் கதிரதான காயகத்தில் கலந்தெழுந்த நாதமே. 171 |
Caturamnālu maṟaiyumeṭṭu tāṉataṅki mūṉṟumē Etiratāṉa vāyuvāṟu eṉṉumvaṭṭa mēviyē. Utiratāṉa varaikaḷeṭṭum eṇṇumeṉ ciraciṉmēl Katiratāṉa kāyakattil kalanteḻunta nātamē. 171 |
| நாலொடாறு பத்துமேல் நாலுமூன்றும் இட்டபின் மேலுபத்து மாறுடன் மேதிரண்ட தொன்றுமே கோலிஅஞ் செழுத்துளே குருஇருந்து கூறிடில் தோலுமேனி நாதமாய்த் தோற்றிநின்ற கோசமே. 172 |
Nāloṭāṟu pattumēl nālumūṉṟum iṭṭapiṉ Mēlupattu māṟuṭaṉ mētiraṇṭa toṉṟumē Kōliañ ceḻuttuḷē kuruiruntu kūṟiṭil Tōlumēṉi nātamāyt tōṟṟiniṉṟa kōcamē. 172 |
| கோசமாய் எழுந்ததும் கூடுருவி நின்றதும் தேசமாய்ப் பிறந்ததும் சிவாயம்அஞ் செழுத்துமே ஈசனார் அருந்திட அனேகனேக மந்திரம் ஆசயம் நிறைந்துநின்ற ஐம்பத்தோர் எழுத்துமே. 173 |
Kōcamāy eḻuntatum kūṭuruvi niṉṟatum Tēcamāyp piṟantatum civāyamañ ceḻuttumē Īcaṉār aruntiṭa aṉēkaṉēka mantiram Ācayam niṟaintuniṉṟa aimpattōr eḻuttumē. 173 |
| அங்கலிங்க பீடமாய் ஐயிரண்டு எழுத்திலும் பொங்குதா மரையினும் பொருந்துவார் அகத்தினும் பங்குகொண்ட சோதியும் பரந்தஅஞ்சு எழுத்துமே சிங்கநாத ஓசையும் சிவாயம் அல்லது இல்லையே. 174 |
Aṅkaliṅka pīṭamāy aiyiraṇṭu eḻuttilum Poṅkutā maraiyiṉum poruntuvār akattiṉum Paṅkukoṇṭa cōtiyum parantaañcu eḻuttumē Ciṅkanāta ōcaiyum civāyam allatu illaiyē. 174 |
| உவமையிலாப் பேரொளிக்குள் உருவமானது எவ்விடம்? உவமையாகி அண்டத்தில் உருவிநின்றது எவ்விடம்? தவமதான பரமனார் தரித்துநின்றது எவ்விடம்? தற்பரத்தில் சலம்பிறந்து தங்கிநின்றது எவ்விடம்? 175 |
Uvamaiyilāp pēroḷikkuḷ uruvamāṉatu evviṭam? Uvamaiyāki aṇṭattil uruviniṉṟatu evviṭam? Tavamatāṉa paramaṉār tarittuniṉṟatu evviṭam? Taṟparattil calampiṟantu taṅkiniṉṟatu evviṭam? 175 |
| ககமாக எருதுமூன்று கன்றைஈன்றது எவ்விடம்? சொல்லுகீழு லோகம்ஏழும் நின்றவாறது எவ்விடம்? அவனும்அவளும் ஆடலால் அருஞ்சிவன் பிறந்ததே, அவள்தான் மேருவும் அவமைதானது எவ்விடம்? 176 |
Kakamāka erutumūṉṟu kaṉṟaiīṉṟatu evviṭam? Collukīḻu lōkamēḻum niṉṟavāṟatu evviṭam? Avaṉumavaḷum āṭalāl aruñcivaṉ piṟantatē, Avaḷtāṉ mēruvum avamaitāṉatu evviṭam? 176 |
| உதிக்கநின்றது எவ்விடம்? ஒடுங்குகின்றது எவ்விடம்? கதிக்கநின்றது எவ்விடம்? கண்ணுறக்கம் எவ்விடம்? மதிக்கநின்றது எவ்விடம்? மதிமயக்கம் எவ்விடம்? விதிக்கவல்ல ஞானிகள், விரிந்துரைக்க வேணுமே. 177 |
Utikkaniṉṟatu evviṭam? oṭuṅkukiṉṟatu evviṭam? Katikkaniṉṟatu evviṭam? kaṇṇuṟakkam evviṭam? Matikkaniṉṟatu evviṭam? matimayakkam evviṭam? Vitikkavalla ñāṉikaḷ, virinturaikka vēṇumē. 177 |
| திரும்பியாடு வாசல்எட்டு திறம்உரைத்த வாசல்எட்டு, மருங்கிலாத கோலம்எட்டு வன்னியாடு வாசல்எட்டு, துரும்பிலாத கோலம்எட்டு சுற்றிவந்த மருளரே! அரும்பிலாத பூவும்உண்டு ஐயன்ஆணை உண்மையே! 178 |
Tirumpiyāṭu vācaleṭṭu tiṟamuraitta vācaleṭṭu, Maruṅkilāta kōlameṭṭu vaṉṉiyāṭu vācaleṭṭu, Turumpilāta kōlameṭṭu cuṟṟivanta maruḷarē! Arumpilāta pūvumuṇṭu aiyaṉāṇai uṇmaiyē! 178 |
| தானிருந்து மூலஅங்கி தணல்எழுப்பி வாயுவால் தேனிருந்து அறைதிறந்து தித்திஒன்று ஒத்ததே வானிருந்து மதியமூன்று தண்டலம் புகுந்தபின் ஊனிருந்து அளவுகொண்ட யோகிநல்ல யோகியே! 179 |
Tāṉiruntu mūlaaṅki taṇaleḻuppi vāyuvāl Tēṉiruntu aṟaitiṟantu tittioṉṟu ottatē Vāṉiruntu matiyamūṉṟu taṇṭalam pukuntapiṉ Ūṉiruntu aḷavukoṇṭa yōkinalla yōkiyē! 179 |
| முத்தனாய் நினைந்தபோது முடிந்தஅண்டத் துச்சிமேல் பத்தனாரும் அம்மையும் பரிந்துஆடல் ஆடினார், சித்தரான ஞானிகள், தில்லைஆடல் என்பீர்காள்! அத்தன்ஆடல் உற்றபோது அடங்கல்ஆடல் உற்றவே. 180 |
Muttaṉāy niṉaintapōtu muṭintaaṇṭat tuccimēl Pattaṉārum ammaiyum parintuāṭal āṭiṉār, Cittarāṉa ñāṉikaḷ, tillaiāṭal eṉpīrkāḷ! Attaṉāṭal uṟṟapōtu aṭaṅkalāṭal uṟṟavē. 180 |
| ஒன்றும்ஒன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே அன்றும்இன்றும் ஒன்றுமே அனாதியானது ஒன்றுமே கன்றல்நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால் அன்றுதெய்வம் உம்முளே அரிந்ததே சிவாயமே. 181 |
Oṉṟumoṉṟum oṉṟumē ulakaṉaittum oṉṟumē Aṉṟumiṉṟum oṉṟumē aṉātiyāṉatu oṉṟumē Kaṉṟalniṉṟa cempoṉaik kaḷimpaṟuttu nāṭṭiṉāl Aṉṟuteyvam ummuḷē arintatē civāyamē. 181 |
| நட்டதா வரங்களும் நவின்ற சாத்திரங்களும் இட்டமானது ஓமகுண்டம் இசைந்தநாலு வேதமும் கட்டிவைத்த புத்தகம் கடும்பிதற்று இதற்கெலாம் பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறியவே. 182 |
Naṭṭatā varaṅkaḷum naviṉṟa cāttiraṅkaḷum Iṭṭamāṉatu ōmakuṇṭam icaintanālu vētamum Kaṭṭivaitta puttakam kaṭumpitaṟṟu itaṟkelām Poṭṭatāy muṭintatē pirāṉaiyāṉ aṟiyavē. 182 |
| வட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த அம்புலி சட்டசமீ பத்திலே சங்குசக் கரங்களாய் விட்டதுஅச்சு வாசலில் கதவினால் அடைத்தபின் முட்டையில் எழுந்தசிவன் விட்டவாறது எங்ஙனே? 183 |
Vaṭṭamāṉa kūṭṭilē vaḷarnteḻunta ampuli Caṭṭacamī pattilē caṅkucak karaṅkaḷāy Viṭṭatuaccu vācalil kataviṉāl aṭaittapiṉ Muṭṭaiyil eḻuntacivaṉ viṭṭavāṟatu eṅṅaṉē? 183 |
| கோயில்பள்ளி ஏதடா? குறித்துநின்றது ஏதடா? வாயினால் தொழுதுநின்ற மந்திரங்கள் ஏதடா? ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால் காயமான பள்ளியில் காணலாம் இறையையே. 184 |
Kōyilpaḷḷi ētaṭā? kuṟittuniṉṟatu ētaṭā? Vāyiṉāl toḻutuniṉṟa mantiraṅkaḷ ētaṭā? Ñāṉamāṉa paḷḷiyil naṉmaiyāy vaṇaṅkiṉāl Kāyamāṉa paḷḷiyil kāṇalām iṟaiyaiyē. 184 |
| நல்லவெள்ளி ஆறதாய் நயந்தசெம்பு நாலதாய் கொல்லுநாகம் மூன்றதாய் குலாவுசெம்பொனி ரண்டதாய் வில்லின்ஓசை ஒன்றுடன் விளங்கஊத வல்லீரேல் எல்லைஒத்த சோதியானை எட்டுமாற்ற லாகுமே. 185 |
Nallaveḷḷi āṟatāy nayantacempu nālatāy Kollunākam mūṉṟatāy kulāvucempoṉi raṇṭatāy Villiṉōcai oṉṟuṭaṉ viḷaṅkaūta vallīrēl Ellaiotta cōtiyāṉai eṭṭumāṟṟa lākumē. 185 |
| மனத்தகத்து அழுக்கறாத மவுனஞான யோகிகள்; வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்; மனத்தகத்து அழுக்கறுத்த மவினஞான யோகிகள் பிணத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே! 186 |
Maṉattakattu aḻukkaṟāta mavuṉañāṉa yōkikaḷ; Vaṉattakattu irukkiṉum maṉattakattu aḻukkaṟār; Maṉattakattu aḻukkaṟutta maviṉañāṉa yōkikaḷ Piṇattaṭattu irukkiṉum piṟappaṟuttu irupparē! 186 |
| உருவும்அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே மருவும்அல்ல கந்தம்அல்ல மந்தநாடி உற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசும்ஆவி தானும்அல்ல அரியதாக நின்றநேர்மை யாவர்காண வல்லிரே. 187 |
Uruvumalla oḷiyum alla oṉṟatāki niṉṟatē Maruvumalla kantamalla mantanāṭi uṟṟatalla Periyatalla ciṟiyatalla pēcumāvi tāṉumalla Ariyatāka niṉṟanērmai yāvarkāṇa vallirē. 187 |
| ஓரெழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர் மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே. 188 |
Ōreḻuttu ulakelām utitta aṭcarattuḷē Īreḻuttu iyampukiṉṟa iṉpamētu aṟikilīr Mūveḻuttu mūvarāy mūṇṭeḻunta mūrttiyai Nāleḻuttu nāvilē naviṉṟatē civāyamē. 188 |
| ஆதிஅந்த மூலவிந்து நாதம்ஐந்து பூதமாய் ஆதிஅந்த மூலவிந்து நாதம்ஐந் தெழுத்துமாய் ஆதிஅந்த மூலவிந்து நாதம்மேவி நின்றதும் ஆதிஅந்த மூலவிந்து நாதமே சிவாயமே. 189 |
Ātianta mūlavintu nātamaintu pūtamāy Ātianta mūlavintu nātamain teḻuttumāy Ātianta mūlavintu nātammēvi niṉṟatum Ātianta mūlavintu nātamē civāyamē. 189 |
| அன்னம்இட்ட பேரெலாம் அனேககோடி வாழவே சொன்னமிட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம் விண்ணம்இட்ட பேரேலாம் வீழ்வர்வெந் நரகிலே கன்னம்இட்ட பேரெலாம் கடந்துநின்றல் திண்ணமே! 190 |
Aṉṉamiṭṭa pērelām aṉēkakōṭi vāḻavē Coṉṉamiṭṭa pērelām turaittaṉaṅkaḷ paṇṇalām Viṇṇamiṭṭa pērēlām vīḻvarven narakilē Kaṉṉamiṭṭa pērelām kaṭantuniṉṟal tiṇṇamē! 190 |
| ஓதொணாமல் நின்றநீர் உறக்கம்ஊணும் அற்றநீர் சாதிபேதம் அற்றநீர் சங்கையின்றி நின்ற நீர் கோதிலாத அறிவிலே குறிப்புணர்ந்து நின்றநீர் ஏதும்இன்றி நின்றநீர் இயங்குமாறு எங்ஙனே? 191 |
Ōtoṇāmal niṉṟanīr uṟakkamūṇum aṟṟanīr Cātipētam aṟṟanīr caṅkaiyiṉṟi niṉṟa nīr Kōtilāta aṟivilē kuṟippuṇarntu niṉṟanīr Ētumiṉṟi niṉṟanīr iyaṅkumāṟu eṅṅaṉē? 191 |
| பிறந்தபொது கோவணம் இலங்குநூல் குடுமியும் பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூலி உடங்கெலாம் மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ? நிலம்பிளந்து வான்இடிந்து நின்றதுஎன்ன வல்லீரே? 192 |
Piṟantapotu kōvaṇam ilaṅkunūl kuṭumiyum Piṟantatuṭaṉ piṟantatō, piṟaṅkunūli uṭaṅkelām Maṟantanālu vētamum maṉattuḷē utittatō? Nilampiḷantu vāṉiṭintu niṉṟatueṉṉa vallīrē? 192 |
| துருத்தியுண்டு கொல்லனுண்டு சொர்ணமான சோதியுண்டு திருத்தமாம் மனத்தில்உன்னித் திகழஊத வல்லீரேல், பெருத்ததூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும் நிருத்தமான சோதியும் நீயும்அல்லது இல்லையே. 193 |
Turuttiyuṇṭu kollaṉuṇṭu corṇamāṉa cōtiyuṇṭu Tiruttamām maṉattiluṉṉit tikaḻaūta vallīrēl, Peruttatūṇ ilaṅkiyē piḻampatāy virintiṭum Niruttamāṉa cōtiyum nīyumallatu illaiyē. 193 |
| வேடமிட்டு மின்துலக்கி மிக்கதூப தீபமாய் ஆடறுத்து கூறுபோட்ட அவர்கள்போலும் பண்ணுறீர் தேடிவத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே போடுகின்ற புட்பபூசை பூசைஎன்ன பூசையே? 194 |
Vēṭamiṭṭu miṉtulakki mikkatūpa tīpamāy Āṭaṟuttu kūṟupōṭṭa avarkaḷpōlum paṇṇuṟīr Tēṭivatta cempelām tiraḷpaṭap parappiyē Pōṭukiṉṟa puṭpapūcai pūcaieṉṉa pūcaiyē? 194 |
| முட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை கட்டிக்கொண்டு நின்றிடம் கடந்துநோக்க வல்லீரேல் திட்டும்அற்று சுட்டும்அற்று முடியில்நின்ற நாதனை எட்டுத்திக்கும் கையினால் இருந்தவீட தாகுமே. 195 |
Muṭṭukaṇṭa tūmaiyiṉ muḷaitteḻunta cīvaṉai Kaṭṭikkoṇṭu niṉṟiṭam kaṭantunōkka vallīrēl Tiṭṭumaṟṟu cuṭṭumaṟṟu muṭiyilniṉṟa nātaṉai Eṭṭuttikkum kaiyiṉāl iruntavīṭa tākumē. 195 |
| அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே நெருக்கிஏறு தாரகை நெருங்கிநின்ற நேர்மையை உருக்கிஓர் எழுத்துமே ஒப்பிலாத வெளியிலே இருக்கவல்ல பேரலோ இனிப்பிறப்பது இல்லையே. 196 |
Arukkaṉōṭu cōmaṉum atukkum appuṟattilē Nerukkiēṟu tārakai neruṅkiniṉṟa nērmaiyai Urukkiōr eḻuttumē oppilāta veḷiyilē Irukkavalla pēralō iṉippiṟappatu illaiyē. 196 |
| அருக்கன் - சூரியன், சோமன் - சந்திரன் | Arukkaṉ - cūriyaṉ, cōmaṉ - cantiraṉ |
| மூலவட்டம் மீதிலே முளைத்தஅஞ்சு எழுத்தின்மேல் கோலவட்டம் மூன்றுமாய் குலைந்தலைந்து நின்றநீர் ஓலைவட்ட மன்றுளே நவின்றஞானம் ஆகிலோ ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே. 197 |
Mūlavaṭṭam mītilē muḷaittaañcu eḻuttiṉmēl Kōlavaṭṭam mūṉṟumāy kulaintalaintu niṉṟanīr Ōlaivaṭṭa maṉṟuḷē naviṉṟañāṉam ākilō Ēlavaṭṭam ākiyē iruntatē civāyamē. 197 |
| சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள் முத்துசரம் எட்டுளே மூலாதார வறையிலே அச்சமற்ற சவ்வுளே அரிஅரன் அயனுமாய் உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே. 198 |
Cukkilat ticaiyuḷē curōṇitattiṉ vācaluḷ Muttucaram eṭṭuḷē mūlātāra vaṟaiyilē Accamaṟṟa cavvuḷē ariaraṉ ayaṉumāy Uccarikkum mantiram uṇmaiyē civāyamē. 198 |
| பூவும்நீரும் என்மனம் பொருந்துகோயில் என்உளம் ஆவியோடி லிங்கமாய் அகண்டம்எங்கும் ஆகிலும் மேவுகின்ற ஐவரும் விளங்குதூப தீபமாய் ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்திசந்தி இல்லையே. 199 |
Pūvumnīrum eṉmaṉam poruntukōyil eṉuḷam Āviyōṭi liṅkamāy akaṇṭameṅkum ākilum Mēvukiṉṟa aivarum viḷaṅkutūpa tīpamāy Āṭukiṉṟa kūttaṉukkōr anticanti illaiyē. 199 |
| உருக்கலந்த பின்னலோ உன்னைநான் அறிந்தது இருக்கில்என், மறைக்கில்என் நினைந்திருந்த போதெலாம் உருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ? திருக்கலந்து போதலோ தெளிந்ததே சிவாயமே. 200 |
Urukkalanta piṉṉalō uṉṉaināṉ aṟintatu Irukkileṉ, maṟaikkileṉ niṉaintirunta pōtelām Urukkalantu niṉṟapōtu nīyumnāṉum oṉṟalō? Tirukkalantu pōtalō teḷintatē civāyamē. 200 |
| சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துதேவ ராகலாம் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துவானம் ஆளலாம் சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்துகொண்ட வான்பொருள் சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்துகொள்ளும் உண்மையே. 201 |
Civāyam añceḻuttilē teḷintutēva rākalām Civāyam añceḻuttilē teḷintuvāṉam āḷalām Civāyam añceḻuttuḷē teḷintukoṇṭa vāṉporuḷ Civāyam añceḻuttuḷē teḷintukoḷḷum uṇmaiyē. 201 |
| பொய்க்குடத்தில் ஐந்தொதுங்கிப் போகம்வீசு மாறுபோல் இச்சடமும் இந்திரியமும் நீருமேல் அலைந்ததே அக்குடம் சலத்தைமொண்டு அமர்ந்திருந்த வாறுபோல் இச்சடம் சிவத்தைமொண்டு உகந்தமர்ந்து இருப்பதே. 202 |
Poykkuṭattil aintotuṅkip pōkamvīcu māṟupōl Iccaṭamum intiriyamum nīrumēl alaintatē Akkuṭam calattaimoṇṭu amarntirunta vāṟupōl Iccaṭam civattaimoṇṭu ukantamarntu iruppatē. 202 |
| பட்டமும் கயிறுபோல் பறக்கநின்ற சீவனைப் பட்டறிவினாலே பார்த்துநீ படுமுடிச்சு போடடா; திட்டவும் படாதடா, சீவனை விடாதடா கட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்வனை. 203 |
Paṭṭamum kayiṟupōl paṟakkaniṉṟa cīvaṉaip Paṭṭaṟiviṉālē pārttunī paṭumuṭiccu pōṭaṭā; Tiṭṭavum paṭātaṭā, cīvaṉai viṭātaṭā Kaṭṭaṭānī cikkeṉak kaḷavaṟinta kaḷvaṉai. 203 |
| அல்லிறந்து பகலிறந்து அகப்பிரமம் இறந்துபோய் அண்டரண்ட மும்கடந்த அனேகனேக ரூபமாய்ச் சொல்லிறந்த மனமிறந்த சுகசொரூப உண்மையைச் சொல்லியாற என்னில்வேறு துணைவரில்லை ஆனதே. 204 |
Alliṟantu pakaliṟantu akappiramam iṟantupōy Aṇṭaraṇṭa mumkaṭanta aṉēkaṉēka rūpamāyc Colliṟanta maṉamiṟanta cukacorūpa uṇmaiyaic Colliyāṟa eṉṉilvēṟu tuṇaivarillai āṉatē. 204 |
| ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்; கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும் துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே. 205 |
Aiyiraṇṭu tiṅkaḷāy aṭaṅkiniṉṟa tūmaitāṉ; Kaiyiraṇṭu kāliraṇṭu kaṇṇiraṇṭum ākiyē Meytiraṇṭu cattamāy viḷaṅkiraca kantamum Tuyyakāyam āṉatum collukiṉṟa tūmaiyē. 205 |
| அங்கலிங்க பீடமும் அசவைமூன்று எழுத்தினும் சங்குசக் கரத்திலும் சகல வானத்திலும் பங்குகொண்ட யோகிகள் பரமவாசல் அஞ்சினும் சிங்கநாத ஓசையும் சிவாயம்அல்ல தில்லையே. 206 |
Aṅkaliṅka pīṭamum acavaimūṉṟu eḻuttiṉum Caṅkucak karattilum cakala vāṉattilum Paṅkukoṇṭa yōkikaḷ paramavācal añciṉum Ciṅkanāta ōcaiyum civāyamalla tillaiyē. 206 |
| அசவை - அசுபா மந்திரம் | Acavai - acupā mantiram |
| அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள் அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்; அஞ்செழுத்தும் நெஞ்சழுத்து அவ்வெழுத் தறிந்தபின் அஞ்செழுத்தும் அவ்வின்வண்ணம் ஆனதே சிவாயமே. 207 |
Añceḻuttum mūṉṟeḻuttum eṉṟuraikkum aṉparkāḷ Añceḻuttum mūṉṟeḻuttum allakāṇum apporuḷ; Añceḻuttum neñcaḻuttu avveḻut taṟintapiṉ Añceḻuttum avviṉvaṇṇam āṉatē civāyamē. 207 |
| ஆதரித்த மந்திரம் அமைந்தஆக மங்களும் மாதர்மக்கள் சுற்றமும் மயக்கவந்த நித்திரை ஏதுபுக் கொளித்ததோ, எங்கும்ஆகி நின்றதோ? சோதிபுக் கொளித்திடம் சொல்லடா சுவாமியே. 208 |
Ātaritta mantiram amaintaāka maṅkaḷum Mātarmakkaḷ cuṟṟamum mayakkavanta nittirai Ētupuk koḷittatō, eṅkumāki niṉṟatō? Cōtipuk koḷittiṭam collaṭā cuvāmiyē. 208 |
| அக்கரம் அனாதியோ, ஆத்துமா அனாதியோ? புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ? தக்கமிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ? மிக்கவந்த யோகிகாள், விரைந்துரைக்க வேணுமே. 209 |
Akkaram aṉātiyō, āttumā aṉātiyō? Pukkirunta pūtamum pulaṉkaḷum aṉātiyō? Takkamikka nūlkaḷum catācivam aṉātiyō? Mikkavanta yōkikāḷ, virainturaikka vēṇumē. 209 |
| ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில் ஒன்பதாம் ராமராம ராமஎன்னும் நாமமே வன்மமான பேர்கள்வாக்கில் வந்துநோய் அடைப்பதாம் அன்பரான பேர்கள்வாக்கில் ஆழ்ந்தமைந்து இருப்பதே. 210 |
Oṉpatāṉa vācaltāṉ oḻiyunāḷ irukkaiyil Oṉpatām rāmarāma rāmaeṉṉum nāmamē Vaṉmamāṉa pērkaḷvākkil vantunōy aṭaippatām Aṉparāṉa pērkaḷvākkil āḻntamaintu iruppatē. 210 |
| அள்ளிநீரை இட்டதேது? அங்கையில் குழைந்ததேது? மெள்ளவே முணமுணவென்று விளம்புகின்ற மூடர்காள் கள்ளவேடம் இட்டதேது கண்ணைமூடி விட்டதேது? மெள்ளவே குருக்களே, விளம்பிடீர் விளம்பிடீர். 211 |
Aḷḷinīrai iṭṭatētu? aṅkaiyil kuḻaintatētu? Meḷḷavē muṇamuṇaveṉṟu viḷampukiṉṟa mūṭarkāḷ Kaḷḷavēṭam iṭṭatētu kaṇṇaimūṭi viṭṭatētu? Meḷḷavē kurukkaḷē, viḷampiṭīr viḷampiṭīr. 211 |
| அன்னைகர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம் முன்னையே தரித்தும் பனித்துளிபோலாகுமே; உன்னிதொக் குளழலும் தூமையுள்ளுளே அடங்கிடும் பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே. 212 |
Aṉṉaikarppat tūmaiyil avataritta cukkilam Muṉṉaiyē tarittum paṉittuḷipōlākumē; Uṉṉitok kuḷaḻalum tūmaiyuḷḷuḷē aṭaṅkiṭum Piṉṉaiyē piṟappatum tūmaikāṇum pittarē. 212 |
| அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே, அழுக்கிருந்தது எவ்விடம், அழகில்லாதது எவ்விடம். அழுக்கிருந்தது எவ்விடத்து அழுக்கறுக்க வல்லீரேல் அழுக்கிலாதது சோதியோடு அணுகிவாழ லாகுமே. 213 |
Aḻukkaṟat tiṉaṅkuḷittu aḻukkaṟāta māntarē, Aḻukkiruntatu evviṭam, aḻakillātatu evviṭam. Aḻukkiruntatu evviṭattu aḻukkaṟukka vallīrēl Aḻukkilātatu cōtiyōṭu aṇukivāḻa lākumē. 213 |
| அணுத்திரண்ட கண்டமாய் அனைத்துபல்லி யோனியாய் மனுப்பிறந்து ஓதிவைத்த நூலிலே மயங்குறீர் சனிப்பதுஏது; சாவதுஏது; தாபரத்தின் ஊடுபோய் நினைப்பதுஏது? நிற்பதுஏது; நீர்நினைந்து பாருமே. 214 |
Aṇuttiraṇṭa kaṇṭamāy aṉaittupalli yōṉiyāy Maṉuppiṟantu ōtivaitta nūlilē mayaṅkuṟīr Caṉippatuētu; cāvatuētu; tāparattiṉ ūṭupōy Niṉaippatuētu? niṟpatuētu; nīrniṉaintu pārumē. 214 |
| ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம் சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை போதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள், சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே! 215 |
Ātiyāki aṇṭaraṇṭam appuṟattum appuṟam Cōtiyāki niṉṟilaṅku curutināta cōmaṉai Pōtiyāmal tammuḷē peṟṟuṇarnta ñāṉikaḷ, Cātipētam eṉpatoṉṟu caṟṟumillai illaiyē! 215 |
| ஆக்கைமூப்பது இல்லையே ஆதிகா ரணத்திலே நாக்கைமூக்கையுள் மடித்து நாதநாடி யூடுபோய் ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லீரேல் பார்க்கப்பார்க்கத் திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே. 216 |
Ākkaimūppatu illaiyē ātikā raṇattilē Nākkaimūkkaiyuḷ maṭittu nātanāṭi yūṭupōy Ēkkaṟutti reṭṭaiyum iṟukkaḻutta vallīrēl Pārkkappārkkat tikkellām parappirammam ākumē. 216 |
| அஞ்சும்அஞ்சும் அஞ்சும்அஞ்சும் அல்லல்செய்து நிற்பதும் அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும் அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லீரேல் அஞ்சும்அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே. 217 |
Añcumañcum añcumañcum allalceytu niṟpatum Añcumañcum añcumē amarntuḷē iruppatum Añcumañcum añcumē ātarikka vallīrēl Añcumañcum ummuḷē amarntatē civāyamē. 217 |
| அஞ்செழுத்தி னாதியாய் அமர்ந்துநின்றது ஏதடா? நெஞ்செழுத்தி நின்றுகொண்டு நீசெபிப்பது ஏதடா? அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா? பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்துரைக்க வேண்டுமே. 218 |
Añceḻutti ṉātiyāy amarntuniṉṟatu ētaṭā? Neñceḻutti niṉṟukoṇṭu nīcepippatu ētaṭā? Añceḻuttiṉ vāḷatāl aṟuppatāvatu ētaṭā? Piñceḻuttiṉ nērmaitāṉ piritturaikka vēṇṭumē. 218 |
| உயிரிருந்தது எவ்விடம்? உடம்பெடுப்பு தன்முனம்? உயிரதாவது ஏதடா? உடம்பதாவது ஏதடா? உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா? உயிரினால் உடம்பெடுத்த உண்மைஞானி சொல்லடா. 219 |
Uyiriruntatu evviṭam? uṭampeṭuppu taṉmuṉam? Uyiratāvatu ētaṭā? uṭampatāvatu ētaṭā? Uyiraiyum uṭampaiyum oṉṟuvippatu ētaṭā? Uyiriṉāl uṭampeṭutta uṇmaiñāṉi collaṭā. 219 |
| சுழித்தவோர் எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே துன்ப்இன்ப முங்கடந்து செல்லுமூல நாடிகள் அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே ஆறுபங்க யம்கலந்து அப்புறத் தலத்துளே. 220 |
Cuḻittavōr eḻuttaiyum coṉmukattu iruttiyē Tuṉpiṉpa muṅkaṭantu cellumūla nāṭikaḷ Aḻuttamāṉa akkaram aṅkiyuḷ eḻuppiyē Āṟupaṅka yamkalantu appuṟat talattuḷē. 220 |
| உருத்தரிப்ப தற்குமுன் உயிர்புகுந்த நாதமும் கருத்தரிப்ப தற்குமுன் காயம் என்ன சோணிதம் அருள்தரிப்ப தற்குமுன் அறிவுமூலா தாரமாம் குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடும் குருக்களே. 221 |
Uruttarippa taṟkumuṉ uyirpukunta nātamum Karuttarippa taṟkumuṉ kāyam eṉṉa cōṇitam Aruḷtarippa taṟkumuṉ aṟivumūlā tāramām Kuṟittaṟintu koḷḷuvīr kuṇaṅkeṭum kurukkaḷē. 221 |
| எங்கும்உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின் பங்குகூறு போடுவார், பாடுசென்று அணுகிலார் எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ? உங்கள்பேதம் அன்றியே உண்மைஇரண்டு இல்லையே? 222 |
Eṅkumuḷḷa īcaṉār emmuṭal pukuntapiṉ Paṅkukūṟu pōṭuvār, pāṭuceṉṟu aṇukilār Eṅkaḷteyvam uṅkaḷteyvam eṉṟiraṇṭu pētamō? Uṅkaḷpētam aṉṟiyē uṇmaiiraṇṭu illaiyē? 222 |
| அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்ப் பெரியதாகி உலகுதன்னில் நின்றபாதம் ஒன்றலோ விரிவதென்று வேறுசெய்த வேடமிட்ட மூடரே, அறிவினோடு பாரும்இங்கும் அங்கும் ஒன்றதே. 223 |
Ariyumāki ayaṉumāki aṇṭameṅkum oṉṟatāyp Periyatāki ulakutaṉṉil niṉṟapātam oṉṟalō Virivateṉṟu vēṟuceyta vēṭamiṭṭa mūṭarē, Aṟiviṉōṭu pārumiṅkum aṅkum oṉṟatē. 223 |
| வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர் சிந்தையுள் நினைந்துமே தினம்செபிக்கு மந்திரம் முந்துமந்தி ரத்திலோ, மூலமந்திரத்திலோ, எந்தமந்தி ரத்திலோ ஈசன்வந்து இயங்குமே? 224 |
Ventanīṟu meykkaṇintu vēṭamum tarikkiṟīr Cintaiyuḷ niṉaintumē tiṉamcepikku mantiram Muntumanti rattilō, mūlamantirattilō, Entamanti rattilō īcaṉvantu iyaṅkumē? 224 |
| அகாரகார ணத்திலே அனேகனேக ரூபமாய் உகாரகார ணத்திலே உருத்தரித்து நின்றனன் மகாரகார ணத்திலே மயங்குகின்ற வையகம் சிகாரகார ணத்திலே தெளிந்ததே சிவாயமே. 225 |
Akārakāra ṇattilē aṉēkaṉēka rūpamāy Ukārakāra ṇattilē uruttarittu niṉṟaṉaṉ Makārakāra ṇattilē mayaṅkukiṉṟa vaiyakam Cikārakāra ṇattilē teḷintatē civāyamē. 225 |
| அவ்வெழுத்தில் உவ்வுவந்து அகாரமும் சனித்ததோ? உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றைஒன்றி நின்றதோ! செவ்வைஒத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும் மிவ்வையொத்த ஞானிகாள், விரித்துரைக்க வேணுமே. 226 |
Avveḻuttil uvvuvantu akāramum caṉittatō? Uvveḻuttu mavveḻuttum oṉṟaioṉṟi niṉṟatō! Cevvaiottu niṉṟalō civapataṅkaḷ cēriṉum Mivvaiyotta ñāṉikāḷ, viritturaikka vēṇumē. 226 |
| மிவ்வை - நற்குணம் | Mivvai - naṟkuṇam |
| ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும் சோதியான மூன்றிலும் சொரூபம்அற்ற ரெண்டிலும் நீதியான தொன்றிலே நிறைந்துநின்ற வத்துவை ஆதியான தொன்றுமே அற்றதஞ் செழுத்துமே. 227 |
Ātiyāṉa añcilum aṉātiyāṉa nālilum Cōtiyāṉa mūṉṟilum corūpamaṟṟa reṇṭilum Nītiyāṉa toṉṟilē niṟaintuniṉṟa vattuvai Ātiyāṉa toṉṟumē aṟṟatañ ceḻuttumē. 227 |
| வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில் ஊனிலாதது ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில் நானிலாதது ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில் தானிலாதது ஒன்றுமில்லை தயங்கி ஆடுகின்றதே! 228 |
Vāṉilātatu oṉṟumillai vāṉumillai vāṉiṭil Ūṉilātatu oṉṟumillai ūṉumillai ūṉiṭil Nāṉilātatu oṉṟumillai nāṉumillai naṇṇiṭil Tāṉilātatu oṉṟumillai tayaṅki āṭukiṉṟatē! 228 |
| சுழித்ததோர் எழுத்தைஉன்னி சொல்லுமுகத்து இருத்தியே துன்ப்இன்ப முங்கடந்து சொல்லும்நாடி யூடுபோய் அழுத்தமான அக்கிரத்தின் அங்கியை எழுப்பியே ஆறுபங்க யம்கடந்து அப்புறத்து வெளியிலே. 229 |
Cuḻittatōr eḻuttaiuṉṉi collumukattu iruttiyē Tuṉpiṉpa muṅkaṭantu collumnāṭi yūṭupōy Aḻuttamāṉa akkirattiṉ aṅkiyai eḻuppiyē Āṟupaṅka yamkaṭantu appuṟattu veḷiyilē. 229 |
| விழுத்தகண் குவித்தபோ தடைந்துபோய் எழுத்தெலாம் விளைந்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில் அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை ஆனதே. 230 |
Viḻuttakaṇ kuvittapō taṭaintupōy eḻuttelām Viḷaintuviṭṭa intiracāla vīṭatāṉa veḷiyilē Aḻuttiṉālu matimayaṅki aṉupavikkum vēḷaiyil Avaṉumuṇṭu nāṉumillai yārumillai āṉatē. 230 |
| நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி ஓடுறீர் நல்லமஞ் சனங்களுண்டு நாதன்உண்டு நம்முளே எல்லைமஞ் சனங்கள்தேடி ஏகபூசை பண்ணினால் தில்லைமேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே. 231 |
Nallamañ caṉaṅkaḷtēṭi nāṭināṭi ōṭuṟīr Nallamañ caṉaṅkaḷuṇṭu nātaṉuṇṭu nammuḷē Ellaimañ caṉaṅkaḷtēṭi ēkapūcai paṇṇiṉāl Tillaimēvum cīvaṉum civapatattuḷ āṭumē. 231 |
| உயிர்அகத்தில் நின்றிடும் உடம்பெடுத்த தற்குமுன் உயிர்அகாரம் ஆயிடும் உடல்உகாரம் ஆயிடும் உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச்சிவம் உயிரினால் உடம்புதான் எடுத்தவாறு உரைக்கினேன். 232 |
Uyirakattil niṉṟiṭum uṭampeṭutta taṟkumuṉ Uyirakāram āyiṭum uṭalukāram āyiṭum Uyiraiyum uṭampaiyum oṉṟuvippatu accivam Uyiriṉāl uṭamputāṉ eṭuttavāṟu uraikkiṉēṉ. 232 |
| அண்டம்ஏழும் உழலவே அனந்தயோனி உழலவே பண்டைமால், அயனுடன் பரந்துநின்று உழலவே எண்திசை கடந்துநின்ற இருண்டசத்தி உழலவே அண்டரண்டம் ஒன்றதாய் ஆதிநட்டம் ஆடுமே. 233 |
Aṇṭamēḻum uḻalavē aṉantayōṉi uḻalavē Paṇṭaimāl, ayaṉuṭaṉ parantuniṉṟu uḻalavē Eṇticai kaṭantuniṉṟa iruṇṭacatti uḻalavē Aṇṭaraṇṭam oṉṟatāy ātinaṭṭam āṭumē. 233 |
| உருவநீர் உறுப்புகொண்டு உருத்தரித்து வைத்திடும் பெரியபாதை பேசுமோ பிசாசைஒத்த மூடரே, கரியமாலம் அயனுமாக காணொணாத கடவுளை உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே. 234 |
Uruvanīr uṟuppukoṇṭu uruttarittu vaittiṭum Periyapātai pēcumō picācaiotta mūṭarē, Kariyamālam ayaṉumāka kāṇoṇāta kaṭavuḷai Urimaiyāka ummuḷē uṇarntuṇarntu koḷḷumē. 234 |
| பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அதென்றுநீர் எண்ணமுற்றும் என்னபேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள் பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும் ஒண்ணுமாகி உலகளித்த ஒன்றைநெஞ்சில் உண்ணுமே. 235 |
Paṇṇivaitta kallaiyum paḻamporuḷ ateṉṟunīr Eṇṇamuṟṟum eṉṉapēr uraikkiṟīrkaḷ ēḻaikāḷ Paṇṇavum paṭaikkavum paṭaittuvaittu aḷikkavum Oṇṇumāki ulakaḷitta oṉṟaineñcil uṇṇumē. 235 |
| நாலதான போனியும் நவின்றவிந்தும் ஒன்றதாய் ஆலதான வித்துளே அமர்ந்தொடுங்கு மாறுபோல் சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம் மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே. 236 |
Nālatāṉa pōṉiyum naviṉṟavintum oṉṟatāy Ālatāṉa vittuḷē amarntoṭuṅku māṟupōl Cūlatāṉa uṟpaṉam colvatāṉa mantiram Mēlatāṉa ñāṉikāḷ viritturaikka vēṇumē. 236 |
| அருவமாய் இருந்தபோது அன்னைஅங்கு அறிந்திலை உருவமாய் இருந்தபோது உன்னைநான் அறிந்தனன் குருவினான் தெளிந்துகொண்டு கோதிலாத ஞானமாம் பருவமான போதலோ பரப்பிரமம் ஆனதே. 237 |
Aruvamāy iruntapōtu aṉṉaiaṅku aṟintilai Uruvamāy iruntapōtu uṉṉaināṉ aṟintaṉaṉ Kuruviṉāṉ teḷintukoṇṭu kōtilāta ñāṉamām Paruvamāṉa pōtalō parappiramam āṉatē. 237 |
| பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும் மறப்பதும் நினைப்பதும் மறைந்ததைத் தெளிந்ததும் துறப்பதும் கொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும் பிறப்பதும் இறப்பதும் பிறந்தவீடு அடங்குமே. 238 |
Piṟappatum iṟappatum piṟantiṭātu iruppatum Maṟappatum niṉaippatum maṟaintatait teḷintatum Tuṟappatum koṭuppatum cukittuvāri uṇpatum Piṟappatum iṟappatum piṟantavīṭu aṭaṅkumē. 238 |
| கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்தமால் விண்ணிலே இருப்பனே மேவிஅங்கு நிற்பனே தன்னுளே இருப்பனே தராதலம் படைத்தவன் என்னுளே இருப்பனே எங்குமாகி நிற்பனே. 239 |
Kaṇṇilē iruppaṉē karuṅkaṭal kaṭaintamāl Viṇṇilē iruppaṉē mēviaṅku niṟpaṉē Taṉṉuḷē iruppaṉē tarātalam paṭaittavaṉ Eṉṉuḷē iruppaṉē eṅkumāki niṟpaṉē. 239 |
| ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும் கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ? ஓடிஇட்ட பிச்சையும் உகந்துசெய்த தர்மமும் சாடிவிட்ட குதிரைபோல் தர்மம்வந்து நிற்குமே. 240 |
Āṭunāṭu tēṭiṉum āṉaicēṉai tēṭiṉum Kōṭivāci tēṭiṉum kuṟukkēvantu niṟkumō? Ōṭiiṭṭa piccaiyum ukantuceyta tarmamum Cāṭiviṭṭa kutiraipōl tarmamvantu niṟkumē. 240 |
| எள்இரும்பு கம்பளி இடும்பருத்தி வெண்கலம் அள்ளிஉண்ட நாதனுக்கோர் ஆடைமாடை வத்திரம் உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதானம் ஈதிரால் மெள்ளவந்து நோய் அனைத்தும் மீண்டிடும் சிவாயமே. 241 |
Eḷirumpu kampaḷi iṭumparutti veṇkalam Aḷḷiuṇṭa nātaṉukkōr āṭaimāṭai vattiram Uḷḷirukkum vētiyarkku uṟṟatāṉam ītirāl Meḷḷavantu nōy aṉaittum mīṇṭiṭum civāyamē. 241 |
| ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே தேரிலே வடத்தைவிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர் ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை போரிலான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே. 242 |
Ūriluḷḷa maṉitarkāḷ orumaṉatāyk kūṭiyē Tērilē vaṭattaiviṭṭu cempaivaittu iḻukkiṟīr Āriṉālum aṟiyoṇāta āticitta nātarai Pōrilāṉa maṉitarpaṇṇum puraḷipārum pārumē. 242 |
| மருள்புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே குருக்கொடுத்த மந்திரம் கொண்டுநீந்த வல்லீரேல் குருக்கொடுத்த தொண்டரும் முகனொடித்த பிள்ளையும் பருத்திபட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே. 243 |
Maruḷpukunta cintaiyāl mayaṅkukiṉṟa māntarē Kurukkoṭutta mantiram koṇṭunīnta vallīrēl Kurukkoṭutta toṇṭarum mukaṉoṭitta piḷḷaiyum Paruttipaṭṭa paṉṉiraṇṭu pāṭutāṉ paṭuvarē. 243 |
| அன்னைகர்ப்ப அறைஅதற்குள் அங்கியின்பிர காசமாய் அந்தறைக்குள் வந்திருந்து அரியவந்து ரூபமாய் தன்னைஒத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய் தங்கநற் பெருமைதந்து தலைவனாய் வளர்ந்ததே. 244 |
Aṉṉaikarppa aṟaiataṟkuḷ aṅkiyiṉpira kācamāy Antaṟaikkuḷ vantiruntu ariyavantu rūpamāy Taṉṉaiottu niṉṟapōtu taṭaiyaṟuttu veḷiyatāy Taṅkanaṟ perumaitantu talaivaṉāy vaḷarntatē. 244 |
| உன்னையற்ப நேரமும் மறந்திருக்க லாகுமோ உள்ளமீது உறைந்தெனை மறைப்பிலாத சோதியைப் பொன்னவென்ற பேரொளிப் பொருவில்லாத ஈசனே பொன்னடிப் பிறப்பில்லாமை என்றுநல்க வேணுமே. 245 |
Uṉṉaiyaṟpa nēramum maṟantirukka lākumō Uḷḷamītu uṟainteṉai maṟaippilāta cōtiyaip Poṉṉaveṉṟa pēroḷip poruvillāta īcaṉē Poṉṉaṭip piṟappillāmai eṉṟunalka vēṇumē. 245 |
| பிடித்ததண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள் தடித்தகோலம் அத்தைவிட்டு சாதிபேதங் கொண்மினோ, வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மைகூற வல்லீரேல் திடுக்கமுற்ற ஈசனைச் சென்றுகூட லாகுமே. 246 |
Piṭittataṇṭum ummatō piramamāṉa pittarkāḷ Taṭittakōlam attaiviṭṭu cātipētaṅ koṇmiṉō, Vaṭittirunta tōrcivattai vāymaikūṟa vallīrēl Tiṭukkamuṟṟa īcaṉaic ceṉṟukūṭa lākumē. 246 |
| சத்திநீ தயவுநீ தயங்குசங்கின் ஓசைநீ சித்திநீ சிவனும்நீ சிவாயமாம் எழுத்துநீ முத்திநீ முதலும்நீ மூவரான தேவர்நீ அத்திபூரம் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே. 247 |
Cattinī tayavunī tayaṅkucaṅkiṉ ōcainī Cittinī civaṉumnī civāyamām eḻuttunī Muttinī mutalumnī mūvarāṉa tēvarnī Attipūram ummuḷē aṟintuṇarntu koḷḷumē. 247 |
| சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே பொத்தகத்தை மெத்தவைத்துப் போதமோதும் பொய்யரே நிட்டைஏது ஞானமேது? நீரிருந்த அட்சரம் பட்டைஏது? சொல்லீரே பாதகக் கபடரே? 248 |
Caṭṭaiyiṭṭu maṇitulaṅkum cāttirac caḻakkarē Pottakattai mettavaittup pōtamōtum poyyarē Niṭṭaiētu ñāṉamētu? nīrirunta aṭcaram Paṭṭaiētu? collīrē pātakak kapaṭarē? 248 |
| உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும் வெண்மையாகி நீரிலே விரைந்துநீர தானதும் தண்மையான காயமே தரித்துஉருவம் ஆனதும் தெண்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே. 249 |
Uṇmaiyāṉa cukkilam upāyamāy iruntatum Veṇmaiyāki nīrilē viraintunīra tāṉatum Taṇmaiyāṉa kāyamē tarittuuruvam āṉatum Teṇmaiyāṉa ñāṉikāḷ teḷinturaikka vēṇumē. 249 |
| வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே அஞ்செழுத்தின் உண்மையை அறிகிலாத மாந்தர்காள் வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லீரேல் அஞ்செழுத்தின் உண்மையை அறிந்துகொள்ள லாகுமே. 250 |
Vañcakap piṟaviyai maṉattuḷē virumpiyē Añceḻuttiṉ uṇmaiyai aṟikilāta māntarkāḷ Vañcakap piṟaviyai vataittiṭavum vallīrēl Añceḻuttiṉ uṇmaiyai aṟintukoḷḷa lākumē. 250 |
| காயிலாத சோலையில் கனியுகந்த வண்டுகள் ஈயிலாத தேனையுண்டு இராப்பகல் உறங்குறீர் பாயிலாத கப்பலேறி அக்கரைப் படுமுனே வாயினால் உரைப்பதாகு மோமவுன ஞானமே. 251 |
Kāyilāta cōlaiyil kaṉiyukanta vaṇṭukaḷ Īyilāta tēṉaiyuṇṭu irāppakal uṟaṅkuṟīr Pāyilāta kappalēṟi akkaraip paṭumuṉē Vāyiṉāl uraippatāku mōmavuṉa ñāṉamē. 251 |
| பேய்கள்பேய்கள் என்கிறீர் பிதற்குகின்ற பேயர்காள், பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோ ஆதிபூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே. 252 |
Pēykaḷpēykaḷ eṉkiṟīr pitaṟkukiṉṟa pēyarkāḷ, Pēykaḷpūcai koḷḷumō piṭāripūcai koḷḷumō Ātipūcai koḷḷumō aṉāti pūcai koḷḷumō Kāyamāṉa pēyalō kaṇakkaṟintu koṇṭatē. 252 |
| மூலமண்ட லத்திலே முச்சதுரம் ஆதியாய் நாலுவாசல் எம்பிரான் நடுஉதித்த மந்திரம் கோலிஎட்டு இதழுமாய் குளிர்ந்தலர்ந்த தீட்டமாய் மேலும்வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே. 253 |
Mūlamaṇṭa lattilē muccaturam ātiyāy Nāluvācal empirāṉ naṭuutitta mantiram Kōlieṭṭu itaḻumāy kuḷirntalarnta tīṭṭamāy Mēlumvēṟu kāṇkilēṉ viḷaintatē civāyamē. 253 |
| ஆதிநாடி நாடிஓடிக் காலைமாலை நீரிலே சோதிமூல மானநாடி சொல்லிறந்த தூவெளி ஆதிகூடி நெற்பறித்தது அகாரமாதி ஆகமம் பேதபேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே. 254 |
Ātināṭi nāṭiōṭik kālaimālai nīrilē Cōtimūla māṉanāṭi colliṟanta tūveḷi Ātikūṭi neṟpaṟittatu akāramāti ākamam Pētapētam ākiyē piṟantuṭal iṟantatē. 254 |
| பாங்கினோடு இருந்துகொண்டு பரமன்அஞ் செழுத்துளே ஓங்கிநாடி மேல்இருந்து உச்சரித்த மந்திரம் மூங்கில்வெட்டி நார்உரித்து முச்சில்செய் விதத்தினில் ஆய்ந்தநூலில் தோன்றுமே அரிந்துணர்ந்து கொள்ளுமே. 255 |
Pāṅkiṉōṭu iruntukoṇṭu paramaṉañ ceḻuttuḷē Ōṅkināṭi mēliruntu uccaritta mantiram Mūṅkilveṭṭi nārurittu muccilcey vitattiṉil Āyntanūlil tōṉṟumē arintuṇarntu koḷḷumē. 255 |
| புண்டரீக மத்தியில் உதித்தெழந்த சோதியை மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லீரேல் கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே. 256 |
Puṇṭarīka mattiyil utitteḻanta cōtiyai Maṇṭalaṅkaḷ mūṉṟiṉōṭu maṉṉukiṉṟa māyaṉai Aṇṭaraṇṭam ūṭaṟuttu aṟintuṇara vallīrēl Kaṇṭakōyil teyvameṉṟu kaiyeṭuppa tillaiyē. 256 |
| புண்டரீகம் - தாமரை | Puṇṭarīkam - tāmarai |
| அம்பலங்கள் சந்தியில் ஆடுகின்ற வம்பனே அன்பனுக்குள் அன்பனாய் நிற்பதுஆதி வீரனே அன்பருக்குள் அன்பராய் நின்றஆதி நாதனே உம்பருக்கு உண்மையாய் நின்றஉண்மை உண்மையே. 257 |
Ampalaṅkaḷ cantiyil āṭukiṉṟa vampaṉē Aṉpaṉukkuḷ aṉpaṉāy niṟpatuāti vīraṉē Aṉparukkuḷ aṉparāy niṉṟaāti nātaṉē Umparukku uṇmaiyāy niṉṟauṇmai uṇmaiyē. 257 |
| அண்ணலாவது ஏதடா? அறிந்துரைத்த மந்திரம் தண்ணலாக வந்தவன் சகலபுராணம் கற்றவன் கண்ணனாக வந்ததன் காரணத் துதித்தவன் ஒண்ணதாவது ஏதடா? உண்மையான மந்திரம்? 258 |
Aṇṇalāvatu ētaṭā? aṟinturaitta mantiram Taṇṇalāka vantavaṉ cakalapurāṇam kaṟṟavaṉ Kaṇṇaṉāka vantataṉ kāraṇat tutittavaṉ Oṇṇatāvatu ētaṭā? uṇmaiyāṉa mantiram? 258 |
| உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி நின்றிடம் மெள்ளவந்து கிட்டிநீர் வினவவேணும் என்கிறீர்? உள்ளதும் புறம்பதும் ஒத்தபோது நாதமாம் கள்ளவாச லைத்திறந்து காணவேணும் மந்திரம். 259 |
Uḷḷatō puṟampatō uyiroṭuṅki niṉṟiṭam Meḷḷavantu kiṭṭinīr viṉavavēṇum eṉkiṟīr? Uḷḷatum puṟampatum ottapōtu nātamām Kaḷḷavāca laittiṟantu kāṇavēṇum mantiram. 259 |
| ஆரலைந்து பூதமாய் அளவிடாத யோனியும் பாரமான தேவரும் பழுதிலாத பாசமும் ஓரொணாத அண்டமும் உலோகலோக லோகமும் சேரவெந்து போயிருந்த தேகம்ஏது செப்புமே? 260 |
Āralaintu pūtamāy aḷaviṭāta yōṉiyum Pāramāṉa tēvarum paḻutilāta pācamum Ōroṇāta aṇṭamum ulōkalōka lōkamum Cēraventu pōyirunta tēkamētu ceppumē? 260 |
| என்னகத்துள் என்னைநான் எங்குநாடி ஓடினேன்? என்னகத்துள் என்னைநான் அறிந்திலாத தாகையால் என்னகத்துள் என்னைநான் அறிந்துமே தெரிந்தபின் என்னகத்துள் என்னைஅன்றி யாதுமொன்று மில்லையே. 261 |
Eṉṉakattuḷ eṉṉaināṉ eṅkunāṭi ōṭiṉēṉ? Eṉṉakattuḷ eṉṉaināṉ aṟintilāta tākaiyāl Eṉṉakattuḷ eṉṉaināṉ aṟintumē terintapiṉ Eṉṉakattuḷ eṉṉaiaṉṟi yātumoṉṟu millaiyē. 261 |
| விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கு மாறுபோல் என்னுள்நின்றும் எண்ணும்ஈசன் என்னகத்திருக் கையால் கண்ணினின்று கண்ணில்தோன்றும் கண்ணிறி விலாமையால் என்னுள்நின்ற என்னையும் யானறிந்தது இல்லையே. 262 |
Viṇṇiṉiṉṟu miṉṉeḻuntu miṉṉoṭuṅku māṟupōl Eṉṉuḷniṉṟum eṇṇumīcaṉ eṉṉakattiruk kaiyāl Kaṇṇiṉiṉṟu kaṇṇiltōṉṟum kaṇṇiṟi vilāmaiyāl Eṉṉuḷniṉṟa eṉṉaiyum yāṉaṟintatu illaiyē. 262 |
| அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய் அடக்கினும் அடக்கொணாத அன்பிருக்கும் என்னுளே கிடக்கினும் இருக்கினும் கிலேசம்வந்து இருக்கினும் நடக்கினும் இடைவிடாத நாதசங் கொலிக்குமே. 263 |
Aṭakkiṉum aṭakkoṇāta ampalattiṉ ūṭupōy Aṭakkiṉum aṭakkoṇāta aṉpirukkum eṉṉuḷē Kiṭakkiṉum irukkiṉum kilēcamvantu irukkiṉum Naṭakkiṉum iṭaiviṭāta nātacaṅ kolikkumē. 263 |
| மட்டுலாவு தண்துழாய் அலங்கலாய் புனற்கழல் வீட்டுவீழில் தாகபோக விண்ணில்மண்ணில் வெளியினும் எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக் கட்டிவீடி லாதுவைத்த காதலின்பம் ஆகுமே. 264 |
Maṭṭulāvu taṇtuḻāy alaṅkalāy puṉaṟkaḻal Vīṭṭuvīḻil tākapōka viṇṇilmaṇṇil veḷiyiṉum Eṭṭiṉōṭu iraṇṭiṉum itattiṉāl maṉantaṉaik Kaṭṭivīṭi lātuvaitta kātaliṉpam ākumē. 264 |
| ஏகமுத்தி மூன்றுமுத்தி நாலுமுத்தி நன்மைசேர் போகமுற்றி புண்ணியத்தில் முத்திஅன்றி முத்தியாய் நாகமுற்றி சயனமாய் நலங்கடல் கடந்ததீ யாகமுற்றி ஆகிநின்ற தென்கொலாதி தேவனே. 265 |
Ēkamutti mūṉṟumutti nālumutti naṉmaicēr Pōkamuṟṟi puṇṇiyattil muttiaṉṟi muttiyāy Nākamuṟṟi cayaṉamāy nalaṅkaṭal kaṭantatī Yākamuṟṟi ākiniṉṟa teṉkolāti tēvaṉē. 265 |
| மூன்றுமுப்பது ஆறினோடு மூன்றுமூன்று மாயமாய் மூன்றுமுத்தி ஆகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்த் தோன்றுசோதி மூன்றுதாய் துலக்கமில் விளக்கதாய் ஏன்றெனாவின் உள்புகுந்த தென்கோலோ நம்ஈசனே. 266 |
Mūṉṟumuppatu āṟiṉōṭu mūṉṟumūṉṟu māyamāy Mūṉṟumutti ākimūṉṟu mūṉṟumūṉṟu mūṉṟumāyt Tōṉṟucōti mūṉṟutāy tulakkamil viḷakkatāy Ēṉṟeṉāviṉ uḷpukunta teṉkōlō namīcaṉē. 266 |
| ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அல்லவற்றுள் ஆயுமாய் ஐந்துமூன்றும் ஒன்றுமாகி நின்றஆதி தேவனே ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் அமைந்தனைத்து நின்றநீ ஐந்தும்ஐந்தும் ஆயநின்னை யாவர்காண வல்லரே. 267 |
Aintum aintum aintumāy allavaṟṟuḷ āyumāy Aintumūṉṟum oṉṟumāki niṉṟaāti tēvaṉē Aintumaintum aintumāy amaintaṉaittu niṉṟanī Aintumaintum āyaniṉṉai yāvarkāṇa vallarē. 267 |
| ஆறும்ஆறும் ஆறுமாய் ஓர்ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் ஏறுசீர் இரண்டுமூன்றும் ஏழும்ஆறும் எட்டுமாய் வேறுவேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய் ஊறும்ஓசை யாய்அமர்ந்த மாயமாம் மாயனே. 268 |
Āṟumāṟum āṟumāy ōraintumaintum aintumāy Ēṟucīr iraṇṭumūṉṟum ēḻumāṟum eṭṭumāy Vēṟuvēṟu ñāṉamāki meyyiṉōṭu poyyumāy Ūṟumōcai yāyamarnta māyamām māyaṉē. 268 |
| எட்டும்எட்டும் எட்டுமாய் ஓர்ஏழும் ஏழுமாய் எட்டும் ஒன்றும் மூன்றுமாகி நின்றஆதி தேவனே எட்டுமாய பாதமோடு இறைஞ்சி நின்றவண்ணமே எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல்நீங்கி நிற்பரே. 269 |
Eṭṭumeṭṭum eṭṭumāy ōrēḻum ēḻumāy Eṭṭum oṉṟum mūṉṟumāki niṉṟaāti tēvaṉē Eṭṭumāya pātamōṭu iṟaiñci niṉṟavaṇṇamē Eṭṭeḻuttum ōtuvārkaḷ allalnīṅki niṟparē. 269 |
| பத்தினோடு பத்துமாய் ஓர்ஏழினோடு ஒன்பதாய் பத்துநாற் திசைக்குள்நின்ற நாடுபெற்ற நன்மையால் பத்துமாய கொத்தமோடும் அத்தலமிக் காதிமால் பத்தர்கட் கலாதுமுத்தி முத்திமுத்தி யாகுமே. 270 |
Pattiṉōṭu pattumāy ōrēḻiṉōṭu oṉpatāy Pattunāṟ ticaikkuḷniṉṟa nāṭupeṟṟa naṉmaiyāl Pattumāya kottamōṭum attalamik kātimāl Pattarkaṭ kalātumutti muttimutti yākumē. 270 |
| வாசியாகி நேசம்ஒன்றி வந்தெதிர்த்த தென்னுக நேசமாக நாளுலாவ நன்மைசேர் பாவங்களில் வீசிமேல் நிமிர்ந்ததோளி யில்லையாக்கி னாய்கழல் ஆசையாய் மறக்கலாது அமரர்ஆகல் ஆகுமே. 271 |
Vāciyāki nēcamoṉṟi vantetirtta teṉṉuka Nēcamāka nāḷulāva naṉmaicēr pāvaṅkaḷil Vīcimēl nimirntatōḷi yillaiyākki ṉāykaḻal Ācaiyāy maṟakkalātu amararākal ākumē. 271 |
| எளியதாக காயமீதில் எம்பிரான் இருப்பிடம் அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும் கொளுகையான சோதியும் குலாவிநின்றது அவ்விடம் வெளியதாகும் ஒன்றிலே விளைந்ததே சிவாயமே. 272 |
Eḷiyatāka kāyamītil empirāṉ iruppiṭam Aḷivuṟātu niṉṟatē akāramum ukāramum Koḷukaiyāṉa cōtiyum kulāviniṉṟatu avviṭam Veḷiyatākum oṉṟilē viḷaintatē civāyamē. 272 |
| அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள் அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள் அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின் அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே. 273 |
Añceḻuttum mūṉṟeḻuttum eṉṟuraikkum aṉparkāḷ Añceḻuttum mūṉṟeḻuttum allakāṇum apporuḷ Añceḻuttai neñcaḻutti avveḻuttai aṟintapiṉ Añceḻuttum mūṉṟeḻuttum avvumām civāyamē. 273 |
| பொய்யுரைக்க போகமென்று பொய்யருக் கிருக்கையால் மெய்யுரைக்க வேண்டுதில்லை மெய்யர்மெய்க் கிலாமையால் வையகத்தில் உண்மைதன்னை வாய்திறக்க அஞ்சினேன் நையவைத்தது என்கொலோ நமசிவாய நாதனே! 274 |
Poyyuraikka pōkameṉṟu poyyaruk kirukkaiyāl Meyyuraikka vēṇṭutillai meyyarmeyk kilāmaiyāl Vaiyakattil uṇmaitaṉṉai vāytiṟakka añciṉēṉ Naiyavaittatu eṉkolō namacivāya nātaṉē! 274 |
| ஒன்றைஒன்று கொன்றுகூட உணவுசெய்து இருக்கினும் மன்றினூடு பொய்களவு மாறுவேறு செய்யினும் பன்றிதேடும் ஈசனைப் பரிந்துகூட வல்லீரேல் அன்றுதேவர் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே. 275 |
Oṉṟaioṉṟu koṉṟukūṭa uṇavuceytu irukkiṉum Maṉṟiṉūṭu poykaḷavu māṟuvēṟu ceyyiṉum Paṉṟitēṭum īcaṉaip parintukūṭa vallīrēl Aṉṟutēvar ummuḷē aṟintuṇarntu koḷḷumē. 275 |
| மன்று - கடை | Maṉṟu - kaṭai |
| மச்சகத் துளேஇவர்ந்து மாயைபேசும் வாயூவை அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொள்விரேல் இச்சைஅற்ற எம்பிரான் எங்கும்ஆகி நிற்பனே அச்சகத் துளேயிருந்து அறுவுணர்த்திக் கொண்டபின். 276 |
Maccakat tuḷēivarntu māyaipēcum vāyūvai Accakattuḷē iruntu aṟivuṇarttik koḷvirēl Iccaiaṟṟa empirāṉ eṅkumāki niṟpaṉē Accakat tuḷēyiruntu aṟuvuṇarttik koṇṭapiṉ. 276 |
| வயலிலே முலைத்தநெல் களையதான வாறுபோல் உலகினோரும் உண்மைகூறில் உய்யுமாறது எங்ஙனே விரகிலே முளைத்தெழுந்த மெய்யலாது பொய்யதாய் நரகிலே பிறந்திருந்து நாடுபட்ட பாடதே. 277 |
Vayalilē mulaittanel kaḷaiyatāṉa vāṟupōl Ulakiṉōrum uṇmaikūṟil uyyumāṟatu eṅṅaṉē Virakilē muḷaitteḻunta meyyalātu poyyatāy Narakilē piṟantiruntu nāṭupaṭṭa pāṭatē. 277 |
| விரகு - விரகதாபம் | Viraku - virakatāpam |
| ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர் தேடுகின்ற பாவிகாள், தெளிந்தஒன்றை ஓர்கிலீர்; காடுநாடு வீடுவீண் கலந்துநின்ற கள்வனை நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே. 278 |
Āṭukiṉṟa empirāṉai aṅkumiṅkum eṉṟunīr Tēṭukiṉṟa pāvikāḷ, teḷintaoṉṟai ōrkilīr; Kāṭunāṭu vīṭuvīṇ kalantuniṉṟa kaḷvaṉai Nāṭiōṭi ummuḷē nayantuṇarntu pārumē. 278 |
| ஆடுகின்ற அண்டர்கூடும் அப்புறம திப்புறம் தேடுநாலு வேதமும் தேவரான மூவரும் நீடுவாழி பூதமும் நின்பதோர் நிலைகளும் ஆடுவாழின் ஒழியலா தனைத்துமில்லை இல்லையே. 279 |
Āṭukiṉṟa aṇṭarkūṭum appuṟama tippuṟam Tēṭunālu vētamum tēvarāṉa mūvarum Nīṭuvāḻi pūtamum niṉpatōr nilaikaḷum Āṭuvāḻiṉ oḻiyalā taṉaittumillai illaiyē. 279 |
| ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே யாவரும் பரத்துளே யானும் அப்பரத்துளே. 280 |
Āvatum parattuḷē aḻivatum parattuḷē Pōvatum parattuḷē pukuvatum parattuḷē Tēvarum parattuḷē ticaikaḷum parattuḷē Yāvarum parattuḷē yāṉum apparattuḷē. 280 |
| ஏழுபார் எழுகடல் இடங்கள்எட்டு வெற்புடன் சூழுவான் கிரிகடந்து சொல்லும் ஏழுலகமும் ஆழிமால் விசும்புகொள் பிரமாண்டரண்ட அண்டமும் ஊழியான் ஒளிக்குளே உதித்துடன் ஒடுங்குமே. 281 |
Ēḻupār eḻukaṭal iṭaṅkaḷeṭṭu veṟpuṭaṉ Cūḻuvāṉ kirikaṭantu collum ēḻulakamum Āḻimāl vicumpukoḷ piramāṇṭaraṇṭa aṇṭamum Ūḻiyāṉ oḷikkuḷē utittuṭaṉ oṭuṅkumē. 281 |
| கயத்துநீர் இறைக்குறீர் கைகள்சோர்ந்து நிற்பதேன்? மனத்துள்ஈரம் ஒன்றிலாத மதிஇலாத மாந்தர்காள்; மனத்துள்ஈரம் கொண்டுநீர் அழுக்கறுக்க வல்லீரேல் நினைத்திருந்த சோதியும் நீயும்நானும் ஒன்றலோ? 282 |
Kayattunīr iṟaikkuṟīr kaikaḷcōrntu niṟpatēṉ? Maṉattuḷīram oṉṟilāta matiilāta māntarkāḷ; Maṉattuḷīram koṇṭunīr aḻukkaṟukka vallīrēl Niṉaittirunta cōtiyum nīyumnāṉum oṉṟalō? 282 |
| நீரிலே பிறந்திருந்து நீர்சடங்கு செய்கிறீர் ஆரைஉன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர் வேரைஉன்னி வித்தைஉன்னி வித்திலே முளைத்தெழும் சீரைஉன்ன வல்லீரேல் சிவபதம் அடைவிரே. 283 |
Nīrilē piṟantiruntu nīrcaṭaṅku ceykiṟīr Āraiuṉṉi nīrelām avattilē iṟaikkiṟīr Vēraiuṉṉi vittaiuṉṉi vittilē muḷaitteḻum Cīraiuṉṉa vallīrēl civapatam aṭaivirē. 283 |
| பத்தொடொத்த வாசலில் பரந்துமூல வக்கரம் முத்திசித்தி தொந்தமென்று இயங்குகின்ற மூலமே மத்தசித்த ஐம்புலன் மாகரமான கூத்தையே அத்தியூரர் தம்முளே அமைந்ததே சிவாயமே. 284 |
Pattoṭotta vācalil parantumūla vakkaram Mutticitti tontameṉṟu iyaṅkukiṉṟa mūlamē Mattacitta aimpulaṉ mākaramāṉa kūttaiyē Attiyūrar tammuḷē amaintatē civāyamē. 284 |
| அணுவினோடும் அண்டமாய் அளவிடாத சோதியைக் குணமதாகி உம்முளே குறித்திருக்கில் முத்தியாம் முணமுணென்று உம்முளே விரலைஒன்றி மீளவும் தினந்தினம் மயக்குவீர் செம்புபூசை பண்ணியே. 285 |
Aṇuviṉōṭum aṇṭamāy aḷaviṭāta cōtiyaik Kuṇamatāki ummuḷē kuṟittirukkil muttiyām Muṇamuṇeṉṟu ummuḷē viralaioṉṟi mīḷavum Tiṉantiṉam mayakkuvīr cempupūcai paṇṇiyē. 285 |
| மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம் மூடமாக மூடுகின்ற மூடமேது *முடரே காலனான அஞ்சுபூதம் அஞ்சிலே ஒடுங்கினால் ஆலயோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ? 286 |
Mūlamāṉa akkaram mukappataṟku muṉṉelām Mūṭamāka mūṭukiṉṟa mūṭamētu *muṭarē Kālaṉāṉa añcupūtam añcilē oṭuṅkiṉāl Ālayōṭu kūṭumō aṉātiyōṭu kūṭumō? 286 |
| முச்சதுர மூலமாகி முடிவுமாகி ஏகமாய் அச்சதுரம் ஆகியே அடங்கியோர் எழுத்துமாய் மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய் உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே. 287 |
Muccatura mūlamāki muṭivumāki ēkamāy Accaturam ākiyē aṭaṅkiyōr eḻuttumāy Meyccatura meyyuḷē viḷaṅkuñāṉa tīpamāy Uccarikkum mantirattiṉ uṇmaiyē civāyamē. 287 |
| வண்டுலங்கள் போலும்நீர் மனத்துமாசு அறுக்கிலீர் குண்டலங்கள் போலுநீர் குளத்திலே முழுகுறீர் பண்டும் உங்கள் நான்முகன் பறந்துதேடி காண்கிலான், கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே. 288 |
Vaṇṭulaṅkaḷ pōlumnīr maṉattumācu aṟukkilīr Kuṇṭalaṅkaḷ pōlunīr kuḷattilē muḻukuṟīr Paṇṭum uṅkaḷ nāṉmukaṉ paṟantutēṭi kāṇkilāṉ, Kaṇṭirukkum ummuḷē kalantiruppar kāṇumē. 288 |
| நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூறிதன்று பந்தமன்று வீடுமன்று பாவகங்கள் அற்றது. கெந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே அந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே உரைப்பதே. 289 |
Niṉṟataṉṟu iruntataṉṟu nēritaṉṟu kūṟitaṉṟu Pantamaṉṟu vīṭumaṉṟu pāvakaṅkaḷ aṟṟatu. Kentamaṉṟu kēḷviyaṉṟu kēṭilāta vāṉilē Antamiṉṟi niṉṟatoṉṟai eṅṅaṉē uraippatē. 289 |
| பொருந்துநீரும் உம்முளே புகுந்துநின்ற காரணம் எருதிரண்டு கன்றைஈன்ற ஏகமொன்றை ஓர்கிலிர் அருகிருந்து சாவுகின்ற ஆவையும் அறிந்திலீர் குருவிருந்து உலாவுகின்ற கோலம்என்ன கோலமே? 290 |
Poruntunīrum ummuḷē pukuntuniṉṟa kāraṇam Erutiraṇṭu kaṉṟaiīṉṟa ēkamoṉṟai ōrkilir Arukiruntu cāvukiṉṟa āvaiyum aṟintilīr Kuruviruntu ulāvukiṉṟa kōlameṉṉa kōlamē? 290 |
| அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ? சிம்புகளாய்ப் பரந்துநின்ற சிற்பரமும் நீயலோ? எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால் எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே. 291 |
Amparattuḷ āṭukiṉṟa añceḻuttu nīyalō? Cimpukaḷāyp parantuniṉṟa ciṟparamum nīyalō? Empirāṉum evvuyirkkum ēkapōkam ātalāl Empirāṉum nāṉumāy iruntatē civāyamē. 291 |
| ஈரொளிய திங்களே இயங்கிநின்றது தற்பரம் ஏரொளீய திங்களே அஃது யாவரும் அறிகிலீர் காரொளிப் படலமும் கடந்துபோன தற்பரம் தாரொளிப் பெரும்பதம் ஏகநாத பாதமே. 292 |
Īroḷiya tiṅkaḷē iyaṅkiniṉṟatu taṟparam Ēroḷīya tiṅkaḷē aḥtu yāvarum aṟikilīr Kāroḷip paṭalamum kaṭantupōṉa taṟparam Tāroḷip perumpatam ēkanāta pātamē. 292 |
| கொள்ளொணாது மெல்லொணாது கோதாறக் குதட்டடா தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத்துளே தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன் விள்ளொணாது பொருளைநான் விளம்புமாறது எங்ஙனே? 293 |
Koḷḷoṇātu melloṇātu kōtāṟak kutaṭṭaṭā Taḷḷoṇātu aṇukoṇātu ākalāṉ maṉattuḷē Teḷḷoṇātu teḷiyoṇātu ciṟparattiṉ uṭpayaṉ Viḷḷoṇātu poruḷaināṉ viḷampumāṟatu eṅṅaṉē? 293 |
| வாக்கினால் மனத்தினால் மதித்தகார ணத்தினால் நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார் நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில் நோக்கொணாத நோக்குவந்து நோக்கைஎங்கண் நோக்குமே. 294 |
Vākkiṉāl maṉattiṉāl matittakāra ṇattiṉāl Nōkkoṇāta nōkkaiyuṉṉi nōkkaiyāvar nōkkuvār Nōkkoṇāta nōkkuvantu nōkkanōkka nōkkiṭil Nōkkoṇāta nōkkuvantu nōkkaieṅkaṇ nōkkumē. 294 |
| உள்ளினும் புறம்பினும் உலகமெங்கணும் பரந்து எள்ளில்எண்ணெய் போலநின்று இயங்குகின்ற எம்பிரான் மெள்ளவந்து என்னுட்புகுந்து மெய்த்தவம் புரிந்தபின் வள்ளலென்ன வள்ளலுக்கு வண்ணமென்ன வண்ணமே? 295 |
Uḷḷiṉum puṟampiṉum ulakameṅkaṇum parantu Eḷḷileṇṇey pōlaniṉṟu iyaṅkukiṉṟa empirāṉ Meḷḷavantu eṉṉuṭpukuntu meyttavam purintapiṉ Vaḷḷaleṉṉa vaḷḷalukku vaṇṇameṉṉa vaṇṇamē? 295 |
| வேதமொன்று கண்டிலேன் வெம்பிறப்பு இலாமையால் போதம்நின்ற வடிவதாய்ப் புவனமெங்கும் ஆயினாய், சோதியுள் ஒளியுமாய்த் துரியமோடு அதீதமாய் ஆதிமூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே. 296 |
Vētamoṉṟu kaṇṭilēṉ vempiṟappu ilāmaiyāl Pōtamniṉṟa vaṭivatāyp puvaṉameṅkum āyiṉāy, Cōtiyuḷ oḷiyumāyt turiyamōṭu atītamāy Ātimūlam ātiyāy amaintatē civāyamē. 296 |
| சாண்இரு மடங்கினால் சரிந்தகொண்டை தன்னுளே பேணிஅப் பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர், தோணியான ஐவரைத் துறந்தறுக்க வல்லீரேல் காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே. 297 |
Cāṇiru maṭaṅkiṉāl carintakoṇṭai taṉṉuḷē Pēṇiap patikkuḷē piṟantiṟantu uḻaluvīr, Tōṇiyāṉa aivarait tuṟantaṟukka vallīrēl Kāṇikaṇṭu kōṭiyāyk kalantatē civāyamē. 297 |
| அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால் நெஞ்சுகூற உம்முளே நினைப்பதோர் எழுத்துளே அஞ்சுநாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால் அஞ்சும்ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே. 298 |
Añcukōṭi mantiram añcuḷē aṭaṅkiṉāl Neñcukūṟa ummuḷē niṉaippatōr eḻuttuḷē Añcunālu mūṉṟatāki ummuḷē aṭaṅkiṉāl Añcumōr eḻuttatāy amaintatē civāyamē. 298 |
| அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம் சக்கரத்து சிவ்வைருண்டு சம்புளத் திருந்ததும் எள்கரந்த எண்ணெய்போல் எவ்வெழுத்தும் எம்பிரான் உள்கரந்து நின்றநேர்மை யாவர்காண வல்லரே. 299 |
Akkaranta akkarattil uṭkaranta akkaram Cakkarattu civvairuṇṭu campuḷat tiruntatum Eḷkaranta eṇṇeypōl evveḻuttum empirāṉ Uḷkarantu niṉṟanērmai yāvarkāṇa vallarē. 299 |
| ஆகமத்தின் உட்பொருள் அகண்டமூலம் ஆதலால் தாகபோக மின்றியே தரித்ததற் பரமும்நீ ஏகபாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே. 300 |
Ākamattiṉ uṭporuḷ akaṇṭamūlam ātalāl Tākapōka miṉṟiyē tarittataṟ paramumnī Ēkapātam vaittaṉai uṇarttum añceḻuttuḷē Ēkapōkam ākiyē iruntatē civāyamē. 300 |
| மூலவாசல் மீதுளேஓர் முச்சரம் ஆகியே நாலுவாசல் எண்விரல் நடுஉதித்த மந்திரம் கோலம்ஒன்றும் அஞ்சுமாகும் இங்கலைந்து நின்றநீ வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே. 301 |
Mūlavācal mītuḷēōr muccaram ākiyē Nāluvācal eṇviral naṭuutitta mantiram Kōlamoṉṟum añcumākum iṅkalaintu niṉṟanī Vēṟuvēṟu kaṇṭilēṉ viḷaintatē civāyamē. 301 |
| சுக்கிலத் தடியுளே சுழித்ததோர் எழுத்துளே அக்கரத் தடியுளே அமர்ந்தஆதி சோதிநீ உக்கரத் தடியுளே உணர்ந்த அஞ்செழுத்துளே அக்கரம் அதாகியே அமர்ந்ததே சிவாயமே. 302 |
Cukkilat taṭiyuḷē cuḻittatōr eḻuttuḷē Akkarat taṭiyuḷē amarntaāti cōtinī Ukkarat taṭiyuḷē uṇarnta añceḻuttuḷē Akkaram atākiyē amarntatē civāyamē. 302 |
| குண்டலத்து ளேயுளே அறுத்தகத்து நாயகன் கண்டவந்த மண்டலம் கருத்தழித்த கூத்தனை விண்டலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள் கண்டுகொண்ட மண்டலம் சிவாயமல்லது இல்லையே. 303 |
Kuṇṭalattu ḷēyuḷē aṟuttakattu nāyakaṉ Kaṇṭavanta maṇṭalam karuttaḻitta kūttaṉai Viṇṭalarnta cantiraṉ viḷaṅkukiṉṟa meypporuḷ Kaṇṭukoṇṭa maṇṭalam civāyamallatu illaiyē. 303 |
| சுற்றும்ஐந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி சத்தியும் சிவனுமாக நின்றதன்மை ஓர்கிலீர் சத்தியாவு தும்முடல், தயங்குசீவ னுட்சிவம் பித்தர்காள் அறிந்திலீர் பிரான்இருந்த கோலமே. 304 |
Cuṟṟumaintu kūṭamoṉṟu colliṟanta tōrveḷi Cattiyum civaṉumāka niṉṟataṉmai ōrkilīr Cattiyāvu tummuṭal, tayaṅkucīva ṉuṭcivam Pittarkāḷ aṟintilīr pirāṉirunta kōlamē. 304 |
| மூலம்என்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே நாலுவேதம் நாவுளே நவின்றஞான மெய்யுளே ஆலம்உண்ட கண்டனும் அரிஅயனும் ஆதலால் ஓலம்என்ற மந்திரம் சிவாயமல்லது இல்லையே. 305 |
Mūlameṉṟa mantiram muḷaitta añceḻuttuḷē Nāluvētam nāvuḷē naviṉṟañāṉa meyyuḷē Ālamuṇṭa kaṇṭaṉum ariayaṉum ātalāl Ōlameṉṟa mantiram civāyamallatu illaiyē. 305 |
| தத்துவங்கள் என்றுநீர் தமைக்கடிந்து போவீர்காள் தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ? முத்திசீவன் நாதமே மூலபாதம் வைத்தப்பின் அத்தனாரும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே. 306 |
Tattuvaṅkaḷ eṉṟunīr tamaikkaṭintu pōvīrkāḷ Tattuvam civamatākil taṟparamum nīrallō? Mutticīvaṉ nātamē mūlapātam vaittappiṉ Attaṉārum ummuḷē aṟintuṇarntu koḷḷumē. 306 |
| மூன்றுபத்து மூன்றையும் மூன்றுசொன்ன மூலனே தோன்றுசேர ஞானிகாள் துய்யபாதம் என்தலை என்றுவைத்த வைத்தபின் இயல்பும் அஞ்செழுத்தையும் தோன்றஓத வல்லீரேல் துய்யசோதி காணுமே. 307 |
Mūṉṟupattu mūṉṟaiyum mūṉṟucoṉṉa mūlaṉē Tōṉṟucēra ñāṉikāḷ tuyyapātam eṉtalai Eṉṟuvaitta vaittapiṉ iyalpum añceḻuttaiyum Tōṉṟaōta vallīrēl tuyyacōti kāṇumē. 307 |
| உம்பர் வானகத்தினும் உலகபாரம் ஏழினும் நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும் செம்பொன் மாடம் மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான் எம்பிரான் அலாதுதெய்வம் இல்லைஇல்லை இல்லையே. 308 |
Umpar vāṉakattiṉum ulakapāram ēḻiṉum Namparnāṭu taṉṉilum nāvaleṉṟa tīviṉum Cempoṉ māṭam malkutillai ampalattuḷ āṭuvāṉ Empirāṉ alātuteyvam illaiillai illaiyē. 308 |
| பூவலாய் ஐந்துமாய் புனலில்நின்ற நான்குமாய் தீயிலாய மூன்றுமாய்ச் சிறந்தகால் இரண்டுமாய் வேயிலாய தொன்றுமாய் வேறுவேறு தன்மையாய் நீயலாமல் நின்றநேர்மை யாவர்காண வல்லரே? 309 |
Pūvalāy aintumāy puṉalilniṉṟa nāṉkumāy Tīyilāya mūṉṟumāyc ciṟantakāl iraṇṭumāy Vēyilāya toṉṟumāy vēṟuvēṟu taṉmaiyāy Nīyalāmal niṉṟanērmai yāvarkāṇa vallarē? 309 |
| அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவுகால் இரண்டுமாய் செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்தஅப்பு நான்குமாய் ஐந்துபாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனைச் சிந்ததையில் தெளிந்தமாயை யாவர்காண வல்லரே. 310 |
Antarattil oṉṟumāy acaivukāl iraṇṭumāy Centaḻalil mūṉṟumāyc ciṟantaappu nāṉkumāy Aintupāril aintumāy amarntirunta nātaṉaic Cintataiyil teḷintamāyai yāvarkāṇa vallarē. 310 |
| மனவிகாரம் அற்றுநீர் மதித்திருக்க வல்லீரேல் நினைவிலாத மணிவிளக்கு நித்தமாகி நின்றிடும்; அனைவர் ஓதும் வேதமும் அகம்பிதற்ற வேணுமேல் கனவுகண்டது உண்மைநீர் தெளிந்ததே சிவாயமே. 311 |
Maṉavikāram aṟṟunīr matittirukka vallīrēl Niṉaivilāta maṇiviḷakku nittamāki niṉṟiṭum; Aṉaivar ōtum vētamum akampitaṟṟa vēṇumēl Kaṉavukaṇṭatu uṇmainīr teḷintatē civāyamē. 311 |
| இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா? சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா? முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப் பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே. 312 |
Iṭṭakuṇṭam ētaṭā? irukku vētam ētaṭā? Cuṭṭamaṇ kalattilē cuṟṟunūlkaḷ ētaṭā? Muṭṭiniṉṟa tūṇilē muḷaitteḻunta cōtiyaip Paṟṟiniṉṟatu ētaṭā paṭṭanāta paṭṭarē. 312 |
| நீரிலே முளைத்தெழுந்த தாமரையின் ஓரிலை நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல் பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம் பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பீரே. 313 |
Nīrilē muḷaitteḻunta tāmaraiyiṉ ōrilai Nīriṉōṭu kūṭiniṉṟum nīrilāta vāṟupōl Pārilē muḷaitteḻunta paṇṭitap parāparam Pāriṉōṭu kūṭiniṉṟa paṇpukaṇṭu iruppīrē. 313 |
| உறக்கிலென், விழிக்கிலென், உணர்வுசென்று ஒடுங்கிலென் சிறந்த ஐம்புலன்களும் திசைத்திசைகள் ஒன்றிலென்? புறமும்உள்ளும் எங்ஙனம் பொருந்திருந்த தேகமாய் நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பது ஏதும் இல்லையே. 314 |
Uṟakkileṉ, viḻikkileṉ, uṇarvuceṉṟu oṭuṅkileṉ Ciṟanta aimpulaṉkaḷum ticaitticaikaḷ oṉṟileṉ? Puṟamumuḷḷum eṅṅaṉam poruntirunta tēkamāy Niṟaintirunta ñāṉikāḷ niṉaippatu ētum illaiyē. 314 |
| ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர்எழுத்தும் ஒன்றதே வேதம் என்ற தேகமாய் விளம்புகின்றது அன்றிது, நாதம்ஒன்று நான்முகன் மாலும்நானும் ஒன்றதே! ஏதுமின்றி நின்றதொன்றை யான்உணர்ந்த நேர்மையே 315 |
Ōtuvārkaḷ ōtukiṉṟa ōreḻuttum oṉṟatē Vētam eṉṟa tēkamāy viḷampukiṉṟatu aṉṟitu, Nātamoṉṟu nāṉmukaṉ mālumnāṉum oṉṟatē! Ētumiṉṟi niṉṟatoṉṟai yāṉuṇarnta nērmaiyē 315 |
| பொங்கியே தரித்தஅச்சுப் புண்டரீக வெளியிலே தங்கியே தரித்தபோது தாதுமா துளையதாம் அங்கியுள் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்க் கொம்புமேல் வடிவுகொண்டு குருஇருந்த கோலமே. 316 |
Poṅkiyē tarittaaccup puṇṭarīka veḷiyilē Taṅkiyē tarittapōtu tātumā tuḷaiyatām Aṅkiyuḷ carittapōtu vaṭivukaḷ oḷiyumāyk Kompumēl vaṭivukoṇṭu kuruirunta kōlamē. 316 |
| மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறது எங்கெனில் மண்ணினோடு சோதிபோல் கலந்தநாத விந்துவும் அண்ணலோடு சத்தியும் அஞ்சுபஞ்சு பூதமும் மண்ணினோடு கொடுத்தழிப் பாரொடேழும் இன்றுமே. 317 |
Maṇṇuḷōrum viṇṇuḷōrum vantavāṟatu eṅkeṉil Maṇṇiṉōṭu cōtipōl kalantanāta vintuvum Aṇṇalōṭu cattiyum añcupañcu pūtamum Maṇṇiṉōṭu koṭuttaḻip pāroṭēḻum iṉṟumē. 317 |
| ஒடுக்குகின்ற சோதியும் உந்திநின்ற ஒருவனும் நடுத்தலத்தில் ஒருவனும் நடந்துகாலில் ஏறியே விடுத்துநின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய் அடுத்துநின்ற அறிமினோ அனாதிநின்ற ஆதியே. 318 |
Oṭukkukiṉṟa cōtiyum untiniṉṟa oruvaṉum Naṭuttalattil oruvaṉum naṭantukālil ēṟiyē Viṭuttuniṉṟa iruvarōṭu meyyiṉōṭu poyyumāy Aṭuttuniṉṟa aṟimiṉō aṉātiniṉṟa ātiyē. 318 |
| உதித்தமந் திரத்தினும் ஒடுங்கும் அக்கரத்தினும் மதித்தமண் டலத்தினும் மறைந்துநின்ற சோதிநீ, மதித்தமண் டலத்துளே மரித்துநீ இருந்தபின் சிரித்தமண் டலத்துளே சிறந்ததே சிவாயமே. 319 |
Utittaman tirattiṉum oṭuṅkum akkarattiṉum Matittamaṇ ṭalattiṉum maṟaintuniṉṟa cōtinī, Matittamaṇ ṭalattuḷē marittunī iruntapiṉ Cirittamaṇ ṭalattuḷē ciṟantatē civāyamē. 319 |
| திருத்திவைத்த சற்குருவைச் சீர்பெற வணங்கிலீர் குருக்கொடுக்கும் பித்தரே கொண்டுநீந்த வல்லீரோ? குருக்கொடுக்கும் பித்தரும் குருக்கொள்வந்த சீடனும் பருத்திபட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே. 320 |
Tiruttivaitta caṟkuruvaic cīrpeṟa vaṇaṅkilīr Kurukkoṭukkum pittarē koṇṭunīnta vallīrō? Kurukkoṭukkum pittarum kurukkoḷvanta cīṭaṉum Paruttipaṭṭa pāṭutāṉ paṉṉiraṇṭum paṭṭatē. 320 |
| விழித்தகண் துதிக்கவும் விந்துநாத ஓசையும், மேருவும் கடந்தஅண்ட கோளமும் கடந்துபோய் எழுத்தெலாம் அழிந்துவிட்ட இந்திரசால வெளியிலே யானும்நீயு மேகலந்த தென்னதன்மை ஈசனே. 321 |
Viḻittakaṇ tutikkavum vintunāta ōcaiyum, Mēruvum kaṭantaaṇṭa kōḷamum kaṭantupōy Eḻuttelām aḻintuviṭṭa intiracāla veḷiyilē Yāṉumnīyu mēkalanta teṉṉataṉmai īcaṉē. 321 |
| ஓம்நமோ என்றுமுளே பாவையென்று அறிந்தபின், பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின், நானும்நீயும் உண்டடா நலங்குலம் அதுஉண்டடா, ஊணும்ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் உனக்குளே. 322 |
Ōmnamō eṉṟumuḷē pāvaiyeṉṟu aṟintapiṉ, Pāṉuṭal karuttuḷē pāvaiyeṉṟu aṟintapiṉ, Nāṉumnīyum uṇṭaṭā nalaṅkulam atuuṇṭaṭā, Ūṇumūṇum oṉṟumē uṇarntiṭāy uṉakkuḷē. 322 |
| ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதால் நன்புலன்க ளாகிநின்ற நாதருக்கது ஏறுமோ ஐம்புலனை வென்றிடாது அவத்துமே உழன்றிடும் வம்பருக்கும் ஈவதும் கொடுப்பதும் அவத்தமே. 323 |
Aimpulaṉai veṉṟavarkku aṉṉatāṉam īvatāl Naṉpulaṉka ḷākiniṉṟa nātarukkatu ēṟumō Aimpulaṉai veṉṟiṭātu avattumē uḻaṉṟiṭum Vamparukkum īvatum koṭuppatum avattamē. 323 |
| ஆணியான ஐம்புலன்கள் அவையும்மொக்குகள் ஒக்குமோ? யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கு மொக்குமோ? வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே உணர்திரேல் ஊண்உறக்க போகமும் உமக்கெனக்கும் ஒக்குமே. 324 |
Āṇiyāṉa aimpulaṉkaḷ avaiyummokkukaḷ okkumō? Yōṉiyil piṟantirunta tuṉpamikku mokkumō? Vīṇarkāḷ pitaṟṟuvīr meymaiyē uṇartirēl Ūṇuṟakka pōkamum umakkeṉakkum okkumē. 324 |
| ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்கஅஞ் செழுத்துளே நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள் கூடுகின்ற பண்டித குணங்கள்மூன்று எழுத்துளே ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே. 325 |
Ōṭukiṉṟa aimpulaṉ oṭuṅkaañ ceḻuttuḷē Nāṭukiṉṟa nāṉmaṟai navilukiṉṟa ñāṉikāḷ Kūṭukiṉṟa paṇṭita kuṇaṅkaḷmūṉṟu eḻuttuḷē Āṭukiṉṟa pāvaiyāy amaintatē civāyamē. 325 |
| புவனசக்க ரத்துளே பூதநாத வெளியிலே, பொங்குதீப அங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத் தவனசோமர் இருவரும் தாம்இயங்கும் வாசலில் தண்டுமாறி ஏறிநின்ற சரசமான வெளியிலே. 326 |
Puvaṉacakka rattuḷē pūtanāta veḷiyilē, Poṅkutīpa aṅkiyuḷ potinteḻunta vāyuvait Tavaṉacōmar iruvarum tāmiyaṅkum vācalil Taṇṭumāṟi ēṟiniṉṟa caracamāṉa veḷiyilē. 326 |
| மவுனஅஞ் செழுத்திலே வாசிஏறி மெள்ளவே வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின் அவனும்நானும் மெய்கலந்து அனுபவித்த அளவிலே அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே. 327 |
Mavuṉaañ ceḻuttilē vāciēṟi meḷḷavē Vāṉaḷāy niṟaintacōti maṇṭalam pukuntapiṉ Avaṉumnāṉum meykalantu aṉupavitta aḷavilē Avaṉumuṇṭu nāṉumillai yārumillai yāṉatē. 327 |
| வாளுறையில் வாளடக்கம் வாயுறையில் வாய்வடக்கம் ஆளுறையில் ஆளடக்கம் அருமைஎன்ன வித்தைகாண்! தாளுறையில் தாளடக்கம் தன்மையான தன்மையும் நாளுறையில் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே. 328 |
Vāḷuṟaiyil vāḷaṭakkam vāyuṟaiyil vāyvaṭakkam Āḷuṟaiyil āḷaṭakkam arumaieṉṉa vittaikāṇ! Tāḷuṟaiyil tāḷaṭakkam taṉmaiyāṉa taṉmaiyum Nāḷuṟaiyil nāḷaṭakkam nāṉum nīyum kaṇṭatē. 328 |
| வழுத்திடான் அழித்திடான் மாயரூபம் ஆகிடான் கழன்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும் துவண்டிடான் அசைந்திடான் தூயதூபம் ஆகிடான் சுவன்றிடான் உரைத்திடான் சூட்சசூட்ச சூட்சமே. 329 |
Vaḻuttiṭāṉ aḻittiṭāṉ māyarūpam ākiṭāṉ Kaḻaṉṟiṭāṉ vekuṇṭiṭāṉ kālakāla kālamum Tuvaṇṭiṭāṉ acaintiṭāṉ tūyatūpam ākiṭāṉ Cuvaṉṟiṭāṉ uraittiṭāṉ cūṭcacūṭca cūṭcamē. 329 |
| ஆகிகூவென் றேஉரைத்த அட்சரத்தின் ஆனந்தம் யோகியோகி என்பர்கோடி உற்றறிந்து கண்டிடார் பூகமாய் மனக்குரங்கு பொங்கும்மங்கும் இங்குமாய் ஏகம்ஏக மாகவே இருப்பர்கோடி கோடியே. 330 |
Ākikūveṉ ṟēuraitta aṭcarattiṉ āṉantam Yōkiyōki eṉparkōṭi uṟṟaṟintu kaṇṭiṭār Pūkamāy maṉakkuraṅku poṅkummaṅkum iṅkumāy Ēkamēka mākavē irupparkōṭi kōṭiyē. 330 |
| கோடிகோடி கோடிகோடி குவலயத்தோர் ஆதியை நாடிநாடி நாடிநாடி நாளகன்று வீணதாய்த் தேடிதேடி தேடிதேடித் தேகமும் கசங்கியே கூடிகூடி கூடிகூடி நிற்பர்கோடி கோடியே. 331 |
Kōṭikōṭi kōṭikōṭi kuvalayattōr ātiyai Nāṭināṭi nāṭināṭi nāḷakaṉṟu vīṇatāyt Tēṭitēṭi tēṭitēṭit tēkamum kacaṅkiyē Kūṭikūṭi kūṭikūṭi niṟparkōṭi kōṭiyē. 331 |
| கருத்திலான் வெளுத்திலான் பரன்இருந்த காரணம் இருத்திலான் ஒளித்திலான் ஒன்றும்இரண்டும் ஆகிலான் ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான் கருத்தில்கீயும் கூவும்உற்றோன் கண்டறிந்த ஆதியே. 332 |
Karuttilāṉ veḷuttilāṉ paraṉirunta kāraṇam Iruttilāṉ oḷittilāṉ oṉṟumiraṇṭum ākilāṉ Oruttilāṉ marittilāṉ oḻintiṭāṉ aḻintiṭāṉ Karuttilkīyum kūvumuṟṟōṉ kaṇṭaṟinta ātiyē. 332 |
| வாதிவாதி வாதிவாதி வண்டலை அறிந்திடான் ஊதிஊதி ஊதிஊதி ஒளிமழுங்கி உளறுவான் வீதிவீதி வீதிவீதி விடைஎருப் பொறுக்குவான் சாதிசாதி சாதிசாதி சகாரத்தைக் கண்டிடான். 333 |
Vātivāti vātivāti vaṇṭalai aṟintiṭāṉ Ūtiūti ūtiūti oḷimaḻuṅki uḷaṟuvāṉ Vītivīti vītivīti viṭaierup poṟukkuvāṉ Cāticāti cāticāti cakārattaik kaṇṭiṭāṉ. 333 |
| ஆண்மைஆண்மை ஆண்மைஆண்மை ஆண்மைகூறும் அசடரே காண்மையான வாதிரூபம் காலகால காலமும் பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும் நாண்மையாகி நரலைவாயில் நங்குமிங்கும் அங்குமே. 334 |
Āṇmaiāṇmai āṇmaiāṇmai āṇmaikūṟum acaṭarē Kāṇmaiyāṉa vātirūpam kālakāla kālamum Pāṇmaiyāki mōṉamāṉa pācamāki niṉṟiṭum Nāṇmaiyāki naralaivāyil naṅkumiṅkum aṅkumē. 334 |
| மிங்குஎன்ற அட்சரத்தின் மீட்டுவாகிக் கூவுடன் தூங்கமாகச் சோமனோடு சோமன்மாறி நின்றிடும் அங்கமா முனைச்சுழியில் ஆகும்ஏகம் ஆகையால் கங்குலற்றுக் கியானமுற்றுக் காணவாய் சுடரொளி. 335 |
Miṅkueṉṟa aṭcarattiṉ mīṭṭuvākik kūvuṭaṉ Tūṅkamākac cōmaṉōṭu cōmaṉmāṟi niṉṟiṭum Aṅkamā muṉaiccuḻiyil ākumēkam ākaiyāl Kaṅkulaṟṟuk kiyāṉamuṟṟuk kāṇavāy cuṭaroḷi. 335 |
| சுடரெழும்பும் சூட்சமும் கழிமுனையின் சூட்சமும் அடரெழும்பி ஏகமாக அமர்ந்துநின்ற சூட்சமும் திடரதான சூட்சமும் திரியின்வாலை சூட்சமும் கடலெழும்பு சூட்சமும் கண்டறிந்தோன் ஞானியே. 336 |
Cuṭareḻumpum cūṭcamum kaḻimuṉaiyiṉ cūṭcamum Aṭareḻumpi ēkamāka amarntuniṉṟa cūṭcamum Tiṭaratāṉa cūṭcamum tiriyiṉvālai cūṭcamum Kaṭaleḻumpu cūṭcamum kaṇṭaṟintōṉ ñāṉiyē. 336 |
| ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடிகோடியே வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே தானிலா சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள் மூனிலாமல் கோடிகோடி முன்னறிந்த தென்பரே. 337 |
Ñāṉiñāṉi eṉṟuraitta nāykaḷ kōṭikōṭiyē Vāṉilāta maḻaināḷeṉṟa vātikōṭi kōṭiyē Tāṉilā cākarattiṉ taṉmaikāṇā mūṭarkaḷ Mūṉilāmal kōṭikōṭi muṉṉaṟinta teṉparē. 337 |
| சூட்சமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே வீச்சமான வீயிலே விபுலைதங்கும் வாயிலே கூச்சமான கொம்பிலே குடிஇருந்த கோவிலே தீட்சையான தீவிலே சிறந்ததே சிவாயமே. 338 |
Cūṭcamāṉa kompilē cuḻimuṉaic cuṭarilē Vīccamāṉa vīyilē vipulaitaṅkum vāyilē Kūccamāṉa kompilē kuṭiirunta kōvilē Tīṭcaiyāṉa tīvilē ciṟantatē civāyamē. 338 |
| பொங்கிநின்ற மோனமும் பொதிந்துநின்ற மோனமும் தங்கிநின்ற மோனமும் தயங்கிநின்ற மோனமும் கங்கையான மோனமும் கதித்துநின்ற மோனமும் திங்களான மோனமும் சிவனிருந்த மோனமே. 339 |
Poṅkiniṉṟa mōṉamum potintuniṉṟa mōṉamum Taṅkiniṉṟa mōṉamum tayaṅkiniṉṟa mōṉamum Kaṅkaiyāṉa mōṉamum katittuniṉṟa mōṉamum Tiṅkaḷāṉa mōṉamum civaṉirunta mōṉamē. 339 |
| மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில் பானமான வீதியில் பசைந்தசெஞ் சுடரினில் ஞானமான மூலையில் நரலைதங்கும் வாயிலில், ஓனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே. 340 |
Mōṉamāṉa vītiyil muṉaiccuḻiyiṉ vālaiyil Pāṉamāṉa vītiyil pacaintaceñ cuṭariṉil Ñāṉamāṉa mūlaiyil naralaitaṅkum vāyilil, Ōṉamāṉa ceñcuṭar utittatē civāyamē. 340 |
| உதித்தெழுந்த வாலையும் உயங்கிநின்ற வாலையும் கதித்தெழுந்த வாலையும் காலையான வாலையும் மதித்தெழுந்த வாலையும் மறைந்துநின்ற ஞானமும் கொதித்தெழுந்து கும்பலாகி கூவும்கீயும் ஆனதே. 341 |
Utitteḻunta vālaiyum uyaṅkiniṉṟa vālaiyum Katitteḻunta vālaiyum kālaiyāṉa vālaiyum Matitteḻunta vālaiyum maṟaintuniṉṟa ñāṉamum Kotitteḻuntu kumpalāki kūvumkīyum āṉatē. 341 |
| கூவும்கீயும் மோனமாகி கொள்கையான கொள்கையை மூவிலே உதித்தெழுந்த முச்சுடர் விரிவிலே பூவிலே நறைகள்போலப் பொருந்திநின்ற பூரணம் ஆவிஆவி ஆவிஆவி அன்பருள்ளம் உற்றதே. 342 |
Kūvumkīyum mōṉamāki koḷkaiyāṉa koḷkaiyai Mūvilē utitteḻunta muccuṭar virivilē Pūvilē naṟaikaḷpōlap poruntiniṉṟa pūraṇam Āviāvi āviāvi aṉparuḷḷam uṟṟatē. 342 |
| ஆண்மைகூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியை காண்மையாகக் காண்பீரே கசடறுக்க வல்லீரே தூண்மையான வாதிசூட்சம் சோபமாகும் ஆகுமே நாண்மையான வாயிலில் நடித்துநின்ற நாதமே. 343 |
Āṇmaikūṟum māntarē arukkaṉōṭum vītiyai Kāṇmaiyākak kāṇpīrē kacaṭaṟukka vallīrē Tūṇmaiyāṉa vāticūṭcam cōpamākum ākumē Nāṇmaiyāṉa vāyilil naṭittuniṉṟa nātamē. 343 |
| நாதமான வாயிலில் நடித்துநின்ற சாயலில் வேதமான வீதியில் விரிந்தமுச் சுடரிலே கீதமான கீயிலே கிளர்ந்துநின்ற கூவிலே பூதமான வாயிலைப் புகலறிவன் ஆதியே. 344 |
Nātamāṉa vāyilil naṭittuniṉṟa cāyalil Vētamāṉa vītiyil virintamuc cuṭarilē Kītamāṉa kīyilē kiḷarntuniṉṟa kūvilē Pūtamāṉa vāyilaip pukalaṟivaṉ ātiyē. 344 |
| ஆவிஆவி ஆவிஆவி ஐந்துகொம்பின் ஆவியே மேவிமேவி மேவிமேவி மேதினியில் மானிடர் வாவிவாவி வாவிவாவி வண்டர்கள் அறிந்திடார் பாவிபாவி பாவிபாவி படியிலுற்ற மாந்தரே. 345 |
Āviāvi āviāvi aintukompiṉ āviyē Mēvimēvi mēvimēvi mētiṉiyil māṉiṭar Vāvivāvi vāvivāvi vaṇṭarkaḷ aṟintiṭār Pāvipāvi pāvipāvi paṭiyiluṟṟa māntarē. 345 |
| வித்திலே முளைத்தசோதி வில்வளையின் மத்தியில் முத்திலே ஒளிவதாகி மோனமான தீபமே நத்திலே திரட்சிபோன்ற நாதனை அறிந்திடார் வத்திலே கிடந்துழன்ற வாலையான சூட்சமே. 346 |
Vittilē muḷaittacōti vilvaḷaiyiṉ mattiyil Muttilē oḷivatāki mōṉamāṉa tīpamē Nattilē tiraṭcipōṉṟa nātaṉai aṟintiṭār Vattilē kiṭantuḻaṉṟa vālaiyāṉa cūṭcamē. 346 |
| மாலையோடு காலையும் வடிந்துபொங்கும் மோனமே மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே மூலையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர் தாலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே. 347 |
Mālaiyōṭu kālaiyum vaṭintupoṅkum mōṉamē Mālaiyōṭu kālaiyāṉa vāṟaṟinta māntarē Mūlaiyāṉa kōṇamiṉ muḷaitteḻunta ceñcuṭar Tālaiyōṭu pāṉakaṉṟu taṅki niṉṟa mōṉamē. 347 |
| மோனமான வீதியில் முடுகிநின்ற நாதமே ஈனமின்றி வேகமான வேகம்என்ன வேகமே கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில் ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே. 348 |
Mōṉamāṉa vītiyil muṭukiniṉṟa nātamē Īṉamiṉṟi vēkamāṉa vēkameṉṉa vēkamē Kāṉamāṉa mūlaiyil kaṉintirunta vālaiyil Ñāṉamāṉa ceñcuṭar naṭantatē civāyamē. 348 |
| உச்சிமத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில் பச்சியுற்ற சோமனும் பரந்துநின்று லாவவே செச்சியான தீபமே, தியானமான மோனமே, கச்சியான மோனமே, கடந்ததே சிவாயமே. 349 |
Uccimatti vītiyil oḻintirunta cātiyil Pacciyuṟṟa cōmaṉum parantuniṉṟu lāvavē Cecciyāṉa tīpamē, tiyāṉamāṉa mōṉamē, Kacciyāṉa mōṉamē, kaṭantatē civāyamē. 349 |
| அஞ்சுகொம்பில் நின்றுநாதம் ஆலைபோல் எழும்பியே பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே செஞ்சுடர் உதித்தபோது தேசிகன் கழன்றுடன் பஞ்சபூதம் ஆனதே பறந்துநின்ற மோனமே. 350 |
Añcukompil niṉṟunātam ālaipōl eḻumpiyē Piñciṉōṭu pūmalarntu peṟṟiyuṟṟa cuttamē Ceñcuṭar utittapōtu tēcikaṉ kaḻaṉṟuṭaṉ Pañcapūtam āṉatē paṟantuniṉṟa mōṉamē. 350 |
| சடுதியான கொம்பிலே தத்துவத்தின் இயலிலே அடுதியான ஆவிலே அரன்இருந்த ஊவிலே இடுதிஎன்ற சோலையில் இருந்தமுச் சுடரிலே நடுதிஎன்று நாதம்ஓடி நன்குற அமைந்ததே. 351 |
Caṭutiyāṉa kompilē tattuvattiṉ iyalilē Aṭutiyāṉa āvilē araṉirunta ūvilē Iṭutieṉṟa cōlaiyil iruntamuc cuṭarilē Naṭutieṉṟu nātamōṭi naṉkuṟa amaintatē. 351 |
| அமையுமாலின் மோனமும் அரன்இருந்த மோனமும் சமையும்பூத மோனமும் தரித்திருந்த மோனமும் இமையும்கொண்ட வேகமும் இலங்கும்உச்சி மோனமும் தமையறிந்த மாந்தரே சடத்தைஉற்று நோக்கிலார். 352 |
Amaiyumāliṉ mōṉamum araṉirunta mōṉamum Camaiyumpūta mōṉamum tarittirunta mōṉamum Imaiyumkoṇṭa vēkamum ilaṅkumucci mōṉamum Tamaiyaṟinta māntarē caṭattaiuṟṟu nōkkilār. 352 |
| பாய்ச்சலூர் வழியிலே பரன்இருந்த சுழியிலே காய்ச்சகொம்பின் நுனியிலே கனியிருந்த மலையிலே வீச்சமானது ஏதடா? விரிவுதங்கும் இங்குமே மூச்சினோடு மூச்சைவாங்கு முட்டிநின்ற சோதியே. 353 |
Pāyccalūr vaḻiyilē paraṉirunta cuḻiyilē Kāyccakompiṉ nuṉiyilē kaṉiyirunta malaiyilē Vīccamāṉatu ētaṭā? virivutaṅkum iṅkumē Mūcciṉōṭu mūccaivāṅku muṭṭiniṉṟa cōtiyē. 353 |
| சோதிசோதி என்றுநாடித் தோற்பவர் சிலவரே ஆதிஆதி என்றுநாடும் ஆடவர் சிலவரே வாதிவாதி என்றுசொல்லும் வம்பரும் சிலவரே நீதிநீதி நீதிநீதி நின்றிடும் முழுச்சுடர். 354 |
Cōticōti eṉṟunāṭit tōṟpavar cilavarē Ātiāti eṉṟunāṭum āṭavar cilavarē Vātivāti eṉṟucollum vamparum cilavarē Nītinīti nītinīti niṉṟiṭum muḻuccuṭar. 354 |
| சுடரதாகி எழும்பியங்குத் தூபமான காலமே இடரதாய்ப் புவியும்விண்ணும் ஏகமாய் அமைக்கமுன் படரதாக நின்றஆதி பஞ்சபூதம் ஆகியே அடரதாக அண்டம்எங்கும் ஆண்மையாக நின்றதே. 355 |
Cuṭaratāki eḻumpiyaṅkut tūpamāṉa kālamē Iṭaratāyp puviyumviṇṇum ēkamāy amaikkamuṉ Paṭaratāka niṉṟaāti pañcapūtam ākiyē Aṭaratāka aṇṭameṅkum āṇmaiyāka niṉṟatē. 355 |
| நின்றிருந்த சோதியை நிலத்தில்உற்ற மானிடர் கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்று உலாவுவோர் கண்டமுற்ற மேன்முனையில் காட்சிதன்னைக் காணுவார் கன்றிஅற்று நாலைபொங்கி நாதமும் மகிழ்ந்திடும். 356 |
Niṉṟirunta cōtiyai nilattiluṟṟa māṉiṭar Kaṇṭaṟintu kaṇkuḷirntu kātaluṟṟu ulāvuvōr Kaṇṭamuṟṟa mēṉmuṉaiyil kāṭcitaṉṉaik kāṇuvār Kaṉṟiaṟṟu nālaipoṅki nātamum makiḻntiṭum. 356 |
| வயங்குமோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமும் கயங்கள்போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே பயங்கொடின்றி இன்றியே படர்ந்துநின்ற பான்மையை நயங்கள்கோவென் றேநடுங்கி நங்கையான தீபமே. 357 |
Vayaṅkumōṉac ceñcuṭar vaṭintacōti nātamum Kayaṅkaḷpōlak kataṟiyē karuvūraṟṟa veḷiyilē Payaṅkoṭiṉṟi iṉṟiyē paṭarntuniṉṟa pāṉmaiyai Nayaṅkaḷkōveṉ ṟēnaṭuṅki naṅkaiyāṉa tīpamē. 357 |
| தீபஉச்சி முனையிலே திவாகரத்தின் கழியிலே கோபமாறு கூவிலே கொதித்துநின்ற தீயிலே தாபமான மூலையில் சமைந்துநின்ற சூட்சமும் சாபமான மோட்சமும் தடிந்துநின்று இலங்குமே. 358 |
Tīpaucci muṉaiyilē tivākarattiṉ kaḻiyilē Kōpamāṟu kūvilē kotittuniṉṟa tīyilē Tāpamāṉa mūlaiyil camaintuniṉṟa cūṭcamum Cāpamāṉa mōṭcamum taṭintuniṉṟu ilaṅkumē. 358 |
| திவாகரம் - சூரிய ஒளி | Tivākaram - cūriya oḷi |
| தேசிகன் சுழன்றதே திரிமுனையின் வாலையில் வேசமோடு வாலையில் வியன்இருந்த மூலையில் நேசசந்தி ரோதயம் நிறைந்திருந்த வாயிலில் வீசிவீசி நின்றதே விரிந்துநின்ற மோனமே. 359 |
Tēcikaṉ cuḻaṉṟatē tirimuṉaiyiṉ vālaiyil Vēcamōṭu vālaiyil viyaṉirunta mūlaiyil Nēcacanti rōtayam niṟaintirunta vāyilil Vīcivīci niṉṟatē virintuniṉṟa mōṉamē. 359 |
| உட்கமல மோனமீதில் உயங்கிநின்ற நந்தியை விக்கலோடு கீயுமாகி வில்வளைவின் மத்தியில் முட்பொதிந்தது என்னவே முடுகிநின்ற செஞ்சுடர் கட்குவைகள் போலவும் கடிந்துநின்ற காட்சியே. 360 |
Uṭkamala mōṉamītil uyaṅkiniṉṟa nantiyai Vikkalōṭu kīyumāki vilvaḷaiviṉ mattiyil Muṭpotintatu eṉṉavē muṭukiniṉṟa ceñcuṭar Kaṭkuvaikaḷ pōlavum kaṭintuniṉṟa kāṭciyē. 360 |
| உந்தியில் சுழிவழியில் உச்சியுற்ற மத்தயில் சந்திரன் ஒளிகரணம் தாண்டிநின்ற செஞ்சுடர் பந்தமாக வில்வளைவில் பஞ்சபூத விஞ்சையாம் கிந்துபோல கீயில்நின்று கீச்சுமூச்சு என்றதே. 361 |
Untiyil cuḻivaḻiyil ucciyuṟṟa mattayil Cantiraṉ oḷikaraṇam tāṇṭiniṉṟa ceñcuṭar Pantamāka vilvaḷaivil pañcapūta viñcaiyām Kintupōla kīyilniṉṟu kīccumūccu eṉṟatē. 361 |
| செச்சையென்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும் பச்சையாகி நின்றதே பரவெளியின் பான்மையே இச்சையான ஊவிலே இருந்தெழுந்த ஈயிலே உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே. 362 |
Ceccaiyeṉṟa mūcciṉōṭu cikāramum vakāramum Paccaiyāki niṉṟatē paraveḷiyiṉ pāṉmaiyē Iccaiyāṉa ūvilē irunteḻunta īyilē Ucciyāṉa kōṇattil utittatē civāyamē. 362 |
| ஆறுமூலைக் கோணத்தில் அமைந்தஒன்ப தாத்திலே தாறுமென்று நங்கையான நாவியும் தெரிந்திடக் கூறுமென்று ஐவர்அங்கு கொண்டுநின்ற மோனமே பாறுகொண்டு நின்றது பரந்ததே சிவாயமே. 363 |
Āṟumūlaik kōṇattil amaintaoṉpa tāttilē Tāṟumeṉṟu naṅkaiyāṉa nāviyum terintiṭak Kūṟumeṉṟu aivaraṅku koṇṭuniṉṟa mōṉamē Pāṟukoṇṭu niṉṟatu parantatē civāyamē. 363 |
| பறந்ததே கறந்தபோது பாய்ச்சலூரின் வழியிலே பிறந்ததே பிராணன்அன்றிப் பெண்ணும்ஆணும் அல்லவே துறந்ததோ சிறந்ததோ தூயதுங்கம் ஆனதோ இறந்தபோதில் அன்றதே இலங்கிடும் சிவாயமே. 364 |
Paṟantatē kaṟantapōtu pāyccalūriṉ vaḻiyilē Piṟantatē pirāṇaṉaṉṟip peṇṇumāṇum allavē Tuṟantatō ciṟantatō tūyatuṅkam āṉatō Iṟantapōtil aṉṟatē ilaṅkiṭum civāyamē. 364 |
| அருளிருந்த வெளியிலே அருக்கன்நின்ற இருளிலே பொருளிருந்த சுழியிலே புரண்டெழுந்த வழியிலே தெருளிருந்த கலையிலே தியங்கிநின்ற வலையிலே குருவிருந்த வழியினின்று ஊவும்ஈயும் ஆனதே. 365 |
Aruḷirunta veḷiyilē arukkaṉniṉṟa iruḷilē Poruḷirunta cuḻiyilē puraṇṭeḻunta vaḻiyilē Teruḷirunta kalaiyilē tiyaṅkiniṉṟa valaiyilē Kuruvirunta vaḻiyiṉiṉṟu ūvumīyum āṉatē. 365 |
| ஆனதோர் எழுத்திலே அமைந்துநின்ற ஆதியே கானமோடு தாலமீதில் கண்டறிவது இல்லையே; தானும்தானும் ஆனதே சமைந்தமாலை காலையில் ஏனலோடு மாறுபோல் இருந்ததே சிவாயமே. 366 |
Āṉatōr eḻuttilē amaintuniṉṟa ātiyē Kāṉamōṭu tālamītil kaṇṭaṟivatu illaiyē; Tāṉumtāṉum āṉatē camaintamālai kālaiyil Ēṉalōṭu māṟupōl iruntatē civāyamē. 366 |
| ஆறுகொண்ட வாரியும் அமைத்துநின்ற தெய்வமும் தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூரமும் வீறுகொண்ட மோனமும் விளங்கும் உட்கமலமும் மாறுகொண்ட ஊவிலே மடிந்ததே சிவாயமே. 367 |
Āṟukoṇṭa vāriyum amaittuniṉṟa teyvamum Tūṟukoṇṭa māriyum tulaṅkiniṉṟa tūramum Vīṟukoṇṭa mōṉamum viḷaṅkum uṭkamalamum Māṟukoṇṭa ūvilē maṭintatē civāyamē. 367 |
| வாயில்கண்ட கோணமில் வயங்கும்ஐவர் வைகியே சாயல்கண்டு சார்ந்ததும் தலைமன்னாய் உறைந்ததும் காயவண்டு கண்டதும் கருவூர்அங்குச் சென்றதும் பாயும்என்று சென்றதும் பறந்ததே சிவாயமே. 368 |
Vāyilkaṇṭa kōṇamil vayaṅkumaivar vaikiyē Cāyalkaṇṭu cārntatum talaimaṉṉāy uṟaintatum Kāyavaṇṭu kaṇṭatum karuvūraṅkuc ceṉṟatum Pāyumeṉṟu ceṉṟatum paṟantatē civāyamē. 368 |
| பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே மறந்ததே கவ்வுமுற்ற வாணர்கையின் மேவியே பிறந்ததே இறந்தபோதில் பீடிடாமற் கீயிலே சிறந்துநின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே. 369 |
Paṟantatē tuṟantapōtu pāyccalūr vaḻiyilē Maṟantatē kavvumuṟṟa vāṇarkaiyiṉ mēviyē Piṟantatē iṟantapōtil pīṭiṭāmaṟ kīyilē Ciṟantuniṉṟa mōṉamē teḷintatē civāyamē. 369 |
| வடிவுபத்ம ஆசனத்து இருத்திமூல அனலையே மாருதத்தி னால் எழுப்பி வாசல்ஐந்து நாலையும் முடிவுமுத்தி ரைப்படுத்தி மூலவீணா தண்டினால் முளரிஆல யம்கடந்து மூலநாடி ஊடுபோம். 370 |
Vaṭivupatma ācaṉattu iruttimūla aṉalaiyē Mārutatti ṉāl eḻuppi vācalaintu nālaiyum Muṭivumutti raippaṭutti mūlavīṇā taṇṭiṉāl Muḷariāla yamkaṭantu mūlanāṭi ūṭupōm. 370 |
| அடிதொடக்கி முடியளவும் ஆறுமா நிலம்கடந்து அப்புறத்தில் வெளிகடந்த ஆதிஎங்கள் சோதியை உடுபதிக்கண் அமுதருந்தி உண்மைஞான உவகையுள் உச்சிபட்டு இறங்குகின்ற யோகிநல்ல யோகியே. 371 |
Aṭitoṭakki muṭiyaḷavum āṟumā nilamkaṭantu Appuṟattil veḷikaṭanta ātieṅkaḷ cōtiyai Uṭupatikkaṇ amutarunti uṇmaiñāṉa uvakaiyuḷ Uccipaṭṭu iṟaṅkukiṉṟa yōkinalla yōkiyē. 371 |
| உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி நின்றிடம் மெள்ளவந்து கிட்டிநீர் வினாவவேண்டும் என்கிறீர் உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம் கள்ளவாசலைத் திறந்து காணவேண்டும் மாந்தரே. 372 |
Uḷḷatō puṟampatō uyiroṭuṅki niṉṟiṭam Meḷḷavantu kiṭṭinīr viṉāvavēṇṭum eṉkiṟīr Uḷḷatum piṟappatum ottapōtu nātamām Kaḷḷavācalait tiṟantu kāṇavēṇṭum māntarē. 372 |
| முத்திசித்தி தொந்தமாம் முயங்குகின்ற மூர்த்தியை மற்றுஉதித்த ஐம்புலன்கள் ஆகுமத்தி அப்புலன் அத்தர்நித்தர் காள்கண்டர் அன்பினால் அனுதினம் உச்சரித்து உளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே. 373 |
Mutticitti tontamām muyaṅkukiṉṟa mūrttiyai Maṟṟuutitta aimpulaṉkaḷ ākumatti appulaṉ Attarnittar kāḷkaṇṭar aṉpiṉāl aṉutiṉam Uccarittu uḷattilē aṟintuṇarntu koṇmiṉē. 373 |
| மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்றெழுந்த தேவராய் மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகெலாம் ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய்த் தோன்றும்ஓர் எழுத்தினோடு சொல்லலொன்றும் இல்லையே. 374 |
Mūṉṟiraṇṭum aintumāy muyaṉṟeḻunta tēvarāy Mūṉṟiraṇṭum aintatāy muyaṉṟatē ulakelām Īṉṟatāyum appaṉum iyaṅkukiṉṟa nātamāyt Tōṉṟumōr eḻuttiṉōṭu collaloṉṟum illaiyē. 374 |
| வெளியுருக்கி அஞ்செழுத்து விந்துநாத சந்தமும் தளியுருக்கி நெய்கலந்து சகலசுத்தி ஆனதும் வெளியிலும் அவ்வினையிலும் இருவரை அறிந்தபின் வெளிகடந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே. 375 |
Veḷiyurukki añceḻuttu vintunāta cantamum Taḷiyurukki neykalantu cakalacutti āṉatum Veḷiyilum avviṉaiyilum iruvarai aṟintapiṉ Veḷikaṭanta taṉmaiyāl teḷintatē civāyamē. 375 |
| மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே மந்திரங்கள் கற்றுநீர் மரித்தபோது சொல்வீரோ? மந்திரங்கள் உம்முளே மதித்தநீரும் உம்முளே மந்திரங்கள் ஆவது மனத்தின்ஐந்து எழுத்துமே. 376 |
Mantiraṅkaḷ kaṟṟunīr mayaṅkukiṉṟa māntarē Mantiraṅkaḷ kaṟṟunīr marittapōtu colvīrō? Mantiraṅkaḷ ummuḷē matittanīrum ummuḷē Mantiraṅkaḷ āvatu maṉattiṉaintu eḻuttumē. 376 |
| முப்புறத்தில் அப்புறம் முக்கண்ணன்வினைவிலே சிற்பரத்துள் உற்புனம் சிவாயம்அஞ் செழுத்துமே தற்பரம் உதித்துநின்ற தாணுஎங்கும் ஆனபின் இப்புறம் ஒடுங்குமோடி எங்கும்லிங்கம் ஆனதே. 377 |
Muppuṟattil appuṟam mukkaṇṇaṉviṉaivilē Ciṟparattuḷ uṟpuṉam civāyamañ ceḻuttumē Taṟparam utittuniṉṟa tāṇueṅkum āṉapiṉ Ippuṟam oṭuṅkumōṭi eṅkumliṅkam āṉatē. 377 |
| ஆடிநின்ற சீவன்ஓர் அஞ்சுபஞ்ச பூதமோ கூடிநின்ற சோதியோ, குலாவிநின்ற மூலமோ? நாடுகண்டு நின்றதோ, நாவுகற்ற கல்வியோ? வீடுகண்டு விண்டிடினி வெட்டவெளியும் ஆனதே. 378 |
Āṭiniṉṟa cīvaṉōr añcupañca pūtamō Kūṭiniṉṟa cōtiyō, kulāviniṉṟa mūlamō? Nāṭukaṇṭu niṉṟatō, nāvukaṟṟa kalviyō? Vīṭukaṇṭu viṇṭiṭiṉi veṭṭaveḷiyum āṉatē. 378 |
| உருத்தரித்த போதுசீவன் ஒக்கநின்ற உண்மையும் திருத்தமுள்ளது ஒன்றிலும் சிவாயம்அஞ் செழுத்துமாம். இருத்துநின்று உறுத்தடங்கி ஏகபோகம் ஆனபின் கருத்தினின்று உதித்ததே கபாலம்ஏந்தும் நாதனே. 379 |
Uruttaritta pōtucīvaṉ okkaniṉṟa uṇmaiyum Tiruttamuḷḷatu oṉṟilum civāyamañ ceḻuttumām. Iruttuniṉṟu uṟuttaṭaṅki ēkapōkam āṉapiṉ Karuttiṉiṉṟu utittatē kapālamēntum nātaṉē. 379 |
| கருத்தரித்து உதித்தபோது கமலபீடம் ஆனதும் கருத்தரித்து உதித்தபோது காரணங்கள் ஆனதும் கருத்தரித்து உதித்தபோது காண்இரண்டு கண்களாய்க் கருத்தினின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே. 380 |
Karuttarittu utittapōtu kamalapīṭam āṉatum Karuttarittu utittapōtu kāraṇaṅkaḷ āṉatum Karuttarittu utittapōtu kāṇiraṇṭu kaṇkaḷāyk Karuttiṉiṉṟu utittatē kapālam ēntum nātaṉē. 380 |
| ஆனவன்னி மூன்றுகோணம் ஆறிரண்டு எட்டிலே ஆனசீவன் அஞ்செழுத்து அகாரமிட்டு அலர்ந்ததும் ஆனசோதி உண்மையும் அனாதியான உண்மையும் ஆனதாய் தானதாய் அவலமாய் மறைந்திடும். 381 |
Āṉavaṉṉi mūṉṟukōṇam āṟiraṇṭu eṭṭilē Āṉacīvaṉ añceḻuttu akāramiṭṭu alarntatum Āṉacōti uṇmaiyum aṉātiyāṉa uṇmaiyum Āṉatāy tāṉatāy avalamāy maṟaintiṭum. 381 |
| ஈன்றெழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே நான்றபாம்பின் வாயினால் நாலுதிக்கும் ஆயினான் மூன்றுமூன்று வளையமாய் முப்புரம் கடந்தபின் ஈன்றெழுந்த அவ்வினோசை எங்குமாகி நின்றதே. 382 |
Īṉṟeḻunta empirāṉ tiruvaraṅka veḷiyilē Nāṉṟapāmpiṉ vāyiṉāl nālutikkum āyiṉāṉ Mūṉṟumūṉṟu vaḷaiyamāy muppuram kaṭantapiṉ Īṉṟeḻunta avviṉōcai eṅkumāki niṉṟatē. 382 |
| எங்கும்எங்கும் ஒன்றலோ ஈரேழ்லோகமும் ஒன்றலோ? அங்கும்இங்கும் ஒன்றலோ அனாதியானது ஒன்றலோ? தங்குதாபரங்களும் தரித்தவாரது ஒன்றலோ? உங்கள்எங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே. 383 |
Eṅkumeṅkum oṉṟalō īrēḻlōkamum oṉṟalō? Aṅkumiṅkum oṉṟalō aṉātiyāṉatu oṉṟalō? Taṅkutāparaṅkaḷum tarittavāratu oṉṟalō? Uṅkaḷeṅkaḷ paṅkiṉil utittatē civāyamē. 383 |
| அம்பரத்தில் ஆடும்சோதி யானவன்னி மூலமாம் அம்பரமும் தம்பரமும் அகோரமிட்டு அலர்ந்ததே அம்பரக் குழியிலே அங்கமிட்டு ருக்கிட அம்பரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே. 384 |
Amparattil āṭumcōti yāṉavaṉṉi mūlamām Amparamum tamparamum akōramiṭṭu alarntatē Amparak kuḻiyilē aṅkamiṭṭu rukkiṭa Amparattil ātiyōṭu amarntatē civāyamē. 384 |
| வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை நாவிலே ஓடிநின்று உருவெடுத்து உகாரமாய் அலர்ந்ததும் ஆடிஆடி அங்கமும் அகப்படக் கடந்தபின் கூடிநின்று உலாவுவமே குருவிருந்த கோலமே. 385 |
Vāṭilāta pūmalarntu vaṇṭuricai nāvilē Ōṭiniṉṟu uruveṭuttu ukāramāy alarntatum Āṭiāṭi aṅkamum akappaṭak kaṭantapiṉ Kūṭiniṉṟu ulāvuvamē kuruvirunta kōlamē. 385 |
| விட்டடி விரைத்ததோ அவ்வேர்உருக்கி நின்றதோ எட்டிநின்ற சீவனும் ஈரேழ்லோகம் கண்டதோ? தட்டுருவம் ஆகிநின்ற சதாசிவத்து ஒளியதோ வட்டவீடு அறிந்தபேர்கள் வானதேவர் ஆவரோ. 386 |
Viṭṭaṭi viraittatō avvērurukki niṉṟatō Eṭṭiniṉṟa cīvaṉum īrēḻlōkam kaṇṭatō? Taṭṭuruvam ākiniṉṟa catācivattu oḷiyatō Vaṭṭavīṭu aṟintapērkaḷ vāṉatēvar āvarō. 386 |
| வானவர் நிறைந்தசோதி மானிடக் கருவிலே வானதேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வானவர் வானகமும் மண்ணகமும் வட்டவீடு அறிந்தபின் வானெலாம் நிறைந்தமன்னு மாணிக்கங்கள் ஆனவே. 387 |
Vāṉavar niṟaintacōti māṉiṭak karuvilē Vāṉatēvar attaṉaikkuḷ vantaṭaivar vāṉavar Vāṉakamum maṇṇakamum vaṭṭavīṭu aṟintapiṉ Vāṉelām niṟaintamaṉṉu māṇikkaṅkaḷ āṉavē. 387 |
| பன்னிரண்டு கால்நிறுத்தி பஞ்சவண்ணம் உற்றிடின் மன்னியே வெளிக்குள்நின்று வேறிடத்து அமர்ந்ததும் சென்னியாம் தலத்திலே சீவன்நின்று இயங்கிடும் பன்னிஉன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆனதே. 388 |
Paṉṉiraṇṭu kālniṟutti pañcavaṇṇam uṟṟiṭiṉ Maṉṉiyē veḷikkuḷniṉṟu vēṟiṭattu amarntatum Ceṉṉiyām talattilē cīvaṉniṉṟu iyaṅkiṭum Paṉṉiuṉṉi āyntavar parappirammam āṉatē. 388 |
| உச்சகண்டு கண்கள்கட்டி உண்மைகண்டது எவ்விடம்? மச்சுமாளி கைக்குளே மானிடம் கலப்பிரேல் எச்சிலான வாசலும் ஏகபோகம் ஆய்விடும் பச்சைமாலும் ஈசனும் பரத்ததே சிவாயமே. 389 |
Uccakaṇṭu kaṇkaḷkaṭṭi uṇmaikaṇṭatu evviṭam? Maccumāḷi kaikkuḷē māṉiṭam kalappirēl Eccilāṉa vācalum ēkapōkam āyviṭum Paccaimālum īcaṉum parattatē civāyamē. 389 |
| வாயிலிட்டு நல்லுரிசை அட்சரத் தொலியிலே கோயிலிட்டு வாவியும் அங்கொம்பிலே உலர்ந்ததும் ஆயிலிட்ட காயமும் அனாதியிட்ட சீவனும் வாயுவிட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே. 390 |
Vāyiliṭṭu nalluricai aṭcarat toliyilē Kōyiliṭṭu vāviyum aṅkompilē ularntatum Āyiliṭṭa kāyamum aṉātiyiṭṭa cīvaṉum Vāyuviṭṭa vaṉṉiyum vaḷarntatē civāyamē. 390 |
| அட்சரத்தை உச்சரித்து அனாதியங்கி மூலமாய் அட்சரத்தை யும்திறந்து அகோரமிட்டு அலர்ந்ததும் மட்சரத்தில் உட்கரம் அகப்படக் கடந்தபின் அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே. 391 |
Aṭcarattai uccarittu aṉātiyaṅki mūlamāy Aṭcarattai yumtiṟantu akōramiṭṭu alarntatum Maṭcarattil uṭkaram akappaṭak kaṭantapiṉ Aṭcarattil ātiyōṭu amarntatē civāyamē. 391 |
| கோயிலும் குளங்களும் குறியினிற் குருக்களாய் மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர், ஆயனை அரனையும் அறிந்துணர்ந்து கொள்விரேல் தாயினும் தகப்பனோடு தான்அமர்ந்தது ஒக்குமே. 392 |
Kōyilum kuḷaṅkaḷum kuṟiyiṉiṟ kurukkaḷāy Māyilum maṭiyilum maṉattilē mayaṅkuṟīr, Āyaṉai araṉaiyum aṟintuṇarntu koḷvirēl Tāyiṉum takappaṉōṭu tāṉamarntatu okkumē. 392 |
| கோயில் எங்கும் ஒன்றலோ, குளங்கள்நீர்கள் ஒன்றலோ? தேயுவாயு ஒன்றலோ, சிவனும்அங்கே ஒன்றலோ? ஆயசீவன் எங்குமாய் அமர்ந்துதவாரது ஒன்றலோ? காயம்ஈதறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே. 393 |
Kōyil eṅkum oṉṟalō, kuḷaṅkaḷnīrkaḷ oṉṟalō? Tēyuvāyu oṉṟalō, civaṉumaṅkē oṉṟalō? Āyacīvaṉ eṅkumāy amarntutavāratu oṉṟalō? Kāyamītaṟinta pērkaḷ kāṭciyāvar kāṇumē. 393 |
| காதுகண்கள் மூக்குவாய் கலந்தவாரது ஒன்றலோ? சோதியிட்டு எடுத்ததும் சுகங்கள்அஞ்சும் ஒன்றலோ? ஓதிவைத்த சாத்திரம் உதித்தவாரது ஒன்றலோ? நாதவீடு அறிந்தபேர்கள் நாதர்ஆவர் காணுமே. 394 |
Kātukaṇkaḷ mūkkuvāy kalantavāratu oṉṟalō? Cōtiyiṭṭu eṭuttatum cukaṅkaḷañcum oṉṟalō? Ōtivaitta cāttiram utittavāratu oṉṟalō? Nātavīṭu aṟintapērkaḷ nātarāvar kāṇumē. 394 |
| அவ்வுதித்த அட்சரத்தின் உட்கலந்த அட்சரம் சவ்வுதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால் மவ்வுதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள், உவ்வுதித்தது அவ்வுமாய் உருத்தரித்தது உண்மையே. 395 |
Avvutitta aṭcarattiṉ uṭkalanta aṭcaram Cavvutitta mantiram campuḷattu iruntatāl Mavvutitta māykaiyāl mayaṅkukiṉṟa māntarkāḷ, Uvvutittatu avvumāy uruttarittatu uṇmaiyē. 395 |
| அகாரமென்னும் அக்கரத்தில் அக்கரம் ஒழிந்ததோ? அகாரமென்னும் அக்கரத்தில் அவ்வுவந்து உதித்ததோ? உகாரமும் அகாரமும் ஒன்றிநன்று நின்றதோ? விகாரமற்ற ஞானிகாள், விரிந்துரைக்க வேணுமே. 396 |
Akārameṉṉum akkarattil akkaram oḻintatō? Akārameṉṉum akkarattil avvuvantu utittatō? Ukāramum akāramum oṉṟinaṉṟu niṉṟatō? Vikāramaṟṟa ñāṉikāḷ, virinturaikka vēṇumē. 396 |
| சத்தியாவது உன்னுடல், தயங்குசீவன் உட்சிவம் பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே. சுத்திஐந்து கூடம்ஒன்று சொல்லிறந்த தோர்வெளி சத்திசிவமும் ஆகிநின்று தண்மையாவது உண்மையே. 397 |
Cattiyāvatu uṉṉuṭal, tayaṅkucīvaṉ uṭcivam Pittarkāḷ itaṟkumēl pitaṟṟukiṉṟatu illaiyē. Cuttiaintu kūṭamoṉṟu colliṟanta tōrveḷi Catticivamum ākiniṉṟu taṇmaiyāvatu uṇmaiyē. 397 |
| சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளே முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மேட்டினில் மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய் உச்சரிக்கும் மந்திரம் ஓம்நம சிவாயமே. 398 |
Cukkilat tuḷaiyilē curōṇitak karuvuḷē Muccatura vācalil muḷaitteḻunta mēṭṭiṉil Meyccatura meyyuḷē viḷaṅkuñāṉa tīpamāy Uccarikkum mantiram ōmnama civāyamē. 398 |
| அக்கரம் அனாதிஅல்ல ஆத்துமம் அனாதிஅல்ல புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதிஅல்ல தக்கமிக்க நூல்களும் சாத்திரமும் அனாதிஅல்ல ஒக்கநின்று உடன்கலந்த உண்மைகாண் அனாதியே. 399 |
Akkaram aṉātialla āttumam aṉātialla Pukkirunta pūtamum pulaṉkaḷum aṉātialla Takkamikka nūlkaḷum cāttiramum aṉātialla Okkaniṉṟu uṭaṉkalanta uṇmaikāṇ aṉātiyē. 399 |
| மென்மையாகி நின்றதேது விட்டுநின்று தொட்டதேது? உண்மையாக நீயுரைக்க வேணும்எங்கள் உத்தமா? பெண்மையாக நின்றதொன்று விட்டுநின்று தொட்டதை உண்மையாய் உரைக்கமுத்தி உட்கலந்து இருந்ததே. 400 |
Meṉmaiyāki niṉṟatētu viṭṭuniṉṟu toṭṭatētu? Uṇmaiyāka nīyuraikka vēṇumeṅkaḷ uttamā? Peṇmaiyāka niṉṟatoṉṟu viṭṭuniṉṟu toṭṭatai Uṇmaiyāy uraikkamutti uṭkalantu iruntatē. 400 |
| அடக்கினால் அடங்குமோ அண்டம்அஞ் செழுத்துளே? உடக்கினால் எடுத்தகாயம் உண்மையென்று உணர்ந்துநீ சடக்கிலாறு வேதமும் தரிக்கஓதி லாமையால் விடக்குநாயு மாயவோதி வேறுவேறு பேசுமோ? 401 |
Aṭakkiṉāl aṭaṅkumō aṇṭamañ ceḻuttuḷē? Uṭakkiṉāl eṭuttakāyam uṇmaiyeṉṟu uṇarntunī Caṭakkilāṟu vētamum tarikkaōti lāmaiyāl Viṭakkunāyu māyavōti vēṟuvēṟu pēcumō? 401 |
| உடக்கு - உள்மர்மம் | Uṭakku - uḷmarmam |
| உண்மையான சக்கரம் உபாயமாய் இருந்ததும் தண்மையான காயமும் தரித்தரூபம் ஆனதும் வெண்மையாகி நீரலே விளைந்துநின்ற தானதும் உண்மையான ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே. 402 |
Uṇmaiyāṉa cakkaram upāyamāy iruntatum Taṇmaiyāṉa kāyamum tarittarūpam āṉatum Veṇmaiyāki nīralē viḷaintuniṉṟa tāṉatum Uṇmaiyāṉa ñāṉikāḷ virinturaikka vēṇumē. 402 |
| எள்ளகத்தில் எண்ணெய்போல் எங்குமாகி எம்பிரான் உள்ளகத்தி லேயிருக்க ஊசலாடும் மூடர்காள் கொள்ளைநாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லீரேல் வள்ளலாகி நின்றசோதி காணலாகும் மெய்மையே. 403 |
Eḷḷakattil eṇṇeypōl eṅkumāki empirāṉ Uḷḷakatti lēyirukka ūcalāṭum mūṭarkāḷ Koḷḷaināyiṉ vāliṉaik kuṇakkeṭukka vallīrēl Vaḷḷalāki niṉṟacōti kāṇalākum meymaiyē. 403 |
| வேணும் என்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே தாணுஉண்டங்கு என்கிறீர் தரிக்கிலீர், மறக்கிலீர் தாணுவொன்று மூலநாடி தன்னுள்நாடி உம்முளே காணும்அன்றி வேறுயாவும் கனாமயக்கம் ஒக்குமே. 404 |
Vēṇum eṉṟa ñāṉamum virumpukiṉṟa nūlilē Tāṇuuṇṭaṅku eṉkiṟīr tarikkilīr, maṟakkilīr Tāṇuvoṉṟu mūlanāṭi taṉṉuḷnāṭi ummuḷē Kāṇumaṉṟi vēṟuyāvum kaṉāmayakkam okkumē. 404 |
| வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவக்கிறீர் உழக்கிலாது நாழியான வாறுபோலும் ஊமைகாள், உழக்குநாலு நாழியான வாறுபோலும் உம்முளே வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள்ஈசன் மன்னுமே. 405 |
Vaḻakkilē uraikkiṟīr maṉattuḷē tavakkiṟīr Uḻakkilātu nāḻiyāṉa vāṟupōlum ūmaikāḷ, Uḻakkunālu nāḻiyāṉa vāṟupōlum ummuḷē Vaḻakkilē uraikkiṟīr maṉattuḷīcaṉ maṉṉumē. 405 |
| அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம் உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம் மகாரமானது அம்பலம் வடிவானது அம்பலம் சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே. 406 |
Akāramāṉatu ampalam aṉātiyāṉatu ampalam Ukāramāṉatu ampalam uṇmaiyāṉatu ampalam Makāramāṉatu ampalam vaṭivāṉatu ampalam Cikāramāṉatu ampalam teḷintatē civāyamē. 406 |
| சக்கரம் பறந்தோடி சக்கரம்மேல் பலகையாய் செக்கிலாடும் எண்ணெய்போலச் சிங்குவாயு தேயுவும் உக்கிலே ஒளிக்கலந்து உகங்களும் கலக்கமாய்ப் புக்கிலே புகுந்தபோது போனவாறது எங்ஙனே? 407 |
Cakkaram paṟantōṭi cakkarammēl palakaiyāy Cekkilāṭum eṇṇeypōlac ciṅkuvāyu tēyuvum Ukkilē oḷikkalantu ukaṅkaḷum kalakkamāyp Pukkilē pukuntapōtu pōṉavāṟatu eṅṅaṉē? 407 |
| வளர்ந்தெழுந்த கொங்கைதன்னை மாயமென்று எண்ணிநீர் அருள்கொள்சீவ ராருடம்பை உண்மையகத் தேர்வீர்காள் விளங்குஞானம் மேவியே மிக்கோர்சொல்லலைக் கேட்பிரேல் களங்கமற்று நெஞ்சுளே கருத்துவந்து புக்குமே. 408 |
Vaḷarnteḻunta koṅkaitaṉṉai māyameṉṟu eṇṇinīr Aruḷkoḷcīva rāruṭampai uṇmaiyakat tērvīrkāḷ Viḷaṅkuñāṉam mēviyē mikkōrcollalaik kēṭpirēl Kaḷaṅkamaṟṟu neñcuḷē karuttuvantu pukkumē. 408 |
| நாலுவேதம் ஓதுகின்ற ஞானம்ஒன்று அறிவீரோ? நாலுசாமம் ஆகியே நவின்றஞான போதமாய் ஆலம்உண்ட கண்டனும் அயனும்அந்த மாலுமாய்ச் சாலஉன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே. 409 |
Nāluvētam ōtukiṉṟa ñāṉamoṉṟu aṟivīrō? Nālucāmam ākiyē naviṉṟañāṉa pōtamāy Ālamuṇṭa kaṇṭaṉum ayaṉumanta mālumāyc Cālauṉṉi neñcuḷē tarittatē civāyamē. 409 |
| சுற்றும்என்று சொல்வதும் சுருதிமுடிவில் வைத்திடீர் அத்தம்நித்தம் ஆடியே அர்ந்திருந்தது எவ்விடம்? பத்திமுற்றி அன்பர்கள் பரத்தில்ஒன்று பாழது, பித்தரே, இதைக்கருதி பேசலாவது எங்ஙனே? 410 |
Cuṟṟumeṉṟu colvatum curutimuṭivil vaittiṭīr Attamnittam āṭiyē arntiruntatu evviṭam? Pattimuṟṟi aṉparkaḷ parattiloṉṟu pāḻatu, Pittarē, itaikkaruti pēcalāvatu eṅṅaṉē? 410 |
| எங்ஙனே விளக்கதற்கு ஏற்றவாறு நின்றுதான் எங்ஙனே எழுந்தருளி ஈசன்நேசர் என்பரேல் அங்ஙனே இருந்தருளும் ஆதியான தற்பரம் சிங்கம்அண்மி யானைபோலத் திரிமலங்கள் அற்றவே. 411 |
Eṅṅaṉē viḷakkataṟku ēṟṟavāṟu niṉṟutāṉ Eṅṅaṉē eḻuntaruḷi īcaṉnēcar eṉparēl Aṅṅaṉē iruntaruḷum ātiyāṉa taṟparam Ciṅkamaṇmi yāṉaipōlat tirimalaṅkaḷ aṟṟavē. 411 |
| அற்றவுள் அகத்தையும் அலகிடும் மெழுக்கிடும் மெத்ததீபம் இட்டதில் ப்ரவாதபூசை ஏய்த்தியே நற்றவம் புரிந்தும்ஏக நாதர்பாதம் நாடியே கற்றிருப்ப தேசரிதை கண்டுகொள்ளும் உம்முளே. 412 |
Aṟṟavuḷ akattaiyum alakiṭum meḻukkiṭum Mettatīpam iṭṭatil pravātapūcai ēyttiyē Naṟṟavam purintumēka nātarpātam nāṭiyē Kaṟṟiruppa tēcaritai kaṇṭukoḷḷum ummuḷē. 412 |
| பார்த்துநின்றது அம்பலம் பரமன்ஆடும் அம்பலம் கூத்துநின்றது அம்பலம் கோரமானது அம்பலம் வார்த்தையானது அம்பலம் வன்னியானது அம்பலம் சீற்றமாவது அம்பலம் தெளிந்ததே சிவாயமே. 413 |
Pārttuniṉṟatu ampalam paramaṉāṭum ampalam Kūttuniṉṟatu ampalam kōramāṉatu ampalam Vārttaiyāṉatu ampalam vaṉṉiyāṉatu ampalam Cīṟṟamāvatu ampalam teḷintatē civāyamē. 413 |
| சென்றுசென்று இடந்தொறும் சிறந்தசெம்பொன் அம்பலம் அன்றும்இன்றும் நின்றதோர் அனாதியான அம்பலம் என்றும்என்றும் இருப்பதோர் இறுதியான அம்பலம் ஒன்றிஒன்றி நின்றதுள் ஒனிந்ததே சிவாயமே. 414 |
Ceṉṟuceṉṟu iṭantoṟum ciṟantacempoṉ ampalam Aṉṟumiṉṟum niṉṟatōr aṉātiyāṉa ampalam Eṉṟumeṉṟum iruppatōr iṟutiyāṉa ampalam Oṉṟioṉṟi niṉṟatuḷ oṉintatē civāyamē. 414 |
| தந்தையாய் தருமம்நீ சகலதே வதையும்நீ சிந்துநீ தெளிவும்நீ சித்திமுத்தி தானும்நீ விந்துநீ விளைவுநீ மேலதாய் வேதம்நீ எந்தைநீ இறைவன்நீ என்னை ஆண்ட ஈசனே. 415 |
Tantaiyāy tarumamnī cakalatē vataiyumnī Cintunī teḷivumnī cittimutti tāṉumnī Vintunī viḷaivunī mēlatāy vētamnī Entainī iṟaivaṉnī eṉṉai āṇṭa īcaṉē. 415 |
| எப்பிறப்பி லும்பிறந்து இறந்துஅழிந்த ஏழைகாள் இப்பிறப்பி லும்பிறந்து என்னநீறு பூசுறீர் அப்புடன் மலம்அறுத்தே ஆசைநீக்க வல்லீரேல் செப்புநாத ஓசையில் தெளிந்துகாணல் ஆகுமே. 416 |
Eppiṟappi lumpiṟantu iṟantuaḻinta ēḻaikāḷ Ippiṟappi lumpiṟantu eṉṉanīṟu pūcuṟīr Appuṭaṉ malamaṟuttē ācainīkka vallīrēl Ceppunāta ōcaiyil teḷintukāṇal ākumē. 416 |
| அப்பு - நீர் | Appu - nīr |
| எட்டுயோகம் ஆனதும் இயங்குகின்ற நாதமும் எட்டுஅக்க ரத்துளே உகாரமும் அகாரமும் விட்டலர்ந்து மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய் அட்ட அட்சரத்துளே அமர்ந்ததே சிவாயமே. 417 |
Eṭṭuyōkam āṉatum iyaṅkukiṉṟa nātamum Eṭṭuakka rattuḷē ukāramum akāramum Viṭṭalarntu mantiram vīṇātaṇṭiṉ ūṭupōy Aṭṭa aṭcarattuḷē amarntatē civāyamē. 417 |
| பிரான்பிரான் என்றுநீர் பிதற்றுகின்ற மூடரே பிரானைவிட்டு எம்பிரான் பிரிந்தவாறது எங்ஙனே? பிரானுமாய்ப் பிரானுமாயப் பேருலகந் தானுமாய் பிரானிலே முளைத்தெழுந்த பித்தர்காணும் உம்முடல். 418 |
Pirāṉpirāṉ eṉṟunīr pitaṟṟukiṉṟa mūṭarē Pirāṉaiviṭṭu empirāṉ pirintavāṟatu eṅṅaṉē? Pirāṉumāyp pirāṉumāyap pērulakan tāṉumāy Pirāṉilē muḷaitteḻunta pittarkāṇum ummuṭal. 418 |
| அந்த - முடிவு ஆதியில்லை அந்தமில்லை ஆனநாலு வேதமில்லை சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிறந்த தூவெளி நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும் ஆதிகண்டு கொண்டபின் அஞ்செழித்தும் இல்லையே. 419 |
Anta - muṭivu Ātiyillai antamillai āṉanālu vētamillai Cōtiyillai collumillai colliṟanta tūveḷi Nītiyillai nēcamillai niccayap paṭātatum Ātikaṇṭu koṇṭapiṉ añceḻittum illaiyē. 419 |
| அம்மையப்பன் அப்பன்நீர் அமர்ந்தபோது அறிகிலீர் அம்மையப்பன் ஆனநீர் ஆதியான் பாசமே அம்மையப்பன் நின்னைஅன்றி யாருமில்லை ஆனபின் அம்மையப்பன் நின்னைஅன்றி யாருமில்லை இல்லையே. 420 |
Ammaiyappaṉ appaṉnīr amarntapōtu aṟikilīr Ammaiyappaṉ āṉanīr ātiyāṉ pācamē Ammaiyappaṉ niṉṉaiaṉṟi yārumillai āṉapiṉ Ammaiyappaṉ niṉṉaiaṉṟi yārumillai illaiyē. 420 |
| முந்தஓர் எழுத்துளே முளைத்தெழந்த செஞ்சுடர் அந்தஓர் எழுத்துளே பிறந்துகாயம் ஆனதும் அந்தஓர் எழுத்துளே ஏகமாகி நின்றதும் அந்தஓர் எழுத்தையும் அறிந்துணர்ந்து கொள்ளுமே. 421 |
Muntaōr eḻuttuḷē muḷaitteḻanta ceñcuṭar Antaōr eḻuttuḷē piṟantukāyam āṉatum Antaōr eḻuttuḷē ēkamāki niṉṟatum Antaōr eḻuttaiyum aṟintuṇarntu koḷḷumē. 421 |
| கூட்டம்இட்டு நீங்களும் கூடிவேதம் ஓதுறீர் ஏட்டகத்துள் ஈசனும் இருப்பதென்ன எழுத்துளே? நாட்டம் இட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே ஆட்டகத்துள் ஆடிடும் அம்மைஆணை உண்மையே. 422 |
Kūṭṭamiṭṭu nīṅkaḷum kūṭivētam ōtuṟīr Ēṭṭakattuḷ īcaṉum iruppateṉṉa eḻuttuḷē? Nāṭṭam iṭṭu nāṭiṭum nālumūṉṟu taṉṉuḷē Āṭṭakattuḷ āṭiṭum ammaiāṇai uṇmaiyē. 422 |
| ஆட்டகம் - ஆனந்த தாண்டவம் ஆடுகின்ற இடம். | Āṭṭakam - āṉanta tāṇṭavam āṭukiṉṟa iṭam. |
| காக்கை மூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம் நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞானநாடி ஊடுபோய் ஏக்கைநோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில் பார்த்தபார்த்த திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆனதே. 423 |
Kākkai mūkkai āmaiyār eṭutturaitta kāraṇam Nākkai ūṉṟi uḷvaḷaittu ñāṉanāṭi ūṭupōy Ēkkainōkka aṭcaram iraṇṭeḻuttum ēttiṭil Pārttapārtta tikkellām parappirammam āṉatē. 423 |
| ஏக்கை - ஏக்கம் | Ēkkai - ēkkam |
| ஓசைஉள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர் பூசைக்கு வைத்தகல்லில் பூவும்நீரும் சாத்துறீர் ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே? 424 |
Ōcaiuḷḷa kallainīr uṭaittiraṇṭāy ceytumē Vācalil patittakallai maḻuṅkavē mitikkiṟīr Pūcaikku vaittakallil pūvumnīrum cāttuṟīr Īcaṉukku ukantakal entakkallu collumē? 424 |
| ஓட்டுவைத்துக் கட்டிநீர் உபாயமான மந்திரம் கட்டுபட்ட போதிலும் கருத்தன்அங்கு வாழுமோ? எட்டும்எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை வட்டம்இட்ட யவ்விலே வைத்துணர்ந்து பாருமே. 425 |
Ōṭṭuvaittuk kaṭṭinīr upāyamāṉa mantiram Kaṭṭupaṭṭa pōtilum karuttaṉaṅku vāḻumō? Eṭṭumeṭṭum eṭṭuḷē iyaṅkukiṉṟa vāyuvai Vaṭṭamiṭṭa yavvilē vaittuṇarntu pārumē. 425 |
| இந்தஊரில் இல்லைஎன்று எங்குநாடி ஓடுறீர்? அந்தஊரில்ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே? அந்தமான பொந்திலாறில் மேவிநின்ற நாதனை அந்தமான சீயில்அவ்வில் அறிந்துணர்ந்து கொள்ளுமே. 426 |
Intaūril illaieṉṟu eṅkunāṭi ōṭuṟīr? Antaūrilīcaṉum amarntu vāḻvatu eṅṅaṉē? Antamāṉa pontilāṟil mēviniṉṟa nātaṉai Antamāṉa cīyilavvil aṟintuṇarntu koḷḷumē. 426 |
| புக்கிருந்த தும்முளே பூரியிட்ட தோத்திரம் தொக்குசட்சு சிங்குவை ஆக்கிராணன் சூழ்ந்திடில் அக்குமணியும் கொன்றைசூடி அம்பலத்துள் ஆடுவார் மிக்கசோதி அன்புடன் விளம்பிடாது பின்னையே. 427 |
Pukkirunta tummuḷē pūriyiṭṭa tōttiram Tokkucaṭcu ciṅkuvai ākkirāṇaṉ cūḻntiṭil Akkumaṇiyum koṉṟaicūṭi ampalattuḷ āṭuvār Mikkacōti aṉpuṭaṉ viḷampiṭātu piṉṉaiyē. 427 |
| பின்னெழுந்த மாங்கிசத்தைப் பேதையர் கண்பற்றியே பின்புமாங்கி சத்தினால் போகமாய்கை பண்ணினால் துன்புறும் வினைகள்தாம் சூழ்ந்திடும்பின் என்றலோ அன்பராய் இருந்தபேர்கள் ஆறுநீந்தல் போல்வீடே. 428 |
Piṉṉeḻunta māṅkicattaip pētaiyar kaṇpaṟṟiyē Piṉpumāṅki cattiṉāl pōkamāykai paṇṇiṉāl Tuṉpuṟum viṉaikaḷtām cūḻntiṭumpiṉ eṉṟalō Aṉparāy iruntapērkaḷ āṟunīntal pōlvīṭē. 428 |
| விட்டிருந்த தும்முளே விசனமற்று இருக்கிறீர் கட்டிவைத்த வாசல்மூன்று காட்சியான வாசல்ஒன்று கட்டிவைத்த வாசலும் கதவுதாள் திறந்துபோய்த் திட்டமான ஈசனைத் தெளியுமாங் கிசத்துளே. 429 |
Viṭṭirunta tummuḷē vicaṉamaṟṟu irukkiṟīr Kaṭṭivaitta vācalmūṉṟu kāṭciyāṉa vācaloṉṟu Kaṭṭivaitta vācalum katavutāḷ tiṟantupōyt Tiṭṭamāṉa īcaṉait teḷiyumāṅ kicattuḷē. 429 |
| ஆகும் ஆகும் ஆகுமே அனாதியான அப்பொருள் ஏகர்பாதம் நாடிநாடி ஏத்திநிற்க வல்லீரேல் பாகுசேர்மொழி உமைக்குப் பாலனாகி வாழலாம் வாகுடன் நீர்வன்னியை சமருவியே வருந்திடீர். 430 |
Ākum ākum ākumē aṉātiyāṉa apporuḷ Ēkarpātam nāṭināṭi ēttiniṟka vallīrēl Pākucērmoḻi umaikkup pālaṉāki vāḻalām Vākuṭaṉ nīrvaṉṉiyai camaruviyē varuntiṭīr. 430 |
| வாகு - வலிமை | Vāku - valimai |
| பாலகனாக வேணும்என்று பத்திமுற்றும் என்பிரேல் நாலுபாதம் உண்டதில் நினைந்திரண்டு அடுத்ததால் மூலநாடி தன்னில்வன்னி மூட்டிஅந்த நீருண ஏலவார் குழலியூடே ஈசர்பாதம் எய்துமே. 431 |
Pālakaṉāka vēṇumeṉṟu pattimuṟṟum eṉpirēl Nālupātam uṇṭatil niṉaintiraṇṭu aṭuttatāl Mūlanāṭi taṉṉilvaṉṉi mūṭṭianta nīruṇa Ēlavār kuḻaliyūṭē īcarpātam eytumē. 431 |
| எய்துநின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்தவல்லீரேல் எய்தும் உண்மைதன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும் மைஇலங்கு கண்ணிபங்கள் வாசிவானில் ஏறிமுன் செய்தவல் வினைகளும் சிதறும்அஃது திண்ணமே. 432 |
Eytuniṉṉai aṉpiṉāl iṟaiñci ēttavallīrēl Eytum uṇmaitaṉṉilē iṟappiṟappu akaṟṟiṭum Maiilaṅku kaṇṇipaṅkaḷ vācivāṉil ēṟimuṉ Ceytaval viṉaikaḷum citaṟumaḥtu tiṇṇamē. 432 |
| பங்கன் - பார்வதியை இடப்பாகத்தில் உடையவன் | Paṅkaṉ - pārvatiyai iṭappākattil uṭaiyavaṉ |
| வாசி - காற்று | Vāci - kāṟṟu |
| திண்ணம்என்று சேதிசொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ அண்ணல் அன்புளன்புருகி அறிந்து நோக்கலாயிடும் மண்ணும் அதிரவிண்ணும் அதிரவாசியை நடத்திடில் நண்ணிஎங்கள் ஈசனும் நமதுகடலில் இருப்பனே. 433 |
Tiṇṇameṉṟu cēticoṉṉa cevviyōrkaḷ kēṇmiṉō Aṇṇal aṉpuḷaṉpuruki aṟintu nōkkalāyiṭum Maṇṇum atiraviṇṇum atiravāciyai naṭattiṭil Naṇṇieṅkaḷ īcaṉum namatukaṭalil iruppaṉē. 433 |
| இருப்பன் எட்டெட்டுஎண்ணிலே இருந்துவேற தாகுவன் நெருப்பவாயு நீருமண்ணும் நீள்விசும்பும் ஆகுவன் கருப்புகுந்து காலமே கலந்தசோதி நாதனைக் குருப்புனலில் மூழ்கினார் குறித்துணர்ந்து கொள்வரே. 434 |
Iruppaṉ eṭṭeṭṭueṇṇilē iruntuvēṟa tākuvaṉ Neruppavāyu nīrumaṇṇum nīḷvicumpum ākuvaṉ Karuppukuntu kālamē kalantacōti nātaṉaik Kuruppuṉalil mūḻkiṉār kuṟittuṇarntu koḷvarē. 434 |
| கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்புணர்ந்த ஞானிகள் அள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டிவேண்டி ஏத்தினால் உள்ளுமாய்ப் புறம்புமாம் உணர்வதற்கு உணர்வுமாய்த் தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே. 435 |
Koḷḷuvārkaḷ cintaiyil kuṟippuṇarnta ñāṉikaḷ Aḷḷuvārkaḷ pakkuvattil vēṇṭivēṇṭi ēttiṉāl Uḷḷumāyp puṟampumām uṇarvataṟku uṇarvumāyt Teḷḷitāka niṉṟacōti cemmaiyait teḷintiṭē. 435 |
| தெளிந்தநற் சரியைதன்னில் சென்று சாலோகம்பெறும் தெளிந்தநற் கிரியைபூசை சேரலாம் சாமீபமே தெளிந்தநல்ல யோகம் தன்னில் சேரலாகும் சாரூபம் தெளிந்தஞானம் நான்கிலும் சேரலாம் சாயுச்யமே. 436 |
Teḷintanaṟ cariyaitaṉṉil ceṉṟu cālōkampeṟum Teḷintanaṟ kiriyaipūcai cēralām cāmīpamē Teḷintanalla yōkam taṉṉil cēralākum cārūpam Teḷintañāṉam nāṉkilum cēralām cāyucyamē. 436 |
| சேருவார்கள் ஞானம்என்று செப்புவர் தெளிவுளோர் சேருவார்கள் நாலுபாதச் செம்மைஎன்ற தில்லையே சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர் சேருமாறு கண்டுநாலும் செய்தொழில் திடப்படே. 437 |
Cēruvārkaḷ ñāṉameṉṟu ceppuvar teḷivuḷōr Cēruvārkaḷ nālupātac cemmaieṉṟa tillaiyē Cēruvārkaḷ civakati tiruvaruḷaip peṟṟapēr Cērumāṟu kaṇṭunālum ceytoḻil tiṭappaṭē. 437 |
| திறமலிக்கு நாலுபாதம் செம்மையும் திடப்படார் அறிவிலிகள் தேசநாடி அவத்திலே அலைவதே குறியதனைக் காட்டிஉள் குறித்துநோக்க வல்லீரேல் வெறிகமழ் சடையுடையோன் மெய்ப்பதம் அடைவரே. 438 |
Tiṟamalikku nālupātam cemmaiyum tiṭappaṭār Aṟivilikaḷ tēcanāṭi avattilē alaivatē Kuṟiyataṉaik kāṭṭiuḷ kuṟittunōkka vallīrēl Veṟikamaḻ caṭaiyuṭaiyōṉ meyppatam aṭaivarē. 438 |
| அடைவுளோர்கள் முத்தியே அறிந்திடாத மூடரே, படையுடைய தத்துவமும் பாதகங்கள் அல்லவோ? மடைதிறக்க வாரியின் மடையில் ஏறு மாறுபோல் உடலில்மூல நாடியைஉயர ஏற்றி ஊன்றிடே. 439 |
Aṭaivuḷōrkaḷ muttiyē aṟintiṭāta mūṭarē, Paṭaiyuṭaiya tattuvamum pātakaṅkaḷ allavō? Maṭaitiṟakka vāriyiṉ maṭaiyil ēṟu māṟupōl Uṭalilmūla nāṭiyaiuyara ēṟṟi ūṉṟiṭē. 439 |
| ஊன்றிஏற்றி மண்டலம் உருவிமூன்று தாள்திறந்து ஆன்றுதந்தி ஏறிடில் அமுதம்வந்து இறங்கிடும் நான்றிதென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும் ஆன்றியும் உயிர்ப்பரம் பொருந்திவாழ் வதாகவே. 440 |
Ūṉṟiēṟṟi maṇṭalam uruvimūṉṟu tāḷtiṟantu Āṉṟutanti ēṟiṭil amutamvantu iṟaṅkiṭum Nāṉṟiteṉṟu toṇṭarukku nātaṉum veḷippaṭum Āṉṟiyum uyirpparam poruntivāḻ vatākavē. 440 |
| தந்தி - நாடி | Tanti - nāṭi |
| ஆகமூல நாடியில் அனல்எழுப்பி அன்புடன் மோகமான மாயையில் முயல்வதும் ஒழிந்திடில் தாகமேரு நாடியே அனேகமான வாறுபோல் ஏகர்பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே. 441 |
Ākamūla nāṭiyil aṉaleḻuppi aṉpuṭaṉ Mōkamāṉa māyaiyil muyalvatum oḻintiṭil Tākamēru nāṭiyē aṉēkamāṉa vāṟupōl Ēkarpātam aṉpuṭaṉ iṟaiñciṉār aṟivarē. 441 |
| அறிந்துநோக்கி உம்முளே அயந்தியானம் உம்முளே பிறந்திராமல் ஏகர்பாதம் பெற்றிருப்பது உண்மையே அறிந்துமீள வைத்திடா வகையுமரணம் ஏத்தினார் செறிந்துமேலை வாசலைத் திறந்துபாரும் உம்முளே. 442 |
Aṟintunōkki ummuḷē ayantiyāṉam ummuḷē Piṟantirāmal ēkarpātam peṟṟiruppatu uṇmaiyē Aṟintumīḷa vaittiṭā vakaiyumaraṇam ēttiṉār Ceṟintumēlai vācalait tiṟantupārum ummuḷē. 442 |
| சோதியாக உம்முளே தெளிந்துநோக்க வல்லீரேல் சோதிவந்து உதித்திடும் துரியகீதம் உற்றிடும் ஆதி சக்கிரத்தினில் அமர்ந்துதீர்த்தம் ஆடுவன் பேதியாது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே. 443 |
Cōtiyāka ummuḷē teḷintunōkka vallīrēl Cōtivantu utittiṭum turiyakītam uṟṟiṭum Āti cakkirattiṉil amarntutīrttam āṭuvaṉ Pētiyātu kaṇṭukoḷ pirāṇaṉait tiruttiyē. 443 |
| திருவுமாகிச் சிவனுமாகித் தெளிந்துளோர்கள் சிந்தையில் மருவிலே எழுந்துவீசும் வாசனைய தாகுவன் கருவிலே விழுந்தெழுந்த கந்மவாத னைஎலாம் பரிதமுன் இருளதாய் பரியும்அங்கி பாருமே. 444 |
Tiruvumākic civaṉumākit teḷintuḷōrkaḷ cintaiyil Maruvilē eḻuntuvīcum vācaṉaiya tākuvaṉ Karuvilē viḻunteḻunta kanmavāta ṉaielām Paritamuṉ iruḷatāy pariyumaṅki pārumē. 444 |
| பரிதி - சூரியன் அங்கி - நெருப்பு | Pariti - cūriyaṉ aṅki - neruppu |
| பாரும்எந்தை ஈசன்வைத்த பண்பிலே இருந்துநீர் சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள் வேரையும் முடியையும் விரைந்துதேடி மால்அயன் பார்இடந்து விண்ணிலே பிறந்தும்கண்டது இல்லையே. 445 |
Pārumentai īcaṉvaitta paṇpilē iruntunīr Cērumē naṭuvaṟintu cemmaiyāṉa apporuḷ Vēraiyum muṭiyaiyum viraintutēṭi mālayaṉ Pāriṭantu viṇṇilē piṟantumkaṇṭatu illaiyē. 445 |
| மால் - திருமால் பார் - உலகம் இடந்து - தோண்டி | Māl - tirumāl pār - ulakam iṭantu - tōṇṭi |
| கண்டிலாது அயன்மால்என்று காட்சியாகச் சொல்லுறீர் மிண்டினால் அரசனும் மேவலாய் இருக்குமோ? தொண்டுமட்டும் அன்புடன் தொழுதுநோக்க வல்லீரேல் பண்டுமுப் புரம்எரிந்த பத்திவந்து முற்றுமே. 446 |
Kaṇṭilātu ayaṉmāleṉṟu kāṭciyākac colluṟīr Miṇṭiṉāl aracaṉum mēvalāy irukkumō? Toṇṭumaṭṭum aṉpuṭaṉ toḻutunōkka vallīrēl Paṇṭumup puramerinta pattivantu muṟṟumē. 446 |
| முற்றுமே அவன்ஒழிந்து முன்பின்ஒன்றும் காண்கிலேன் பற்றிலாத ஒன்றுதன்னை பற்றிநிற்க வல்லது கற்றிதாலோ ஈசர்பாதம் காணலா யிருக்குமோ? பெற்றபேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே. 447 |
Muṟṟumē avaṉoḻintu muṉpiṉoṉṟum kāṇkilēṉ Paṟṟilāta oṉṟutaṉṉai paṟṟiniṟka vallatu Kaṟṟitālō īcarpātam kāṇalā yirukkumō? Peṟṟapērai aṉpuṭaṉ piriyamākak kēḷumē. 447 |
| கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த காலந்தன்னுளே வாட்டமுள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும் வீட்டிலே வெளியதாகும் விளங்கவந்து நேரிடும் கூட்டிவன்னி மாருதம் குயத்தைவிட்டு எழுப்புமே. 448 |
Kēṭṭuniṉṟa uṉṉilai kiṭaitta kālantaṉṉuḷē Vāṭṭamuḷḷa tattuva mayakkamum akaṟṟiṭum Vīṭṭilē veḷiyatākum viḷaṅkavantu nēriṭum Kūṭṭivaṉṉi mārutam kuyattaiviṭṭu eḻuppumē. 448 |
| எழுப்பி மூலநாடியை இதப்படுத்த லாகுமோ மழுப்பிலாத சபையைநீர் வலித்துவாங்க வல்லீரேல் சுழுத்தியும் கடந்துபோய் சொப்பனத்தில் அப்புறம் அழுத்திஓர் எழுத்துளே அமைப்பதுஉண்மை ஐயனே. 449 |
Eḻuppi mūlanāṭiyai itappaṭutta lākumō Maḻuppilāta capaiyainīr valittuvāṅka vallīrēl Cuḻuttiyum kaṭantupōy coppaṉattil appuṟam Aḻuttiōr eḻuttuḷē amaippatuuṇmai aiyaṉē. 449 |
| அல்லதில்லை என்றுதான் ஆவியும் பொருளுடல் நல்லஈசர் தாள்இணைக்கும் நாதனிக்கும் ஈந்நிலை என்றும்என்னுள் நேசமும் வாசியை வருந்தினால் தொல்லையாம் வினைவிடென்று தூரதூரம் ஆனதே. 450 |
Allatillai eṉṟutāṉ āviyum poruḷuṭal Nallaīcar tāḷiṇaikkum nātaṉikkum īnnilai Eṉṟumeṉṉuḷ nēcamum vāciyai varuntiṉāl Tollaiyām viṉaiviṭeṉṟu tūratūram āṉatē. 450 |
| ஆனதே பதியது உயிர் அற்றதே பசுபாசம் போனவே மலங்களும் புலன்களும் வினைகளும் கானகத்தில் இட்டதீயில் காற்றுவந்து அடுத்ததோ? ஊனகத்தில் வாயுஉன்னி ஒன்றியே உலாவுமே. 451 |
Āṉatē patiyatu uyir aṟṟatē pacupācam Pōṉavē malaṅkaḷum pulaṉkaḷum viṉaikaḷum Kāṉakattil iṭṭatīyil kāṟṟuvantu aṭuttatō? Ūṉakattil vāyuuṉṉi oṉṟiyē ulāvumē. 451 |
| உலாவும் உவ்வும் அவ்வுமாய் உதித்தடர்ந்து நின்றதும் உலாவிஐம் புலன்களும் ஒருதலத்து இருந்திடும் நிலாவும்அங்கு நேசமாகி நின்றும் அமுதம்உண்டுதாம் உலாவும் எங்கள் ஈசனைக் குறித்துணர்ந்து கும்பிடே. 452 |
Ulāvum uvvum avvumāy utittaṭarntu niṉṟatum Ulāviaim pulaṉkaḷum orutalattu iruntiṭum Nilāvumaṅku nēcamāki niṉṟum amutamuṇṭutām Ulāvum eṅkaḷ īcaṉaik kuṟittuṇarntu kumpiṭē. 452 |
| கும்பிடும் கருத்துளே குகனைஐங் கரனையும் நம்பியே இடம்வலம் நமக்கரித்து நாடிட எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவனைத் தும்பிபோல வாசகம் தொடர்ந்துசோம்பி நீங்குமே. 453 |
Kumpiṭum karuttuḷē kukaṉaiaiṅ karaṉaiyum Nampiyē iṭamvalam namakkarittu nāṭiṭa Empirāṉum ammaiyum iruttiyē naṭuvaṉait Tumpipōla vācakam toṭarntucōmpi nīṅkumē. 453 |
| நீங்கும்ஐம் புலன்களும் நிறைந்தவல் வினைகளும் ஆங்காரமாம் ஆசையும் அருந்தடந்த பாதமும் ஓங்காரத்தின் உள்ளிருந்து ஒன்பதொழிந் தொன்றிலத் தூங்காஈசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே. 454 |
Nīṅkumaim pulaṉkaḷum niṟaintaval viṉaikaḷum Āṅkāramām ācaiyum aruntaṭanta pātamum Ōṅkārattiṉ uḷḷiruntu oṉpatoḻin toṉṟilat Tūṅkāīcar coṟpaṭi tuṇintirukka cuttamē. 454 |
| கருக்கலந்த காலமே கண்டுநின்ற காரணம் உருக்கலந்த போதலோ உன்னைநான் உணர்ந்தது விரக்கில்என் மறைக்கில்என் வினைக்கிசைந்த போதெலாம் உருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ? 455 |
Karukkalanta kālamē kaṇṭuniṉṟa kāraṇam Urukkalanta pōtalō uṉṉaināṉ uṇarntatu Virakkileṉ maṟaikkileṉ viṉaikkicainta pōtelām Urukkalantu niṉṟapōtu nīyumnāṉum oṉṟalō? 455 |
| ஞானநூல்கள் தேடியே நவின்றஞான யோகிகாள், ஞானமான சோதியை நாடிஉள் அறிகிலீர் ஞானம்ஆகி நின்றதோர் நாதனை அறிந்தபின் ஞானம்அல்லது இல்லைவேறு நாம் உரைத்த துண்மையே 456 |
Ñāṉanūlkaḷ tēṭiyē naviṉṟañāṉa yōkikāḷ, Ñāṉamāṉa cōtiyai nāṭiuḷ aṟikilīr Ñāṉamāki niṉṟatōr nātaṉai aṟintapiṉ Ñāṉamallatu illaivēṟu nām uraitta tuṇmaiyē 456 |
| கருத்தரிப்ப தற்குமுன் காயம்நின்றது எவ்விடம்? உருத்தரிப்ப தற்குமுன் உயிர்ப்புநின்றது எவ்விடம்? மருட்பொதிந்த சிந்தையில் மயக்கம்நின்றது எவ்விடம்? விருப்புணர்ந்த ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே. 457 |
Karuttarippa taṟkumuṉ kāyamniṉṟatu evviṭam? Uruttarippa taṟkumuṉ uyirppuniṉṟatu evviṭam? Maruṭpotinta cintaiyil mayakkamniṉṟatu evviṭam? Viruppuṇarnta ñāṉikāḷ virinturaikka vēṇumē. 457 |
| கருவினில் கருவதாய் எடுத்தஏழு தோற்றமும் இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும் மறுவினைப் பிறவிமூன்று காலமும் வகுத்தபின் உறுவினைப்பயன் இதென்று உணர்ந்தஞானி சொல்லுமே. 458 |
Karuviṉil karuvatāy eṭuttaēḻu tōṟṟamum Iruviṉaip payattiṉāl piṟantiṟantu uḻaṉṟiṭum Maṟuviṉaip piṟavimūṉṟu kālamum vakuttapiṉ Uṟuviṉaippayaṉ iteṉṟu uṇarntañāṉi collumē. 458 |
| வாயில்எச்சில் போகவே நீர்குடித்துத் துப்புவீர் வாயிருக்க எச்சில்போன வாறதென்ன எவ்விடம்? வாயில்எச்சில் அல்லவோ நீர்உரைத்த மந்திரம்? நாயினை அறிந்தபோது நாடும்எச்சில் ஏதுகொல்? 459 |
Vāyileccil pōkavē nīrkuṭittut tuppuvīr Vāyirukka eccilpōṉa vāṟateṉṉa evviṭam? Vāyileccil allavō nīruraitta mantiram? Nāyiṉai aṟintapōtu nāṭumeccil ētukol? 459 |
| தொடக்கதென்று நீர்விழத் தொடங்குகின்ற ஊமர்காள் தொடக்கிருந்தது எவ்விடம்? சுத்தியானது எவ்விடம்? தொடக்கிருந்த வாறறிந்து சுத்தபண்ண வல்லீரேல் தொடக்கிலாத சோதியைத் தொடர்ந்துகாண லாகுமே. 460 |
Toṭakkateṉṟu nīrviḻat toṭaṅkukiṉṟa ūmarkāḷ Toṭakkiruntatu evviṭam? cuttiyāṉatu evviṭam? Toṭakkirunta vāṟaṟintu cuttapaṇṇa vallīrēl Toṭakkilāta cōtiyait toṭarntukāṇa lākumē. 460 |
| மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில் சாதிபேத மாம்உருத் தரிக்கும்ஆறு போலவே வேதம்ஓது வானுடன் புலைச்சிசென்று மேவிடில் பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே. 461 |
Mētiyōṭum āvumē virumpiyē puṇarntiṭil Cātipēta māmurut tarikkumāṟu pōlavē Vētamōtu vāṉuṭaṉ pulaicciceṉṟu mēviṭil Pētamāyp piṟakkilāta vāṟateṉṉa pēcumē. 461 |
| மேதி - எருமை | Mēti - erumai |
| வகைக்குலங் கள்பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள் தொகைக்குலங் கள்ஆனநேர்மை நாடியே உணர்ந்தபின் மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறுஒன்று கண்டிலீர் நகைக்குமாறு மனு எரிக்கநாளும்நாளும் நாடுவீர். 462 |
Vakaikkulaṅ kaḷpēciyē vaḻakkuraikkum māntarkāḷ Tokaikkulaṅ kaḷāṉanērmai nāṭiyē uṇarntapiṉ Mikaitta cukkilam aṉṟiyē vēṟuoṉṟu kaṇṭilīr Nakaikkumāṟu maṉu erikkanāḷumnāḷum nāṭuvīr. 462 |
| ஓதும்நாலு வேதமும் உரைத்த சாத்திரங்களும் பூதத்தத்து வங்களும் பொருந்தும் ஆகமங்களும் சாதிபேத உண்மையும் தயங்குகின்ற நூல்களும் பேதபேதம ஆகியே பிறந்துஉழன்று இருந்ததே. 463 |
Ōtumnālu vētamum uraitta cāttiraṅkaḷum Pūtattattu vaṅkaḷum poruntum ākamaṅkaḷum Cātipēta uṇmaiyum tayaṅkukiṉṟa nūlkaḷum Pētapētama ākiyē piṟantuuḻaṉṟu iruntatē. 463 |
| அங்கலிங்கம் பூண்டுநீர் அகண்டபூசை செய்கிறீர் அங்கலிங்கம் பூண்டுநீர் அமர்ந்திருந்த மார்பனே எங்கும்ஓடி எங்கும்எங்கும் ஈடழிந்து மாய்கிறீர் செங்கல்செம்பு கல்லெலாம் சிறந்துபார்க்கும் மூடரே. 464 |
Aṅkaliṅkam pūṇṭunīr akaṇṭapūcai ceykiṟīr Aṅkaliṅkam pūṇṭunīr amarntirunta mārpaṉē Eṅkumōṭi eṅkumeṅkum īṭaḻintu māykiṟīr Ceṅkalcempu kallelām ciṟantupārkkum mūṭarē. 464 |
| தீட்டம்தீட்டம் என்றுநீர் தினமும்மூழ்கும் மூடரே தீட்டமாகி அல்லவோ திரண்டுகாயம் ஆனதும் பூட்டகாயம் உம்முளே புகழுகின்ற பேயரே தீட்டுவந்து கொண்டலோ தெளிந்ததே சிவாயமே. 465 |
Tīṭṭamtīṭṭam eṉṟunīr tiṉamummūḻkum mūṭarē Tīṭṭamāki allavō tiraṇṭukāyam āṉatum Pūṭṭakāyam ummuḷē pukaḻukiṉṟa pēyarē Tīṭṭuvantu koṇṭalō teḷintatē civāyamē. 465 |
| உந்திமேலே நாலுமூன்று ஓம்நமசி வாயமாம் சந்திசந்தி என்றுநீர் சாற்றுகின்ற பேயரே மூந்தவந்து நம்முளே மூலநாடி ஊடுபோய் அந்திசந்தி அற்றிடம் அறிந்துணர்ந்து பாருமே. 466 |
Untimēlē nālumūṉṟu ōmnamaci vāyamām Canticanti eṉṟunīr cāṟṟukiṉṟa pēyarē Mūntavantu nammuḷē mūlanāṭi ūṭupōy Anticanti aṟṟiṭam aṟintuṇarntu pārumē. 466 |
| வன்னிமூன்று தீயினில் வாழும்எங்கள் நாதனும் கன்னியான துள்ளிருக்கக் காதல்கொண்டது எவ்விடம் சென்னிநாலு கையிரண்டு சிந்தையில் இரண்டிலொன்று உன்னியுன்னி நம்முளே உய்த்துணர்ந்து பாருமே. 467 |
Vaṉṉimūṉṟu tīyiṉil vāḻumeṅkaḷ nātaṉum Kaṉṉiyāṉa tuḷḷirukkak kātalkoṇṭatu evviṭam Ceṉṉinālu kaiyiraṇṭu cintaiyil iraṇṭiloṉṟu Uṉṉiyuṉṉi nammuḷē uyttuṇarntu pārumē. 467 |
| தொண்டுசெய்து நீங்களும் சூழஓடி மாள்கிறீர் உண்டுஉழன்று நும்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர் வண்டுலாவு சோலைசூழ வாழும்எங்கள் நாதனும் பண்டுபோல நும்முளே பகுத்திருப்பன் ஈசனே. 468 |
Toṇṭuceytu nīṅkaḷum cūḻaōṭi māḷkiṟīr Uṇṭuuḻaṉṟu nummuḷē uṟṟuṇarntu pārkkilīr Vaṇṭulāvu cōlaicūḻa vāḻumeṅkaḷ nātaṉum Paṇṭupōla nummuḷē pakuttiruppaṉ īcaṉē. 468 |
| பரம்உனக்கு எனக்குவேறு பயம்இல்லை பாரையா கரம்உனக்கு நித்தமும் குவித்திடக் கடமையாம் சிரமுருக்கி அமுதளித்த சீருலாவும் நாதனே உரம்எனக்கு நீஅளித்த உண்மைஉண்மை உண்மையே. 469 |
Paramuṉakku eṉakkuvēṟu payamillai pāraiyā Karamuṉakku nittamum kuvittiṭak kaṭamaiyām Ciramurukki amutaḷitta cīrulāvum nātaṉē Urameṉakku nīaḷitta uṇmaiuṇmai uṇmaiyē. 469 |
| என்அகத்தில் என்னைநான் எங்கும்ஓடி நாடினேன் என்அகத்தில் என்னைஅன்றி ஏதும்ஒன்று கண்டிலேன் மின்எழுப்பி விண்ணகத்தின் மின்ஒடுங்கு மாறுபோல் என்அகத்துள் ஈசனோடு யானும்அல்ல தில்லையே. 470 |
Eṉakattil eṉṉaināṉ eṅkumōṭi nāṭiṉēṉ Eṉakattil eṉṉaiaṉṟi ētumoṉṟu kaṇṭilēṉ Miṉeḻuppi viṇṇakattiṉ miṉoṭuṅku māṟupōl Eṉakattuḷ īcaṉōṭu yāṉumalla tillaiyē. 470 |
| இடங்கள்பண்ணி சுத்திசெய்தே இட்டபீட மீதிலே அடங்கநீறு பூசல்செய்து அருந்தவங்கள் பண்ணுவீர் ஒடுங்குகின்ற நாதனார் உதிக்கும்ஞானம் எவ்விடம்? அடங்குகின்றது எவ்விடம்? அறிந்துபூசை செய்யுமே. 471 |
Iṭaṅkaḷpaṇṇi cutticeytē iṭṭapīṭa mītilē Aṭaṅkanīṟu pūcalceytu aruntavaṅkaḷ paṇṇuvīr Oṭuṅkukiṉṟa nātaṉār utikkumñāṉam evviṭam? Aṭaṅkukiṉṟatu evviṭam? aṟintupūcai ceyyumē. 471 |
| புத்தகங் களைசுமந்து பொய்களைப் பிதற்றுவீர். செத்திடம் பிறந்திடம் அதுஎங்ஙன்என்று அறிகிலீர் அத்தனைய சிந்தனை அறிந்துநோக்க வல்லீரேல் உத்தமத்துள் ஆயசோதி உணரும்போகம் ஆகுமே. 472 |
Puttakaṅ kaḷaicumantu poykaḷaip pitaṟṟuvīr. Cettiṭam piṟantiṭam atueṅṅaṉeṉṟu aṟikilīr Attaṉaiya cintaṉai aṟintunōkka vallīrēl Uttamattuḷ āyacōti uṇarumpōkam ākumē. 472 |
| அருளிலே பிறந்துநின்று மாயைரூபம் ஆகியே இருளிலே தயங்குகின்ற ஏழைமாந்தர் கேண்மினோ. பொருளிலே தவம்புனைந்து பொருந்திநோக்க வல்லீரேல் மருள்அதுஏது? வன்னியின் மறைந்ததே சிவாயமே. 473 |
Aruḷilē piṟantuniṉṟu māyairūpam ākiyē Iruḷilē tayaṅkukiṉṟa ēḻaimāntar kēṇmiṉō. Poruḷilē tavampuṉaintu poruntinōkka vallīrēl Maruḷatuētu? vaṉṉiyiṉ maṟaintatē civāyamē. 473 |
| தன்மசிந்தை ஆம்அளவும் தவமறியாத் தன்மையாய்க் கன்மசிந்தை வெயில்உழன்று கருத்தழிந்த கசடரே, சென்மம்சென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை நன்மையாக உம்முளே நயந்துகாண வேணுமே. 474 |
Taṉmacintai āmaḷavum tavamaṟiyāt taṉmaiyāyk Kaṉmacintai veyiluḻaṉṟu karuttaḻinta kacaṭarē, Ceṉmamceṉmam tēṭiyum teḷivoṇāta celvaṉai Naṉmaiyāka ummuḷē nayantukāṇa vēṇumē. 474 |
| கள்ளவுள்ள மேயிருக்கக் கடந்தஞானம் ஓதுவீர் கள்ளம்உள் அறுத்தபோது கதிஇதன்றிக் காண்கிலீர்? உள்ளமே விளக்கிநித்தம் ஒளியணுக வல்லீரேல் தெள்ளு ஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே. 475 |
Kaḷḷavuḷḷa mēyirukkak kaṭantañāṉam ōtuvīr Kaḷḷamuḷ aṟuttapōtu katiitaṉṟik kāṇkilīr? Uḷḷamē viḷakkinittam oḷiyaṇuka vallīrēl Teḷḷu ñāṉam ummuḷē ciṟantatē civāyamē. 475 |
| காணவேண்டும் என்றுநீர் கடல்மலைகள் ஏறுவீர் ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே? வேணும் என்று அவ்வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல் தாணுவாக நின்ற சீவன் தான்சிவம் அதாகுமே. 476 |
Kāṇavēṇṭum eṉṟunīr kaṭalmalaikaḷ ēṟuvīr Āṇavam atallavō aṟivillāta māntarē? Vēṇum eṉṟu avvīcarpātam meyyuḷē tarippirēl Tāṇuvāka niṉṟa cīvaṉ tāṉcivam atākumē. 476 |
| தாணு - பரம்பொருள் | Tāṇu - paramporuḷ |
| அணுவினோடு அகண்டமாய் அளவிடாத சோதியைக் குணமதாக உம்முளே குறித்துநோக்கின் முத்தியாம் மிணமிணென்று விரலைஎண்ணி மீளொணா மயக்கமாய்த் துணிவிலாத படியினால் தொடர்ந்து பூசை செய்குவீர். 477 |
Aṇuviṉōṭu akaṇṭamāy aḷaviṭāta cōtiyaik Kuṇamatāka ummuḷē kuṟittunōkkiṉ muttiyām Miṇamiṇeṉṟu viralaieṇṇi mīḷoṇā mayakkamāyt Tuṇivilāta paṭiyiṉāl toṭarntu pūcai ceykuvīr. 477 |
| எச்சில்எச்சில் என்றுநீர் இடைந்திருக்கும் ஏழைகாள் துச்சில்எச்சில் அல்லவோ தூயகாயம் ஆனதும் வைத்தெச்சில் தேனலோ, வண்டின்எச்சில் பூவலோ? கைச்சுதாடல் வைத்துடன் கறந்தபாலும் எச்சிலே! 478 |
Eccileccil eṉṟunīr iṭaintirukkum ēḻaikāḷ Tuccileccil allavō tūyakāyam āṉatum Vaitteccil tēṉalō, vaṇṭiṉeccil pūvalō? Kaiccutāṭal vaittuṭaṉ kaṟantapālum eccilē! 478 |
| சுதா - பசுவின் முலைக்காம்பு | Cutā - pacuviṉ mulaikkāmpu |
| தீர்த்தலிங்க மூர்த்திஎன்று தேடிஓடும் தீதரே தீர்த்தலிங்கம் உள்ளில்நின்ற சீவனைத் தெளியுமே தீர்த்தலிங்கம் உம்முளே தெளிந்துகாண வல்லீரேல் தீர்த்தலிங்கம் தான்அதாய்ச் சிறந்ததே சிவாயமே. 479 |
Tīrttaliṅka mūrttieṉṟu tēṭiōṭum tītarē Tīrttaliṅkam uḷḷilniṉṟa cīvaṉait teḷiyumē Tīrttaliṅkam ummuḷē teḷintukāṇa vallīrēl Tīrttaliṅkam tāṉatāyc ciṟantatē civāyamē. 479 |
| ஆடுகொண்டு கூறுசெய்து அமர்ந்திருக்கும் ஆறுபோல் தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே போடுதர்ப்ப பூசைஎன்ன பூசைஎன்ன பூசையோ? 480 |
Āṭukoṇṭu kūṟuceytu amarntirukkum āṟupōl Tēṭukiṉṟa cempiṉait tiṭappaṭap parappiyē Nāṭukiṉṟa tampirāṉum nammuḷē irukkavē Pōṭutarppa pūcaieṉṉa pūcaieṉṉa pūcaiyō? 480 |
| என்னை அற்பநேரமும் மறக்கிலாத நாதனே ஏகனே இறைவனே இராசராச ராசனே உன்னை அற்ப நேரமும் ஒழிந்திருக்க லாகுமே உனதுநாமம் எனதுநாவில் உதவிசெய்வீர் ஈசனே. 481 |
Eṉṉai aṟpanēramum maṟakkilāta nātaṉē Ēkaṉē iṟaivaṉē irācarāca rācaṉē Uṉṉai aṟpa nēramum oḻintirukka lākumē Uṉatunāmam eṉatunāvil utaviceyvīr īcaṉē. 481 |
| எல்லையற்று நின்றசோதி ஏகமாய் எரிக்கவே வல்லபூர ணப்பிரகாசர் ஏகதபோகம் ஆகியே நல்லஇன்பம் மோனசாக ரத்திலே அழுத்தியே நாடொணாத அமிர்தம்உண்டு நான்அழிந்து நின்றநாள். 482 |
Ellaiyaṟṟu niṉṟacōti ēkamāy erikkavē Vallapūra ṇappirakācar ēkatapōkam ākiyē Nallaiṉpam mōṉacāka rattilē aḻuttiyē Nāṭoṇāta amirtamuṇṭu nāṉaḻintu niṉṟanāḷ. 482 |
| ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை ஊனைகாட்டி உம்முளே உகந்துகாண வல்லீரேல் ஊனகாயம் ஆளலாம் உலகபாரம் ஆளலாம் கானநாடும் ஆளலாம் வண்ணநாடர் ஆணையே. 483 |
Āṉavāṟa tāyiṭum akaṇṭamāṉa cōtiyai Ūṉaikāṭṭi ummuḷē ukantukāṇa vallīrēl Ūṉakāyam āḷalām ulakapāram āḷalām Kāṉanāṭum āḷalām vaṇṇanāṭar āṇaiyē. 483 |
| நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து வத்தியே கதறியே கண்கள்மூடி என்பயன்? எத்தனைபேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ? அத்தனுக்கிது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே? 484 |
Nittamum maṇitulakki nīṭumūlai pukkiruntu Vattiyē kataṟiyē kaṇkaḷmūṭi eṉpayaṉ? Ettaṉaipēr eṇṇiṉum eṭṭiraṇṭum pattalō? Attaṉukkitu ēṟkumō aṟivilāta māntarē? 484 |
| எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை மட்டதாக உம்முளே மதித்துநோக்க வல்லீரேல் கட்டமான பிறவிஎன் கருங்கடல் கடக்கலாம் இட்டமான ஒளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே. 485 |
Eṭṭiraṇṭum kūṭiyē iliṅkamāṉa tēvaṉai Maṭṭatāka ummuḷē matittunōkka vallīrēl Kaṭṭamāṉa piṟavieṉ karuṅkaṭal kaṭakkalām Iṭṭamāṉa oḷiyiṉōṭu icaintiruppīr kāṇmiṉē. 485 |
| உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் தண்மையான மந்திரம் சமைந்துரூபம் ஆகியே வெண்மையான மந்திரம் விளைந்துநீற தானேதே உண்மையான மந்திரம் அதொன்றுமே சிவாயமே. 486 |
Uṇmaiyāṉa mantiram oḷiyilē iruntiṭum Taṇmaiyāṉa mantiram camainturūpam ākiyē Veṇmaiyāṉa mantiram viḷaintunīṟa tāṉētē Uṇmaiyāṉa mantiram atoṉṟumē civāyamē. 486 |
| தச்சுவாயில் உச்சிமேல் ஆயிரம் தலங்களாய் முச்சுடரும் மூவிரண்டும் மூண்டெழுந்த தீச்சுடர் வச்சிரம் அதாகியே வளர்ந்துநின்றது எவ்விடம்? இச்சுடரும் இந்திரியமும் ஏகமானது எங்ஙனே? 487 |
Taccuvāyil uccimēl āyiram talaṅkaḷāy Muccuṭarum mūviraṇṭum mūṇṭeḻunta tīccuṭar Vacciram atākiyē vaḷarntuniṉṟatu evviṭam? Iccuṭarum intiriyamum ēkamāṉatu eṅṅaṉē? 487 |
| 481. ஏகன் - தனிமுதன்மையானவன் | 481. Ēkaṉ - taṉimutaṉmaiyāṉavaṉ |
| வல்லவாசல் ஒன்பதும் மறுத்தடைத்த வாசலும் சொல்லும்வாசல் ஓர்ஐந்தும் சொல்லவிம்மி நின்றதும் நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய் எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்ப தில்லையே. 488 |
Vallavācal oṉpatum maṟuttaṭaitta vācalum Collumvācal ōraintum collavimmi niṉṟatum Nallavāca laittiṟantu ñāṉavācal ūṭupōy Ellaivācal kaṇṭapiṉ iṉippiṟappa tillaiyē. 488 |
| வண்டுபூ மணங்களோடு வந்திருந்த தேன்எலாம் உண்டுளே அடங்கும்வண்ணம் ஓதுலிங்க மூலமாய்க் கண்டுகண்டு வேரிலே கருத்தொடுங்க வல்லீரேல் பண்டுகொண்ட வல்வினை பறந்திடும் சிவாயமே. 489 |
Vaṇṭupū maṇaṅkaḷōṭu vantirunta tēṉelām Uṇṭuḷē aṭaṅkumvaṇṇam ōtuliṅka mūlamāyk Kaṇṭukaṇṭu vērilē karuttoṭuṅka vallīrēl Paṇṭukoṇṭa valviṉai paṟantiṭum civāyamē. 489 |
| ஓரெழுத்தில் லிங்கமாக ஓதும்அக் கரத்துளே ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர் மூவெழுத்தும் மூவராய் முளைத்தெழுந்த சோதியை நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே. 490 |
Ōreḻuttil liṅkamāka ōtumak karattuḷē Ōreḻuttu iyaṅkukiṉṟa uṇmaiyai aṟikilīr Mūveḻuttum mūvarāy muḷaitteḻunta cōtiyai Nāleḻuttu nāvuḷē naviṉṟatē civāyamē. 490 |
| தூரதூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும் பாரபார பாரம்என்று பரிந்திருந்த பாவிகாள்! நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லீரேல் தூரதூர தூரமும் தொடர்ந்துகூடல் ஆகுமே. 491 |
Tūratūra tūramum toṭarnteḻunta tūramum Pārapāra pārameṉṟu parintirunta pāvikāḷ! Nēranēra nēramum niṉaintirukka vallīrēl Tūratūra tūramum toṭarntukūṭal ākumē. 491 |
| குண்டலங்கள் பூண்டுநீர் குளங்கள்தோறும் மூழ்குறீர் மண்டுகங்கள் போலநீர் மனத்தின் மாசறுக்கிலீர்; மண்டைஏந்து கையரை மனத்திருந்த வல்லீரேல் பண்டைமால் அயன்தொழப் பணிந்து வாழலாகுமே. 492 |
Kuṇṭalaṅkaḷ pūṇṭunīr kuḷaṅkaḷtōṟum mūḻkuṟīr Maṇṭukaṅkaḷ pōlanīr maṉattiṉ mācaṟukkilīr; Maṇṭaiēntu kaiyarai maṉattirunta vallīrēl Paṇṭaimāl ayaṉtoḻap paṇintu vāḻalākumē. 492 |
| மண்டுகம் - தவளை | Maṇṭukam - tavaḷai |
| கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல் ஆடிரண்டு கன்றைஈன்ற அம்பலத்துள் ஆடுதே; மாடுகொண்டு வெண்ணெய்உண்ணும் மானிடப் பசுக்களே! வீடுகண்டு கொண்டபின்பு வெட்டவெளியும் காணுமே. 493 |
Kūṭukaṭṭi muṭṭaiyiṭṭuk koṇṭirunta vāṟupōl Āṭiraṇṭu kaṉṟaiīṉṟa ampalattuḷ āṭutē; Māṭukoṇṭu veṇṇeyuṇṇum māṉiṭap pacukkaḷē! Vīṭukaṇṭu koṇṭapiṉpu veṭṭaveḷiyum kāṇumē. 493 |
| நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே சுற்றிவந்து முணமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்! சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? 494 |
Naṭṭakallait teyvam eṉṟu nālupuṭpam cāttiyē Cuṟṟivantu muṇamuṇēṉṟu collumantiram ētaṭā Naṭṭakallum pēcumō nātaṉuḷ irukkaiyil! Cuṭṭacaṭṭi caṭṭuvam kaṟiccuvai aṟiyumō? 494 |
| நானும்அல்ல நீயும்அல்ல நாதன்அல்ல ஓதுவேன் வானில்அல்ல சோதிஅல்ல சோதிநம்முள் உள்ளதே நானும்நீயும் ஒத்தபோது நாடிகாண லாகுமோ? தானதான தந்தான தாதனான தானனா. 495 |
Nāṉumalla nīyumalla nātaṉalla ōtuvēṉ Vāṉilalla cōtialla cōtinammuḷ uḷḷatē Nāṉumnīyum ottapōtu nāṭikāṇa lākumō? Tāṉatāṉa tantāṉa tātaṉāṉa tāṉaṉā. 495 |
| நல்லதல்ல கெட்டதல்ல நடுவில்நிற்பது ஒன்றுதான் நல்லதென்று போதது நல்லதாகி நின்றபின் நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால் நல்லதென்ற நாடிநின்று நாமம்சொல்ல வேண்டுமே. 496 |
Nallatalla keṭṭatalla naṭuvilniṟpatu oṉṟutāṉ Nallateṉṟu pōtatu nallatāki niṉṟapiṉ Nallatalla keṭṭateṉṟāl keṭṭatākum ātalāl Nallateṉṟa nāṭiniṉṟu nāmamcolla vēṇṭumē. 496 |
| பேய்கள்கூடிப் பிணங்கள்தின்னும் பிரியமில்லாக் காட்டிலே நாய்கள்சுற்ற நடனமாடும் நம்பன்வாழ்க்கை ஏதடா? தாய்கள்பால் உதிக்கும்இச்சை தவிரவேண்டி நாடினால் நோய்கள்பட்டு உழல்வதேது நோக்கிப்பாரும் உம்முளே. 497 |
Pēykaḷkūṭip piṇaṅkaḷtiṉṉum piriyamillāk kāṭṭilē Nāykaḷcuṟṟa naṭaṉamāṭum nampaṉvāḻkkai ētaṭā? Tāykaḷpāl utikkumiccai taviravēṇṭi nāṭiṉāl Nōykaḷpaṭṭu uḻalvatētu nōkkippārum ummuḷē. 497 |
| நம்பன் - பரமேசுவரன் | Nampaṉ - paramēcuvaraṉ |
| உப்பைநீக்கில் அழுகிப்போகும் ஊற்றையாகும் உடலில்நீ அப்பியாசை கொண்டிருக்கல் ஆகுமோசொல் அறிவிலா தப்பிலிப்பொய் மானம்கெட்ட தடியனாகும் மனமேகேள்; ஒப்பிலாசெஞ் சடையனாகும் ஒருவன்பாதம் உண்மையே. 498 |
Uppainīkkil aḻukippōkum ūṟṟaiyākum uṭalilnī Appiyācai koṇṭirukkal ākumōcol aṟivilā Tappilippoy māṉamkeṭṭa taṭiyaṉākum maṉamēkēḷ; Oppilāceñ caṭaiyaṉākum oruvaṉpātam uṇmaiyē. 498 |
| பிறப்பதெல்லாம் இறப்பதுண்டு பேதைமக்கள் தெரிகிலாது இறப்பதில்லை எனமகிழ்ந்து எங்கள்உங்கள் சொத்தெனக் குறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்டகோலம் என்னவோ? நிறப்பும்பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே. 499 |
Piṟappatellām iṟappatuṇṭu pētaimakkaḷ terikilātu Iṟappatillai eṉamakiḻntu eṅkaḷuṅkaḷ cotteṉak Kuṟippuppēcit tirivaraṉṟik koṇṭakōlam eṉṉavō? Niṟappumponti aḻintapōtu nēcamāmō īcaṉē. 499 |
| சுட்டெரித்த சாந்துபூசும் சுந்தரப்பெண் மதிமுகத் திட்டநெட்டு எழுந்தறியாது ஏங்கிநோக்கு மதவலீர் பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்டம் அறியிரோ? கட்டவிழ்த்துப் பிரமன்பார்க்கில் கதிஉமக்கும் ஏதுகாண்? 500 |
Cuṭṭeritta cāntupūcum cuntarappeṇ matimukat Tiṭṭaneṭṭu eḻuntaṟiyātu ēṅkinōkku matavalīr Peṭṭakattup pāmpuṟaṅkum pittalāṭṭam aṟiyirō? Kaṭṭaviḻttup piramaṉpārkkil katiumakkum ētukāṇ? 500 |
| வேதம்ஓது வேலையோ வீணதாகும் பாரிலே! காதகாத தூரம்ஓடிக் காதல்பூசை வேணுமோ? ஆதிநாதன் வெண்ணெய் உண்டஅவனிருக்க நம்முளே? கோதுபூசை வேதம்ஏது குறித்துப்பாரும் உம்முளே. 501 |
Vētamōtu vēlaiyō vīṇatākum pārilē! Kātakāta tūramōṭik kātalpūcai vēṇumō? Ātinātaṉ veṇṇey uṇṭaavaṉirukka nammuḷē? Kōtupūcai vētamētu kuṟittuppārum ummuḷē. 501 |
| பரம்இலாதது எவ்விடம்? பரம்இருப்பது எவ்விடம்? அறம்இலாத பாவிகட்குப் பரம்இலைஅது உண்மையே; கரம்இருந்தும் பொருளிருந்தும் அருளிலாத போதது பரம்இலாத சூனியமாம் பாழ்நரகம் ஆகுமே. 502 |
Paramilātatu evviṭam? paramiruppatu evviṭam? Aṟamilāta pāvikaṭkup paramilaiatu uṇmaiyē; Karamiruntum poruḷiruntum aruḷilāta pōtatu Paramilāta cūṉiyamām pāḻnarakam ākumē. 502 |
| மாதர்தோள் சேராததேவர் மானிலத்தில் இல்லையே! மாதர்தோள் புணர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே, மாதராகும் சத்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால் மாதராகும் நீலிகங்கை மகிழ்துகொண்டான் ஈசனே. 503 |
Mātartōḷ cērātatēvar māṉilattil illaiyē! Mātartōḷ puṇarntapōtu maṉitarvāḻvu ciṟakkumē, Mātarākum cattiyoṉṟu māṭṭikkoṇṭa tātalāl Mātarākum nīlikaṅkai makiḻtukoṇṭāṉ īcaṉē. 503 |
| நீலிகங்கை - நீல நிறம் உடைய கங்கை. | Nīlikaṅkai - nīla niṟam uṭaiya kaṅkai. |
| சித்தர்என்றும் சிறியர்என்றும் அறியொணாத சீவர்காள்! சித்தர்இங்கு இருந்தபோது பித்தர்என்று எண்ணுவீர்! சித்தர்இங்கு இருந்தும் என்ன பித்தன்நாட்டிருப் பாரோ? அத்தன்நாடும் இந்தநாடும் அவர்களுக்கெலா மொன்றே. 504 |
Cittareṉṟum ciṟiyareṉṟum aṟiyoṇāta cīvarkāḷ! Cittariṅku iruntapōtu pittareṉṟu eṇṇuvīr! Cittariṅku iruntum eṉṉa pittaṉnāṭṭirup pārō? Attaṉnāṭum intanāṭum avarkaḷukkelā moṉṟē. 504 |
| மாந்தர்வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லீரேல் வேந்தன்ஆகி மன்றுளாடும் விமலன்பாதம் காணலாம் கூந்தலம்மை கோணல்ஒன்றும் குறிக்கொணாதி துண்மையே. மன்று - மன்றம்; சபை; விமலன் - மலமற்றவன் 505 |
Māntarvāḻvu maṇṇilē maṟantapōtu viṇṇilē Cāntaṉāṉa āviyaic carippaṭutta vallīrēl Vēntaṉāki maṉṟuḷāṭum vimalaṉpātam kāṇalām Kūntalammai kōṇaloṉṟum kuṟikkoṇāti tuṇmaiyē. Maṉṟu - maṉṟam; capai; vimalaṉ - malamaṟṟavaṉ 505 |
| சருகு - உதிர்ந்த இலை. | Caruku - utirnta ilai. |
| சருகருத்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்! சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே; வருவிருந்தோடு உண்டுஉடுத்தி வளர்மனை சுகிப்பிரேல் வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே. 506 |
Carukarutti nīrkuṭittuc cāralvāḻ tavacikāḷ! Carukaruntil tēkaṅkuṉṟic cañcalam uṇṭākumē; Varuviruntōṭu uṇṭuuṭutti vaḷarmaṉai cukippirēl Varuviruntōṉ īcaṉāki vāḻvaḷikkum civāyamē. 506 |
| காடுமேடு குன்றுபள்ளம் கானின்ஆறு அகற்றியும் நாடுதேசம் விட்டலைவர் நாதன்பாதம் காண்பரோ? கூடுவிட்டு அகன்றுன்ஆவி கூத்தனூர்க்கே நோக்கலால் வீடுபெற்ற அரன்பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே. 507 |
Kāṭumēṭu kuṉṟupaḷḷam kāṉiṉāṟu akaṟṟiyum Nāṭutēcam viṭṭalaivar nātaṉpātam kāṇparō? Kūṭuviṭṭu akaṉṟuṉāvi kūttaṉūrkkē nōkkalāl Vīṭupeṟṟa araṉpatattil vīṟṟiruppar illaiyē. 507 |
| கட்டையால்செய் தேவரும் கல்லினால்செய் தேவரும் மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும் சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும் வெட்டவெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே. 508 |
Kaṭṭaiyālcey tēvarum kalliṉālcey tēvarum Maṭṭaiyālcey tēvarum mañcaḷālcey tēvarum Caṭṭaiyālcey tēvarum cāṇiyālcey tēvarum Veṭṭaveḷiya taṉṟimaṟṟu vēṟuteyvam illaiyē. 508 |
| தங்கள்தேகம் நோய்ப்பெறின் தனைப்பிடாரி கோயிலில் பொங்கல்வைத்து ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட நங்கச்சொல்லு நலிமிகுந்து நாளும்தேய்ந்து மூஞ்சூராய் உங்கள்குலத்துத் தெய்வம்உம்மை உருக்குலைப்ப தில்லையே. 509 |
Taṅkaḷtēkam nōyppeṟiṉ taṉaippiṭāri kōyilil Poṅkalvaittu āṭukōḻip pūcaippaliyai iṭṭiṭa Naṅkaccollu nalimikuntu nāḷumtēyntu mūñcūrāy Uṅkaḷkulattut teyvamummai urukkulaippa tillaiyē. 509 |
| ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை மோசம்செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர் பூசையோடு நேமநிட்டை பூரிக்கச்செய் பாதகர் காசினியில் எழுநரகைக் காத்திருப்பது உண்மையே. 510 |
Ācaikoṇṭu aṉutiṉamum aṉṉiyar poruḷiṉai Mōcamceytu apakarikka muṟṟilum alaipavar Pūcaiyōṭu nēmaniṭṭai pūrikkaccey pātakar Kāciṉiyil eḻunarakaik kāttiruppatu uṇmaiyē. 510 |
| நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம் வாசமோடு அணிந்துநெற்றி மைதிலகம் இட்டுமே மோசம்பொய் புனைசுருட்டு முற்றிலும்செய் மூடர்காள் வேசரிகளம் புரண்டவெண் ணீறாகும் மேனியே. 511 |
Nēcamuṟṟup pūcaiceytu nīṟupūcic cantaṉam Vācamōṭu aṇintuneṟṟi maitilakam iṭṭumē Mōcampoy puṉaicuruṭṭu muṟṟilumcey mūṭarkāḷ Vēcarikaḷam puraṇṭaveṇ ṇīṟākum mēṉiyē. 511 |
| வாதம்செய்வேன் வெள்ளியும் பொன்மாற்றுயர்ந்த தங்கமும் போதவே குருமுடிச்சுப் பொன்பணங்கள் தரவெனச் சாதனைசெய் தெத்திச்சொத்து தந்ததைக்க வர்ந்ததுமே காததூரம் ஓடிச்செல்வர் காண்பதும் அருமையே. 512 |
Vātamceyvēṉ veḷḷiyum poṉmāṟṟuyarnta taṅkamum Pōtavē kurumuṭiccup poṉpaṇaṅkaḷ taraveṉac Cātaṉaicey tetticcottu tantataikka varntatumē Kātatūram ōṭiccelvar kāṇpatum arumaiyē. 512 |
| யோகசாலை காட்டுவார் உயரவும் எழும்புவார் வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார் மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின் பேயது பிடித்தவர்போல் பேருலகில் சாவரே. 513 |
Yōkacālai kāṭṭuvār uyaravum eḻumpuvār Vēkamāka aṭṭacittu vittaikaṟṟu neṭṭuvār Mōkamkoṇṭu mātariṉ mūttirappai cikkippiṉ Pēyatu piṭittavarpōl pērulakil cāvarē. 513 |
| காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட மாயவித்தை செய்வதுஎங்கு மடிப்புமோசம் செய்பவர் நேரமாகக் கஞ்சாஅடித்து நேர்அபினையைத் தின்பதால் நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே. 514 |
Kāyakāyam uṇpatākak kaṇṭavar matittiṭa Māyavittai ceyvatueṅku maṭippumōcam ceypavar Nēramākak kañcāaṭittu nērapiṉaiyait tiṉpatāl Nāyatāka nakkimukki nāṭṭiṉil alaivarē. 514 |
| நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம்என்று ஊரினில் பறைஅடித்து ஊதாரியாய்த் திரிபவர் சீரினில் உனக்குஞான சித்திசெய்வேன் பாரென நேரினில் பிறர்பொருளை நீளவும்கைப் பற்றுவார். 515 |
Nīriṉil kumiḻiotta nilaiyilāta kāyameṉṟu Ūriṉil paṟaiaṭittu ūtāriyāyt tiripavar Cīriṉil uṉakkuñāṉa citticeyvēṉ pāreṉa Nēriṉil piṟarporuḷai nīḷavumkaip paṟṟuvār. 515 |
| காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம் தாவுருத்தி ராட்சம்யோக தண்டுகொண்ட மாடுகள் தேவியை அலையவிட்டுத் தேசம்எங்கும் சுற்றியே பாவியென்ன வீடெலாம் பருக்கைகேட்டு அலைவரை. 516 |
Kāviyum caṭaimuṭi kamaṇṭalaṅkaḷ ācaṉam Tāvurutti rāṭcamyōka taṇṭukoṇṭa māṭukaḷ Tēviyai alaiyaviṭṭut tēcameṅkum cuṟṟiyē Pāviyeṉṉa vīṭelām parukkaikēṭṭu alaivarai. 516 |
| முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனக் சத்தியங்கள் சொல்லிஎங்கும் சாமிவேடம் பூண்டவர் நித்தியம் வயிறுவளர்க்க நீதிஞானம் பேசியே பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரேல். 517 |
Mutticērac cittiiṅku muṉṉaḷippēṉ pāreṉak Cattiyaṅkaḷ collieṅkum cāmivēṭam pūṇṭavar Nittiyam vayiṟuvaḷarkka nītiñāṉam pēciyē Pattiyāyp paṇampaṟittup pāḻnarakil vīḻvarēl. 517 |
| செம்மைசேர் மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர் கொம்மையற்ற கிளையில்பாத குறடுசெய்து அழிக்கிறீர் நும்முளே விளங்குவோனை நாடிநோக்க வல்லீரேல் இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே. 518 |
Cemmaicēr marattilē cilaitalaikaḷ ceykiṟīr Kommaiyaṟṟa kiḷaiyilpāta kuṟaṭuceytu aḻikkiṟīr Nummuḷē viḷaṅkuvōṉai nāṭinōkka vallīrēl Immalamum mummalamum emmalamum allavē. 518 |
| எத்திசைஎங்கும் எங்கும்ஓடி எண்ணிலாத நதிகளில் சுற்றியும் தலைமுழுகச் சுத்தஞானி யாவரோ? பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள்; முத்திஇன்றி பாழ்நரகில் மூழ்கிநொந்து அலைவரே. 519 |
Etticaieṅkum eṅkumōṭi eṇṇilāta natikaḷil Cuṟṟiyum talaimuḻukac cuttañāṉi yāvarō? Pattiyōṭu araṉpatam paṇintiṭāta pāvikāḷ; Muttiiṉṟi pāḻnarakil mūḻkinontu alaivarē. 519 |
| கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில் வல்லதேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடில் தொல்லைஅற் றிடம்பெரும் சுகந்தருமோ சொல்லுவீர்? இல்லைஇல்லை இல்லைஇல்லை ஈசன்ஆணை இல்லையே. 520 |
Kalluveḷḷi cempirumpu kāyntiṭum tarākkaḷil Vallatēva rūpapētam aṅkamaittup pōṟṟiṭil Tollaiaṟ ṟiṭamperum cukantarumō colluvīr? Illaiillai illaiillai īcaṉāṇai illaiyē. 520 |
| இச்சகம் சனித்ததுவும் ஈசனைஐந்து எழுத்திலே மெச்சவம் சராசரங்கள் மேவும்ஐந்து எழுத்திலே உச்சிதப் பலஉயிர்கள் ஓங்கல்அஞ் செழுத்திலே நிச்சயமெய்ஞ் ஞானபோதம் நிற்கும்ஐந் தெழுத்திலே. 521 |
Iccakam caṉittatuvum īcaṉaiaintu eḻuttilē Meccavam carācaraṅkaḷ mēvumaintu eḻuttilē Uccitap palauyirkaḷ ōṅkalañ ceḻuttilē Niccayameyñ ñāṉapōtam niṟkumain teḻuttilē. 521 |
| சாத்திரங்கள் பார்த்துப்பார்த்துத் தான்குருடு ஆவதால் நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்காள் பாத்திரம் அறிந்துமோன பக்திசெய்ய வல்லீரேல் சூத்திரப்படி யாவரும் சுத்தர்ஆவர் அங்ஙனே. 522 |
Cāttiraṅkaḷ pārttuppārttut tāṉkuruṭu āvatāl Nēttiraṅkeṭa veyyōṉai nērtuticey mūṭarkāḷ Pāttiram aṟintumōṉa pakticeyya vallīrēl Cūttirappaṭi yāvarum cuttarāvar aṅṅaṉē. 522 |
| மனவுறுதி தானிலாத மட்டிப்பிணை மாடுகள் சினமுறப் பிறர்பொருளைச் சேகரித்து வைத்ததைத் தினந்தினம் ஊர்எங்கும் சுற்றிதிண்டிக்கே அலைபவர் இனமதில் பலரும்வையும் இன்பம் அற்ற பாவிகள். 523 |
Maṉavuṟuti tāṉilāta maṭṭippiṇai māṭukaḷ Ciṉamuṟap piṟarporuḷaic cēkarittu vaittatait Tiṉantiṉam ūreṅkum cuṟṟitiṇṭikkē alaipavar Iṉamatil palarumvaiyum iṉpam aṟṟa pāvikaḷ. 523 |
| சிவாயவசி என்னவும் செபிக்கஇச் சகம்எலாம் சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம் சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம் சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே. |
Civāyavaci eṉṉavum cepikkaic cakamelām Civāyavaci eṉṉavum cepikkayāvum cittiyām Civāyavaci eṉṉavum cepikkavāṉam āḷalām Civāyavaci eṉpatē irutalaittī ākumē. |